Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 23 மார்ச், 2012

இலங்கை மக்களைப் பார்த்து வியக்கிறேன்...

தினக்குரலின் சகோதர வெளியீடான வியாழன் தோறும் வெளிவரும் உதயசூரியனின் FACE BOOK பகுதியில் கடந்த வாரத் தொடர்ச்சியின் மிகுதிபக்கத்தில் இந்திய பின்னணிப்பாடகர் எம்.கே.பாலாஜியுடன் நேர்காணல்......

நேர்காணல்: ரோஷன்

நான் பாடகனாக உருவாகி மேடைப் பாடகனாக பிரபல்யமாகி சினிமா பின்னணிப் பாடகனாக உருவான விதம் பற்றி கடந்த வாரம் சொல்லிட்டேன். இந்தவாரம் திரைத்துறையில் எனக்கு கிடைச்ச அனுபவங்களை உங்களோட பகிர்ந்துக்கப் போறேன். முதல் அனுபவம்என் முதல் பாடல் சுராங்கனி. நான் பல மேடைகளில் பாடியிருக்கிறதால் முதல் ரெக்கோடிங் சமயத்தில் எந்த பயமோ பதற்றமோ இருக்கல்ல. செம ஜாலியா இருந்தது. முதல் பாட்டையே இவ்வளவு நேர்த்தியா பாடுற முதல் பாடகனை நான் பார்க்கிறேன்னு அவர் சொன்னாரு. இந்தப் பாராட்டை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இன்னுமொரு மறக்க முடியாத அனுபவமும் இருக்குது. அங்காடித்தெரு படத்தில எங்கே போவேனோ பாட்டு. அந்த பாட்டைப் பாடும் போது உண்மையிலேயே ரொம்பக் கஷ்டப்பட்டேன். அந்தப்பாட்டுல சில வரிகளை ரொம்பவும் உச்ச ஸ்தாயில இன்னும் சொல்லப்போனா கத்திப் பாடனும். ஆனா என் குரல் அதுக்கு ஒத்துழைக்கலை. தொண்டை அடைச்சிடுச்சி. இந்தப் பாட்டு கைவிட்டுப் போயிடுமோன்னு கவலைப்பட்டேன். ஆனா விஜய் அன்டனி சேர் வந்து பாலாஜி இந்த பாடலை நீங்கதான் பாடணும். நாளைக்கு வந்து இந்த பாடலை பாடுங்க என்று சொன்னார். எனக்கு தெரிஞ்சு ஒரு பாட்டை ரெண்டாவது நாளாக பாடின பாடகன் நானாகத்தான் இருப்பேன். அப்புறம் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் ஒரு பாட்டு. கவிஞர் வைரமுத்து தான் வரிகள் எழுதியிருந்தாரு. அந்தப்பாட்டில் ஒரு வரிய 3 தடவை பாடவேண்டும். 3 தடவைகளும் மூன்று விதமான வொய்ஸ் குடுக்கனும். ரொம்பவும் சிரத்தை எடுத்துப் பாடினேன். பாட்டும் ரொம்ப திருப்தியா வந்திச்சி. ரொம்ப திருப்தியா வீட்டுக்குப் போனேன். 3 நாளைக்கப்புறம் இசைமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் என்னை தொலைபேசியில கூப்பிட்டு வைரமுத்து சேர் எழுதிய வரிகள் திருப்தியாக இல்ல திரும்பவும் மாற்றி எழுதியிருக்காரு நீங்க திரும்பவும் வந்து பாடனும்னு சொன்னாரு. ரொம்பவும் கவலையா இருந்துச்சி!சாதிக்க நினைப்பது அண்மையில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் விஜய் ஒரு வசனம் சொல்லுவாரு. வெற்றியைத் தேடி ஓடாதே அறிவைத் தேடி போ வெற்றி உன் பின்னால வரும்னு. என்னை பொறுத்த வரைக்கும் பாலாஜி ஒரு பாடகராக ஒரு 1000 ஹிட் கொடுத்திருக்கார். 2000 பாட்டு பாடியிருக்காருன்னு இருக்கக் கூடாது. பாலாஜி நல்ல பாடகராக வெளியில தெரியனும். ஹிட் என்றது தானா வரும் இலங்கை மக்களைப்பற்றி..?இலங்கையில எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறாங்க. முகம் தெரியாத ரசிகர்கள் சமூக இணையத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவிக்கிறாங்க. அவங்க காட்டுற அன்பு, பாசம் எனக்கு பிடிச்சிருக்கு. இலங்கையில மிகப் பெரிய போர் நடந்தும் அந்த மக்கள் தைரியமா மீண்டு வந்திருக்காங்க. அண்மையில் நான் சூரியன் எப்.எம். மெகா பிளாஸ்ட்டுக்காக இலங்கை வந்தபோது இலங்கை மக்களை பார்த்து நான் வியந்து போனேன். போரின் வடுக்களை சுமந்து கொண்டும் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்கிற அந்த மக்களைப் பார்த்து நாம் பாடம் கத்துக்கனும். நடிக்கும் ஆசை உண்டா?அழகா இருக்கீங்க. நீங்க ஏன் படத்துல நடிக்கக்கூடாதுன்னு பலரும் என்கிட்ட கேட்டிருக்காங்க. நடிக்க சந்தர்ப்பமும் கிடைச்சது. நான் மறுத்துட்டேன். இப்போதைக்கு நான் ஒரு பாடகன். அதை திருப்தியா செய்யணும். மக்கள் மனதில் என்றைக்கும் நிலைக்கும் பாடகனாகனும் என்கிறார் பாலாஜி அவர் எண்ணம் ஈடேற உதயசூரியனும் வாழ்த்துகளைப் பகிர்கிறது.

வெள்ளி, 16 மார்ச், 2012

முதன் முதலாக இலங்கை பைலாப்பாட்டு பாடினேன்!

தினக்குரலின் சகோதர வெளியீடான வியாழன் தோறும் வெளிவரும் உதயசூரியனின் பகுதியில் இந்தவாரம் இந்திய பின்னணிப்பாடகர் எம்.கே.பாலாஜியுடன் நேர்காணல்......

நேர்காணல்: ரோஷன்

அங்காடித் தெரு படத்தில் எங்கே செல்வேனா நீ என்னை நீங்கினால்... என்ற மனதை உருக்கும் பாடலின் குரலுக்குச் சொந்ததக்காரர் எம்.கே.பாலாஜி. யார் இந்த புதிய குரல் என்று தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்த இளைஞன். வசீகரமான குரலுக்குச் சொந்தக்காரர், குத்து, பைலா, மெலடி என எல்லாப் பாடல்களுக்கும் அச்சொட்டாக பொறுந்திப் போகிற மாயம் அந்தக் குரலுக்கு இருக்கிறது. இந்திய ரசிகர்களைப் பொருத்தவரை திரையுலக பிரவேசத்திற்கு முன்னரே சன் தொலைக்காட்சி யின் ஊ லலல்லா நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் பாலாஜி. இந்த வார பேஸ்புக்கில் உங்களோடு உறவாடுகிறார் பாலாஜி.வணக்கங்க, எனது சொந்த ஊர் சென்னை. குடும்பத்துல ஒரே ஒரு செல்லப்பையன். எம்.பி.ஏ படிப்பை முடிச்சிட்டு இப்ப பாடகரா கலக்கிட்டிருக்கேன். சின்ன வயசிலே நான் பாடகரா உருவாகனும்னு கனவு கூட கண்டதில்ல. ஏன்னா எங்க வீட்ல யாருமே பாடமாட்டாங்க. நான் பாடசாலையில் கூட பாடமாட்டேன். எல்லாரும் எதிர்காலத்தில என்னவா வருவாங்கன்னு பாடசாலைகள் தான் தீர்மானிக்குதுன்னு சொல்வாங்க. ஆனா என்னோட எதிர்காலம் அமைஞ்சது ஸ்கூல் பஸ்லதான். எங்க வீட்லயிருந்து ஸ்கூலுக்கு 40 கிலோ மீற்றர் தூரம் இருக்கும். பஸ்ஸில போகும்போது நண்பர்கள் பாடுவாங்க, அவங்களோட சேர்ந்து நானும் கோரஸ் பாடுவேன். எல்லா வகையான பாடல்களையும் கலந்து பாடுவோம். ஸ்கூல் போகும் வரை எங்க கச்சேரி தொடரும். நண்பர்களோ கோரஸ் பாடிக்கொண்டிருந்த என்னை தனித்துவப் பாடகனாக்கியது அருணா டீச்சர். எங்க பஸ்ல அவங்க வந்து போவாங்க. ஒரு சமயம் அவங்க உன் குரல் நல்லாயிருக்கு, நீ ஏன் மியூசிக் கத்துக்கக் கூடாது? என்று கேட்டாங்க. நானும் சம்மதித்து அவங்களுடன் சேர்ந்து மியூசிக் கத்துக்கிட்டு பல மேடை நிகழ்ச்சி ,கொலேஜ் பங்சன் என எல்லா நிகழ்ச்சிகளில் பாடிக் கொண்டிருந்தேன். அப்போது தான் சன் டீவி. ஊ லலல்லா என்ற நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது அந்த நிகழ்ச்சியில் தமிழ் நாட்டிலிருந்து ஒரு 150160 குழுக்கள் வந்து பங்கு பற்றினாங்க, நாங்களும் இணைந்து கொண்டோம். 160 போட்டியாளர்களிலிருந்து 3பேர் தெரிவு செய்யப்பட்டோம் .அதில் நானும் ஒருவன். இந்த நிகழ்ச்சிதான் எனக்கு எல்லா வாய்ப்புகளும் வரக் காரணமாயிருந்திச்சி, இந்த நிகழ்ச்சியைப் பார்த்திட்டு இசையமைப்பாளர் விஜய் அன்டனி எனக்கு வாய்ப்புத் தந்தார். நான் முதன் முதலா இலங்கை பைலாப் பாட்டுத்தான் பாடினேன். பந்தயம் படத்திற்காக சுராங்கனி .... என்ற பாடலையும் அதே படத்திலேயே சின்ன மாமியே என்ற பாடலையும் பாடினேன். தற்போது நான் 35 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன் இப்போது 15 பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறேன் இந்த உயர்வுக்கு உண்மையான காரணம் என் அப்பா,அம்மா தான். இஞ்சினியரிங் எம்.பி.ஏ படிச்சுட்டு நம்ம வந்து பாடகராகப் போறேன்னா நிறைய வீட்டில சப்போர்ட் பண்ண மாட்டாங்க. பாட்டாவது ஒன்னாவது எல்லாத்தையும் மூட்டைகட்டி வச்சிட்டு இஞ்சினியராகு என்று சொல்லுவாங்க. ஆனால் என் அம்மா ,அப்பா இதுவரை சொன்னதே கிடையாது . இசைத்துறையில் பெரிய நாட்டம் வந்ததுக்கான காரணம் ரஹ்மான் சேர்தான்! அவருடைய மியூசிக் ரொம்ப விரும்பிக்கேட்பேன். எல்லாரையும் விட எனக்கு முதல்பாடல் வாய்ப்புக்கொடுத்து ரொம்பவும் ஊக்கம் கொடுத்த விஜய் அன்டனி சேரும் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்தான்.

(தொடரும்.......)

ஞாயிறு, 11 மார்ச், 2012

உதவி கோருகிறார்....

மட்டக்களப்பு செங்கலடி தம்பானம்வெளியைச் சேர்ந்த அநுரகுமார் சுவாந்திரா (வயது 7) என்ற சிறுமி இருதயத்தில் ஏற்பட்டுள்ள துவாரம் காரணமாக இருதய நோயினால் பீடிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் தற்போது சிகிச்சை பெறுவதற்கு ரூபா ஐந்து இலட்சம் தேவை என வைத்தியர்களினால் தெரிவிக்கப்பட்டுள்ளது

மூன்று பிள்ளைகளின் தந்தையான சிறுமியின் தந்தை நாளாந்த கூலித் தொழிலாளி என்பதால் அவருடைய வருமானத்தின் மூலம் இந்தத் தொகையைப் பெறமுடியாதுள்ளதால் அவர் தனது மகளின் வைத்திய சிகிச்சைக்காக பொது மக்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கிறார்.

உதவ விரும்பும் பொதுமக்கள் அல்லது அமைப்புகள் செங்கலடி மக்கள் வங்கிக் கிளை திலகநாயகி, கணக்கு இலக்கம் 2272001 5 0041240 இலக்கத்தில் வைப்பிலிட முடியுமென தாயார் வி. ஏ. திலகநாயகி தயவுடன் கேட்டுள்ளார். அவரது தொலைபேசி இலக்கம் 0779539560

வெள்ளி, 9 மார்ச், 2012

அருட்தந்தை சில்வஸ்ரரின் பூதவுடல் இன்று மாலை நல்லடக்கம்

இறைபதமடைந்த திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட நிதிப் பொறுப்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு, கல்முனை கரித்தாஸ் எகெட் நிறுவனப் பணிப்பாளருமாகிய அருட்தந்தை த.சிறிதரன் சில்வெஸ்ரரின் பூதவுடல் இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் மட்டக்களப்பு தூய மரியாள் இணைப்பேராலயத்தில் இடம்பெறும்.


இறுதி இரங்கல் திருப்பலியினைத் தொடர்ந்து ஆலையடிச் சோலை கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக மட்டக்களப்பு திருமலை மறைமாவட்ட ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழனன்று காலமான அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக நேற்று வெள்ளிக்கிழமை தாண்டவவெளியிலுள்ள அவரது உறவினர் வீட்டில் வைக்கப்பட்டதுடன், இன்று மட்டக்களப்பு ஆயர் இல்ல சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. மனித நேயப் பணியாளராக போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது மட்டக்களப்பு அம்பாறை மக்களுக்கு அளப்பரிய பணியாற்றிய இவரது மறைவுச் செய்தி கேட்டு பெருந்திரளான தமிழ், முஸ்லிம் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வியாழன், 8 மார்ச், 2012

அருட் தந்தை சில்வெஸ்ரர் சிறிதரன் மாரடைப்பால் காலமானார்

கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அருட் தந்தை த. சிறிதரன் சில்வெஸ்ரர் அடிகளார் நேற்று முன்தினம் புதன்கிழமை நள்ளிரவு மாரடைப்பால் காலமானார். வெலிக் கந்தையில் நேற்று நடைபெறவிருந்த நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த வேளை வாழைச் சேனையில் வைத்து தீடிரென சுகவீனமுற்ற நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மாரடைப்பால் மரணமடைந்ததாக ஆயரில்ல வட்டாரங்கள் தெரிவித்தன. மட்டக்களப்பு தாண்டவன்வெளியைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் 1993 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து திருமலை, மூதூர் , கல்லாறு ஆகிய இடங்களில் குருவாகப் பணியாற்றினார். அதைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு தொடக்கம் 13 வருடங்களாக கிழக்கிலங்கை கத்தோலிக்க திருச் சபையின் சமூகப் பணி மையமாகிய கரித்தாஸ் எகெட் நிறுவகத்தின் மட்டக்களப்பு அம்பாறை மவாட்டங்களின் இயக்குநராக பணியாற்றி வந்தார். 49 வயதுடைய அடிகளாருக்கு இந்தியாவின், பெங்களூர் நகரில் அமைந்துள்ள கல்வி முகாமைத்துவம் மற்றும் சமூக சேவைகள் என்னும் நிறுவகத்தின் சர்வோதயம் நியு டில்லி என்ற அமைப்பினால் கடந்த வருடம் ஜூன் மாதம் 26 ஆம் திகதி நடத்தப்பட்ட கற்றறிவாளர் விருது 2010 விழாவின் போது பேராசிரியர் பட்டம் வழங்கப்பட்டது. கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் ஆயர் இல்லத்திற்கு நிதிப் பொறுப்பாளராக நியமனம் பெற்றார். அருட் தந்தை சிறிதரன் சில்வெஸ்ரர் யுத்தம், கடல் கோள் மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்களின் போது இன, மத பேதம் இன்றி பெருந்தொகையான மக்களுக்கு சிறந்த சேவைகளை ஆற்றியவர். இதேநேரம் வெலிக் கந்தை உள்ளிட்ட இடங்களில் புனர்வாழ்வு முகாம்களில் உள்ள முன்னாள் போராளிகளின் நலன் மற்றும் அவர்களது விடயங்கள் குறித்து மிகவும் அக்கறைகாட்டினார். கடந்த நத்தார் புது வருடத்தை முன்னிட்டு வெலிக் கந்தை கந்தக்காடு சேனபுர என்ற இடத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் புனர்வாழ்வு முகாமுக்கு இவர் தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து அங்குள்ள முன்னாள் போராளிகளை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 6 மார்ச், 2012

மகளீர் தின நல்வாழ்த்துக்கள் 2012

மகளீர் தின நல்வாழ்த்துக்கள் 2012
- Happy Womens Dayதாயாய் இருந்து உருவாகிதமக்கையாய்
இருந்து வழிநடத்திதோழியாய் இருந்து தோல்
குடுத்துமனைவியாய் இருந்து ஷக்தி தந்துமகளாய்
இருந்து பெருமை சேர்க்கும் ....
பெண்களுக்குஎன் மகளீர் தின நல்வாழ்த்துக்கள்