Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

திங்கள், 16 மே, 2011



கல்முனை உவெஸ்லி பாடசாலைக்கு
பெருமை சேர்த்த சஞ்ஜீவநாத்

சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார்
ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி பயிலும் நடராஜா சஞ்ஜீவநாத் என்ற மாணவன் சூரிய சக்தியில் இயங்கும் மோட்டார் கார் ஒன்றைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
திருக்கோவிலைச் சேர்ந்த இம்மாணவன் புதிய கண்டுபிடிப்புகளை கண்டு பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.சுற்றுப்புறச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம் சூரிய சக்தியில் இயங்கும் இம் மோட்டார் கார் கண்டு பிடித்ததன் மூலம் தமது கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக பாடசாலையின் அதிபர் வீ.பிரபாகரன் தெரிவித்தார்

சூழலில் கிடைக்கும் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த மோட்டார் காரினை தயாரிக்க 22,000 ரூபா செலவு மட்டுமே ஏற்பட்டுள்ளது.இதில் இரண்டு பேர் செல்ல முடியும்.
அத்தோடு அங்கவீனமானவர்களுக்கும் சிறுவியாபாரத்தில் ஈடுபடுவோருக்கும் மிகவும் பொருத்தமானதாகவும் பாதுகாப்பான வாகனமாகவும் உள்ளதாகவும் மணிக்கு 25 கிலோ மீற்றர் வேகத்தில் இது பயணிக்கக் கூடியதாகவும் உள்ளது.
வெகு விரைவில் நீரிலும் நிலத்திலும் செல்லக் கூடிய வாகனம் ஒன்றை தயாரிக்கவு ள்ளதாகவும் இந்த மாணவன் சஞ்ஜீவநாத் தெரிவித்தார்

செவ்வாய், 10 மே, 2011

சக்தி TV அகில இலங்கை நடன நிகழ்ச்சியில் மட்டக்களப்பு மாணவிகள் முதலாம் இடம்

சக்தி தொலைக்காட்சி அகில இலங்கை ரீதியில் நடத்திய நடன நிகழ்ச்சியில் முதலாம் இடத்தைப்பெற்ற திருமதி சுபத்திரா கிருபாகரனின் பரதகலாலயாவின் மாணவ மாணவிகளுக்கு இன்று மட்டக்களப்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. கொழும்பிலிருந்து இன்று காலையில் மட்டக்களப்பு திரும்பிய இவர்களுக்கு தொடருந்து நிலையத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு தொடரூந்து நிலையத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், இளைஞர் சேவைகள் மன்ற பிரதிநிதி மதன் ஆகியோரும் பொதுமக்களும் இந்த வரவேற்பில் கலந்து கொண்டனர்.
பரதகலாலய அதிபர் திருமதி சுபத்திரா கிருபாகரனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்....

இதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு தொடரூந்து நிலையத்திலிருந்து மட்டக்களப்பு எல்லை வீதியில் உள்ள சிந்தாமணி பிள்ளையார் ஆலயம் வரை இவர்கள் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டனர். சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றன.
முதலாம் இடத்தைப்பெற்ற பரதகலாலய நாட்டிய குழுவினருக்கு 4இலட்சம் ரூபா பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.