Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

சனி, 8 அக்டோபர், 2011

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் உற்சவம்

பாண்டிருப்பு திரௌபதை
அம்மன் உற்சவம்

பாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் சனிக்கிழமை நிறைவடைகின்றது.
அன்றைய தினம் பகல் பாற்பள்ளயம் தருமர் முடிசூட்டு வைபவம் வழிபாடு மற்றும் இரவு அம்மனின் ஊர்வலம் மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தை வந்தடைதல் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறும்.
கடந்த செவ்வாய்க்கிழமை மாலை விசேட ஆராதனையுடன் திருக்கதவு திறத்தல், கடலுக்குச் சென்று ஆராதனை செய்து ஊர் ஆரவாரத்துடன் ஊர்வலம் வருதல், கொடியேற்றத்துடன் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது.
எதிர்வரும் புதன்கிழமை பகல் வாள் மாற்றுதல், பஞ்சபாண்டவர் திரௌபதாதேவி சகிதம் வனவாசம் செல்லல், அஞ்ஞாதவாதம் செய்யும் நிகழ்வு இடம்பெறும். மறுநாள் அருச்சுனன் பாசுபதம் பெறத்தவம் செய்தல், அரவானைக் களப்பலியிடல், பிற்பகல் கடல் குளித்தல், மஞ்சள் குளித்தல் தீ மிதித்தல் நிகழ்வுகளும் இடம்பெறும்.
மகோற்சவம் ஆரம்பமானது முதல் தினமும் அதிகாலை மாலை விசேட பூசை மற்றும் மகாபாரத பாராயணமும் இடம்பெற்று வருகிறது.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011



இராஜபுரம் ஸ்ரீ மகா விஷ்னு ஆலய வருடாந்த உற்சவம்

மட்டக்களப்பு,செங்கலடி பதுளை வீதியில் அமைந்துள்ள இராஜபுரம் ஸ்ரீ மகா விஷ்னு ஆலய வருடாந்த உற்சவம் 19.08.2011 ஆரம்பமாகி 24.08.2011 முடிவுறவுள்ளது.

திருவிழா காலத்தில் சிறப்புப் பூஜைகளும் மற்றும் இரவு நேரத்தில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது.

22 ஆம் திகதி இரவு ஸ்ரீ மகா விஷ்னு வீதியுலா வருதல் இடம்பெறும். மறுநாள் திர்த்தோற்சவம் இடம்பெற்று 24 ஆம் திகதி அன்னதான நிகழ்வும் இடம்பெற்று வருடாந்த உற்சவம் இனிதே நிறைவு பெறும்.

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

யார் இந்த மர்ம மனிதர்கள்??


யார் இந்த மர்ம மனிதர்கள்??

இலங்கையில் பல பாகங்களிலுமுள்ள பிரதேசங்களில் குறிப்பாக மலையகம் மற்றும் கிழக்கு பகுதிகளில் மர்ம மனிதன் பீதி ஏற்பட்டு நாட்டு மக்கள் அச்ச உணர்வுடன் வீட்டிற்குள்ளே இரவு நேரங்களில் நித்திரையில்லாம் இருக்கின்றனர். இந்த மர்ம மனிதர்கள் உண்மையில் இருக்கின்றார்களா அல்லது பொய் வதந்தியா??

மலையகத்தில் பல பகுதிகளில் கொலை செய்துவிட்டு தப்பிச் செல்வதாகவும் மற்றும் இளம் பெண்கள் அல்லது வயது வந்த பெண்களை பயமுர்த்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் கதவுகளைத் தட்டி விட்டு சென்றதாகவும் தப்பிச்சென்றதாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்திருந்தனர்.

மலையகத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று மர்ம மனிதனை துரத்திச் சென்ற போது இளைஞர் ஒருவர் மின்சார வேளியில் சிக்குன்டு உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றுள்ளது. பின்னர் மர்ம மனிதர்கள் என்று கூறி சென்றவர்கள் பிரதேச வாசிகளால் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாணத்திலிருந்து வெளிவந்த செய்தி ஒன்று சிலர் பேசிக்கொள்கின்றார்கள் ஏதோ புதையல் எடுக்கபதற்காக பெண்களின் இரத்தத்தை உறுஞ்சி சேகரிப்பதற்காக இந்த மர்ம மனிதர்கள் வருவதாகவும் பேசிக்கொள்கின்றார்கள்.அதேபோல் இறக்காமத்தில் ஒரு வதந்தி ஏற்பட்டிருக்கின்றது மரத்திற்கு மரம் தாவுகின்றானாம் மர்ம மனிதன் இது போன்ற வதந்திகள் பல பிரதேசங்களிலும் கிராமங்களிலும் உருவாகிக்கொண்டே இருக்கின்றது. இதனால் தற்போது நடைபெற்று வரும் .பொ..உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்தாமல் இவ்வாறான வதந்திகளை கேட்டு அச்சத்தில் இருக்கின்றார்கள்.

மரத்திற்கு மரம் தாவுகின்றான் மர்ம மனிதன் என்று இறக்காம மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ள வேளையில் ஒரு வேளை அது குரங்குகளாகவும் இருக்கலாம் அல்லவா? இரவு நேரத்தில் பன்றி ஓடும் சத்தத்தைக் கேட்டுவிட்டுக்கூட மர்ம மனிதன் என்று பிரதேச மக்களையோ அல்லது கிராம மக்களையோ ஏமாற்றிவிடலாம் அல்லவா?

இரவு நேரத்தில் ஒரு அவசர தேவைக்குக் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் இரவு நேரத்தில் காவல் காப்பதற்காக வயலுக்கு சென்றாலும் மர்ம மனிதர்கள் என்று அடித்து கொலை செய்யும் அளவுக்கு வந்துள்ளது. மலையக மக்கள் இருக்கும் பீதியில் யார் இரவு நேரத்தில் சென்றாலும் அடித்துக்கொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்க ஒரு தீர்வு கிடைக்குமா??? பாதுகாப்புக்காக பொலிஸார் இருக்கின்றார்களா????

நாம் நாட்டு மக்களே முக்கிய அறிவித்தல் பொய் வதந்திகளை பரப்பாதீர்கள். இதனால் பல உயிரிழப்புகளும் ஏற்படலாம்.

புதன், 3 ஆகஸ்ட், 2011

தங்கத்தேரில் சூரியன்………….


தங்கத்தேரில் சூரியன்………….
1998ம் ஆண்டின் ஜூலை மாதத்தின் 25ம் திகதிஇ பண்பலை வழியே உலக தமிழ் வானொலிகளின் மத்தியில் விழிப்பை ஏற்படுத்திய அதேவேளை வானொலிகளின் வழமையான கலாசார யுகத்திலிருந்து மாறுபட்டு நேயர்களை நண்பர்களாக்கி உறவாடும் உணர்வை ஏற்படுத்திய வானலை முதல்வன் சூரியன், சூரிய குழந்தையாய் இலங்கையின் மிக உயர்ந்த கட்டிடமான உலக வர்த்தக மையத்தின் 35ம் மாடியில் உதித்த நாள் ……..

1998 இலிருந்து 2011 என்ற 13 ஆண்டுகளில் வானலை வழியே முதல்வனாகஇ வேறெந்த வானொலியாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாத முதல்வன் என்ற ஸ்தானத்தில் அன்பான நேயர்களை தன் உறவுகளாக்கி தன் ஏற்றமிகு பாதையின் ஏணிப்படிளாய் இணைத்துக்கொண்ட வானலை அரசன் சூரியனுக்கு இன்று வயது 13.

திறமைகள் பல கொண்ட அறிவிப்பாளர்கள் பலரை உருவாக்கி அவர்களின் திறமையால் நல்ல பல நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி சாதனை கண்ட வானொலி என்றால் அது நமது சூரியனையே சாரும்.

வானொலி என்பது வெறுமனே பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமன்றி, அதனை சார்ந்த சமூகத்திற்கு அவசியமான இக்கட்டான காலகட்டத்தில் கைகொடுத்து அந்த சமூகத்துடன் ஊடகம் ஒன்று இணைந்திருக்க வேண்டும் என்பதையும் ஒரு பொறுப்புமிக்க ஊடகம் என்ற ரீதியிலும், சூரியன் வானொலி அண்மைய அசாதாரண இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து கைகொடுத்திருந்தது.

சமயம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் முன்னுரிமை வழங்கும் சூரியன், எமது கலை, கலாசார, விளையாட்டு என்ற துறைகளில் தம்மாலான பங்களிப்பை தமது உறவுகளுக்கு வழங்கி வருகின்றது. குறிப்பாக எந்த விளையாட்டாக இருந்தாலும் தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும், வேகமாகவும் நேரத்திற்கேற்ப வழங்கி தனக்கென்று தனித்துவ பாதையை சூரியன் வகுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இலங்கையின் வானொலி வரலாற்றிலே எம்மவர் பரந்து வாழும் எமது நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களுடன் உறவாடி நேயர்களுடன் நெருக்கத்தை உண்டாக்கி அசைக்க முடியாத சொந்தங்களை கொண்ட ஒரே வானொலி நமது சூரியன், சூரியனின் இத்தகைய பயணங்களை பின்தொடர்ந்து ஏனைய வானொலிகளும் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தன.

இவற்றுடன் மட்டுமல்லாது சூரியன் வானொலியில் எப்போதுமே காலத்திற்கேற்ப புதுமைகள் புகுத்தப்படுவது வழமை.

நிகழ்ச்சிகளாக இருந்தாலும், வானொலியின் நிலைய குறியிசைகளாக இருந்தாலும் காலத்திற்கேற்ப மக்கள் ரசனைக்கேற்ப தயாரித்து, அதனை வடிவமைத்து அதிக நேயர்களின் பாராட்டுக்களை பெறுவது சூரியனின் தயாரிப்புக்களின் பெருமை.

அவ்வாறே அண்மைய சூரியனின் தயாரிப்பான “மழைவிழியின்” பாடல், உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான “ஓடு ஓடு ஓடிப்போடா” பாடல்இ13 ஆம் ஆண்டு சிறப்புப்பாடலான கண்டோம் கண்டோம் பாடல் போன்றன இன்று பல உள்ளங்கள் விரும்பி கேட்கும் அளவுக்கு பிரபல்யமாகி உள்ளன.

புதிய பாடல் ஒன்று அறிமுகமானவுடனேயே முந்திக்கொண்டு நமது சூரியனில் கேட்கமுடியும்.

24 மணித்தியாலங்களும் புதுமைகளை புகுத்த வேண்டும் என்று நினைக்கின்ற இளைஞர் பட்டாளத்தை சிறப்பாக வழிநடத்துகிறார் ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. ரெய்னோ சில்வா அவர்கள். இவரின் தூர நோக்குமிக்க சிந்தனையிலும் பண்பான குணத்திலும், நிறுவனம் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை இலங்கையின் முதற்தர வானொலி வலையமைப்பாக கொண்டுசெல்வதற்கும் தன்னுடைய அர்ப்பணிப்பான சேவையில் இன்று நிறுவனத்தின் உரிமையாளராகவும் அதன் தலைவராகவும் உயர்ந்து நிற்கின்றார் திரு. ரெய்னோ சில்வா அவர்கள்.

சகல துறைகளிலும் சிறப்பாக பிரகாசிக்கும் சூரியன் வானொலியின் தலைமையாளர் என்ற கௌரவத்துடன் தன்னுடைய சிறந்த அர்ப்பணிப்புடனான சேவையினூடாக சூரியன் வானொலியின் தலைவரும் சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான திரு.எஸ் நவநீதன் அவர்கள் சூரியக்குடும்பத்தின் ஆத்மார்த்தமான ஆதரவுடன் சிறப்பாக சூரிய குடும்பத்தை வழிநடத்துகிறார்

இவர்களுடன் வானொலித்துறையிலும்; கலைத்துறையிலும் அனுபவம் கொண்டவரும் சிரேஷ்ட ஒலி ஒளிபரப்பாளரும் பிரபல நடிகருமான திரு. சி நடராஜசிவம் அவர்கள் இப்போது ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் அவர்களுக்கும், சூரியன் வானொலிக்குமான சிரேஷ்ட ஆலோசகராகவும் திகழ்கிறார்;.

இவர்களுடன் சூரியன் வானொலியில் கிழமை நாட்களில் காலை 10 மணிமுதல் இசைச்சமர் நிகழ்ச்சியை வழங்குகின்ற திரு. சந்திரமோகன் மற்றும்; மாலை நேரங்களில் கும்மாளம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திரு.பரணீதரன் ஆகியோர் நிகழ்ச்சி முகாமையாளர்களாக பொறுப்பேற்றுள்ளார்கள்.



இவர்களுடன் சூரியன் நிகழ்ச்சிகளிலும் ஏனைய செயற்பாடுகளிலும் ஒவ்வொரு அறிவிப்பாளர்களின் பங்களிப்பும் சிறப்பாக காணப்படுகிறது. சிரேஷ்ட அறிவிப்பாளர்களாக ரிம்ஷாட், டிலான், நிஷாந்தன், லங்கேஷ், ஷைலி, மேனகா, மற்றும் சஹானா, காயத்ரி, தரணி, பிருந்தகன், வர்ஷி போன்றவர்களின் திறமையும் பாராட்டப்பட வேண்டியவை.

இவர்களுடன் சிரேஷ்ட பகுதி நேர அறிவிப்பாளர்களாக வானொலி துறையில் அனுபவம் கொண்ட வியாசாஇமுகுந்தன் ஆகியோருடன் மணிவண்ணன், மற்றும் சுமித்; ஆகியோh சிறப்பாக கடமை புரிகின்றனர்.

சூரியனின் நிலையக்குறியிசைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு இசை வழங்கும் பணியினை மிகவும் சிறப்பாக பிரனீவ் மேற்கொண்டுவருவதோடு,
சூரியனின் இசைக்களஞ்சியத்தில் பெர்லிங்டனும் அலுவலக பணிகளை திருமதி. பிறிஸ்கா மஹேஸ்வரன். ஆகியோர் மேற்கொண்டுவருகின்றனர்.

சூரியனின் நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெறுகின்றதோ அதே போன்றுதான் மக்களுக்கு தேவையானவற்றை தேவையானநேரத்தில் சுடச்சுட செய்திகளாகவும் உலக விடயங்களையும் நாட்டின் உடனடி நிகழ்வுகளையும் வேகமாக முந்திக்கொண்டு சூரியன் செய்திகளாக வழங்குவதில் சூரியன் செய்திப் பிரிவினர் என்று;ம் முன்னிலையில் திகழ்கின்றனர். சூரியன் செய்திப் பிரிவின் முகாமையாளராக ஊடகத்துறையில் அனுபவம் கொண்ட திறமையான திரு. எம். இந்திரஜித் அவர்களும் ஊடகத்துறையில் அனுபவம் கொண்ட வி எஸ் சிகாமணியும்இ சதீப்குமார், விக்னேஷ்வரன், நாகவாணிராஜா, கிருஷ்ணகுமார் ஆகியோரும் இவர்களுடன்; தமது சேவைகளை சிறப்பாக வழங்குகின்றார்.

சூரியனின் வெளிக்கள நிகழ்ச்சிகளை திட்டமிட்டு அதனை சிறப்பாக வழிநடத்தி பல சாதனைகளை படைத்து இன்று வரைக்கும் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவும் சூரியனின் வளர்ச்சியில் கைகோர்த்திருக்கிறார்கள். இதனடிப்படையில் சூரியனின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவில் அனுபவம்கொண்டவரும் கள்ள மனத்தின் கோடியில் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் திரு. அஷ்ரப் அவர்கள் திட்டமிடல் விரிவாக்கல் முகாமையாளராக சிறப்பாக வழி நடாத்த, திட்டமிடல் விரிவாக்கல் சிரேஷ்ட அதிகாரி அஜித்குமாருடன் கார்த்திக் ஆகியோரும் தங்களது வெளிக்கள நிகழ்ச்சிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

1998ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் திகதி இலங்கையின் வானொலி வரலாற்றில் புரட்சிகரமான வானொலியாய் தடம்பதித்த சூரியன் வானொலி;, இன்றுவரை பல்வேறு தடைகளையும்இசவால்களையும் எதிர்கொண்டு சூரியக்குடும்பத்தின் முழு முயற்சியுடனும் ஒற்றுமை உணர்வுடனும் செயற்பட்டு 13 ஆண்டுகளாக வீர நடைபோட்டு இன்றும் முதற்தர வானொலியாக திகழ்கிறது. புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ள சூரியன் பல புதிய நிகழ்ச்சிகளையும் பல மாற்றங்களையும் செய்யவுள்ளதாகவும் அறிந்தோம்.
எந்த வானொலியும் எட்டமுடியாத உயர்ந்த நிலையில் இருக்கும் சூரியன் வானொலிக்கு எமது வாழத்;துகளை தெரிவித்துக்கொள்கிறோம்


திங்கள், 16 மே, 2011



கல்முனை உவெஸ்லி பாடசாலைக்கு
பெருமை சேர்த்த சஞ்ஜீவநாத்

சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார்
ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயிலும் நடராஜா சஞ்ஜீவநாத் என்ற மாணவன் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருக்கோவிலைச் சேர்ந்த இம்மாணவன் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சூரிய சக்தியில் இயங்கும் இம் மோட்டார் கார் கண்டு பிடித்ததன் மூலம் தமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் வீ.பிரபாகரன் தெரிவித்தார்

சூழலில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் காரினை தயாரிக்க 22,000 ரூபா செலவு மட்டுமே ஏற்பட்டுள்ளது.இதில் இரண்டு பேர் செல்ல முடியும்.
அத்தோடு அங்கவீனமானவர்களுக்கும் சிறுவியாபாரத்தில் ஈடுபடுவோருக்கும் மிகவும் பொருத்தமானதாகவும் பாதுகாப்பான வாகனமாகவும் உள்ளதாகவும் மணிக்கு 25 கிலோ மீற்றர் வேகத்தில் இது பயணிக்கக் கூடியதாகவும் உள்ளது.
வெகு விரைவில் நீரிலும் நிலத்திலும் செல்லக் கூடிய வாகனம் ஒன்றை தயாரிக்கவு ள்ளதாகவும் இந்த மாணவன் சஞ்ஜீவநாத் தெரிவித்தார்

செவ்வாய், 10 மே, 2011

சக்தி TV அகில இலங்கை நடன நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மாணவிகள் முதலாம் இடம்

சக்தி தொலைக்காட்சி அகில இலங்கை ரீதியில் நடத்திய நடன நிகழ்ச்சியில் முதலாம் இடத்தைப்பெற்ற திருமதி சுபத்திரா கிருபாகரனின் பரதகலாலயாவின் மாணவ மாணவிகளுக்கு இன்று மட்டக்களப்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பிலிருந்து இன்று காலையில் மட்டக்களப்பு திரும்பிய இவர்களுக்கு தொடருந்து நிலையத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தொடரூந்து நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், இளைஞர் சேவைகள் மன்ற பிரதிநிதி மதன் ஆகியோரும் பொதுமக்களும் இந்த வரவேற்பில் கலந்து கொண்டனர்.
பரதகலாலய அதிபர் திருமதி சுபத்திரா கிருபாகரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்....

இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு தொடரூந்து நிலையத்திலிருந்து மட்டக்களப்பு எல்லை வீதியில் உள்ள சிந்தாமணி பிள்ளையார் ஆலயம் வரை இவர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன.
முதலாம் இடத்தைப்பெற்ற பரதகலாலய நாட்டிய குழுவினருக்கு 4இலட்சம் ரூபா பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.

ஞாயிறு, 27 மார்ச், 2011

சாதாரண தரப் பரீட்சை மாவட்டத்தில் முதலிடம்

க.பொ.த.சாதாரண தரப்பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவி செல்வி குகேந்திரன் நுஹந்தமி சாதனை படைத்துள்ளார்.
கடந்த வருடம் நடந்த சாதாரணப் பரீட்சையில் செல்வி நுஹந்தமி 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதோடு மாவட்டத்தில் முதலாம் இடத்திலும் சித்தியடைந்துள்ளார்.
இதே பாடசாலையைச் சேர்ந்த
செல்வி கே.மயூரிகா மாவட்டத்தில் மூன்றாம் நிலையில் சித்தியடைந்துள்ளார்.
இம்முறை க.பொ.த.சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 12 பேர் 9 ஏ சித்திகளையும் 7 பேர் 8 ஏ சித்திகளையும் பெற்று பாடசாலை சாதனை ஒன்றை படைத்துள்ளதாக அதிபர் அருட்சகோதரர் எம்.ஸ்ரீபன் மத்தியூ தெரிவித்தார்.