Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வியாழன், 19 ஜூலை, 2012

என்னை வளர்த்து விட்ட ஊடகங்கள்...

பாடகியாக அறிமுகமாகி அறிவிப்பாளராக பின்னணி குரல் கொடுப்பவராக இலங்கையின் ஒரு நட்சத்திரமாக பிரகாசித்துக் கொண்டிருப்பவர் பிரஷாந்தினி மயில்வாகனம்.

அண்மையில் மலேசியத்திரைப்படம் ஒன்றிற்காகவும் பாடல் பாடியிருக்கும் பிரசாந்தினி இந்தவாரம் பேஸ்புக் பகுதியில்....

நேர்காணல்: எஸ்.ரோஷன்

பிறந்தது வளர்ந்தது எல்லாம் கொழும்பில்தான். அப்பா, அம்மா, அண்ணா, நான் மற்றும் இரண்டு சகோதரிகள் என அன்பான குடும்பம். அம்மா நீங்கள் யாவரும் அறிந்த பாடகி லில்லி மயில்வாகனம். என் தாயார் இசைத்துறையில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக எனக்கும் சிறுவயது முதல் அம்மா போல ஒரு பாடகியாக வரவேண்டும் என ஆசை. கூடவே ஆசிரியராக வரவேண்டும் என்று ஒரு எண்ணமும் இருந்தது.
பாடசாலை காலத்தில் சகல இசை நிகழ்ச்சிகள், போட்டிகளையும் விட்டு வைக்காமல் பங்கு பற்றினேன். கூடவே விளையாட்டுத் துறையிலும் எனக்கு ஈடுபாடு அதிகம்.
எனது இசைப் பயணத்தின் ஆரம்பமாக நான் தரம் 11 படிக்கும் போது சக்தியின் இளையகானம் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றும் வாப்பு கிடைத்தது. அதில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டேன்.
சிறு வயதிலிருந்து கர்நாடக இசையை முறைப்படி பயின்று வந்ததால் என் இசைப்பயணத்திற்கு அது சிறந்த சக்தியை வழங்கியது.
அடுத்த கட்டமாக சக்தி சுப்பர்ஸ்டார் சீசன்02 இல் பங்கேற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலும், இறுதிச் சுற்றில் 3 ஆம் இடத்தை பெற்றேன். அன்று முதல் இலங்கை மக்களுக்கு அறிமுகமான பாடகி என்ற அந்தஸ்தை பெற்றுக்கொண்டேன்.
இப்போட்டி நிகழ்ச்சிக்கு பின்னர் என் இசைப் பயணம் சிறப்பாக அமைய பலர் எனக்கு வாப்புகள் வழங்கினார்கள். குறிப்பாக கொழும்பின் பல முன்னணி இசைக் குழுக்களில் பாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத்தோடு, குடச்டுtடடி கூங யில் Shakthi TV °À SMS Galata எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாப்பும் கிடைத்தது.
சாம்பசிவ மணிக்குருக்கள் ஐயா என் பாடும் திறமையை பாராட்டி எனக்கு சின்னக்குயில் எனும் பட்டத்தையும் வழங்கி கௌரவித்தமை என்னால் மறக்க முடியாத நிகழ்வாகும்.
தொடர்ந்து, இலங்கையின் இசைத்துறையில் மிளிர்ந்து வரும் பல முன்னணி இசையமைப்பாளர்களான செந்தூரன், ஷமீல்,
ஸ்ரீ விஜ, தினேஷ் கனகரட்ணம், கிருஷான் மஹோவின் வெஸ்லி லக்ஷ்மன் சுதர்சன்,
ஸ்ரீ பிருந்தன், சவாஹிர் மாஸ்டர் இன்னும் பல இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடும் வாப்பு கிடைத்தது. பாடியும் வருகிறேன்.
என் இசைப்பயணத்தில் இன்னும் மறக்க முடியாத விடயங்களாக, தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர்களோடு இணைந்து பாடும் வாப்பு கிடைத்தது.
தமிழ் இமையமைப்பாளர்கள் மட்டுமன்றி பல சிங்கள இசையமைப்பாளர்களுடன் பணியாற்றும் வாப்பும் கிடைத்தது. விஷேடமாக, பாத்திய சந்துஷ் இசையமைப்பில் வெளியான சிங்கள வெற்றித் திரைப்படமான Dancing Stars திரைப்படத்தில் பல பாடல்கள் பாட சந்தர்ப்பம் கிட்டியது.
மற்றும் இலங்கையின் முன்னணி இசையமைப்பாளரான ரோஹண வீரசிங்கவின் இசையமைப்பில் வெளிவந்த சிங்கள வரலாற்று திரைப்படமன""குச பபா'' திரைப்படத்தில் பின்னணி குரல் கொடுக்கும் வாப்பும் கிடைத்தது.
பொதுவாக, இலங்கை இசைக்கலைஞர்களின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது எனும் ஒரு கருத்து இருந்து வருகிறது.
அந்நிலைமை சற்று மாறி, அவர்களும் நம்மவர்களின் சிறந்த படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் என் இசைப்பயணத்தின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்களிப்பு கணிசமான அளவு உண்டு என்பதை இச்சந்தர்ப்பத்தில் மகிழ்வுடன் தெரிவிக்கலாம்
பாடல்கள் மட்டும் தான் பாட முடியும் என்று எண்ணியிருந்த எனக்குள் அறிவிப்புத்திறமையும் இருக்கிறது. என்பதை உலகறியச் செத பெருமையும் Shakthi TV யையே சாரும்.
அந்த வகையில், அண்மையில் மக்கள் மனம் வென்ற Shakthi Super Star- Season- 04 பிரம்மாண்ட போட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழகும் வாப்பை சக்தி நிறுவனம் எனக்கு வழங்கியது.
தற்போது சிறந்த பாடகி மற்றும் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளி என்ற அந்தஸ்தையும் மக்கள் எனக்கு பெற்று தந்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட சில வருடங்களுக்குள் என் இசைப் பயணத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள் பல. என்னுடைய வளர்ச்சியின் ஆரம்பம் முதல் இன்று வரை எவ்வித குறையும், தடைகளுமின்றி என்னை வழிநடத்துபவர்கள் என் குடும்பத்தார். அவர்களை எனக்கு கொடுத்ததற்காக இறைவனுக்கு என் நன்றிகள்,
இத்தோடு நின்றுவிடாது, என் இசைப்பயணத்தில் இன்னும் என் முயற்சிகள்
தொடரும்........

வியாழன், 12 ஜூலை, 2012

ஒரே தினத்தில் பல நாடுகளிலும் வெளியிடப்பட உள்ள முதலாவது தமிழ் இசை இறுவட்டு ஆர்யன்


பாடகர் (Rapper) ஆர்யன் தினேஷ் கனகரட்ணத்தின் "ஆர்யன்' இசை ஆல்பம் நேற்று சனிக்கிழமை இலங்கை உட்பட பல நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.


"ஆர்யன்' இசை ஆல்பம் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் நேற்று ஒரே தினத்தில் வெளியிடப்பட்டதன் மூலம் இவ்வாறு ஒரே தினத்தில் பல்வேறு நாடுகளில் வெளியிடப்பட்ட முதலாவது தமிழ் இசை ஆல்பம் என்ற அடையாளத்தை எட்டியுள்ளது.
"ஆர்யன்' இசை ஆல்பத்தை Die-A- Tribe Entertain ment (Private) Limited நிறுவனம் இலங்கையில் வெளியிட்டு வைத்துள்ளதுடன் Antostage நிறுவனம் ஆல்பத்தின் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளது.
இதேநேரம் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் Psycho.Unit Asia(மலேசியா), J.R.Media works (ஐரோப்பா), Antomatic Music & Entertainm ent and Greatmu6 (இந்தியா) போன்ற நிறுவனங்கள் இந்த இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளன.
ஆர்யன் தினேஷ் கனகரட்ணமும் அவரது சகாவான பொனிகில்லாவும் இணைந்து கொழும்பு, கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் சென்று ஆர்யன் இசை ஆல்பம் பற்றிய ஊக்குவிப்பு பிரசாரங்களை மேற்கொள்ளவுள்ளனர். அத்துடன், இசை ஆல்பத்தை வாங்கும்போது ஒரிஜினல் பிரதிகளை வாங்கி உதவுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுவிட்ஸர்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஆல்ப சி.டி.க்களை தற்போது பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன், itunes, Amazon, nokia உள்ளிட்டவற்றின் ஊடாக இந்த ஆல்பத்தை டிஜிட்டல் டவுன்லோட் செய்யவும் முடியும்.
ஆர்யன் இசை ஆல்பத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக “You ate my money’ என்ற பாடலின் வீடியோ ஒன்றையும் Die-A-Enter tainment மற்றும் Antostage Records ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. பணம் காரணமாக சில இளைஞர்கள் எப்படி தேவையில்லாத பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள் என்பதை இந்தப் பாடல் விபரிக்கிறது.www.youtube.com Cøn¯zuÍzvÀ “You ate my money’ என்று டைப் செய்வதன் மூலம் இந்த பாடலின் வீடியோவை பார்க்க முடியும்.
இதேநேரம், ஆர்யன் இசை ஆல்பத்தின் வெளியீட்டை http://www.youtube.com/watch? v=36RcyAG4PN..எனும் இணையத்தள முகவரியின் மூலம் பார்க்க முடியும்.

வெள்ளி, 6 ஜூலை, 2012

பலர் பாராட்டினார்கள் சிலர் தூற்றினார்கள்

பாடலோடு உற்சாக துள்ளல் நடனமென தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி ரசிகர்களை மகிழ்விப்பவர் மொகமட் வஃபா தினக்குரலின் சகோரவெளியிடான உதயசூரியனுக்கு அளித்த போட்டியின் கடந்த வாரத் தொடர்ச்சி....

நேர்காணல்:
எஸ்.ரோஷன்

(கடந்த வாரத் தொடர்ச்சி)
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பார்கள். ஆனால் எந்தத் திறமைசாலிக்கும் தட்டியவுனே வாய்ப்புக் கதவுகள் திறந்து விடுவதில்லை. முட்டி மோதிப் போராடி திறக்க வேண்டும். அப்படி போராடியவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.
நான் சாதாரணமானவன். திறமைகளை வளர்த்துக் கொள்ளத் துடிப்பவன் எனக்கு மட்டும் வாய்ப்புகள் இலகுவாகக் கிடைத்துவிடுமா என்ன?
புகழைப் போன்ற போதையை வேறு எதுவும் தந்துவிட முடியாது. முதல் மேடையில் கிடைத்த கைத்தட்டல் எனக்கும் பாடும் ஆர்வத்தை தூண்டியது. விளைவு பாடசாலை கல்வியை முடித்து விட்டு புசல்லாவைக்கு வந்து சிறு இசைக் குழுக்களில் பாட வாய்ப்பு தேடினேன்.
பிறகுதான் தெரிந்தது ஒருவன் தன்னை நிரூபிப்பது அத்தனை சுலபமானதல்ல!
என்னுடைய தந்தை ரூபவாஹினியில் இஸ்லாமிய கீதங்கள் பாடுவார். அவரோடு இணைந்து நானும் பாடுவேன். மூன்று நான்கு இஸ்லாமிய கீதங்கள் பாடினேன். பல இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. எங்கு சென்றாலும் எனது திறமைக்கு ஏதாவது தடைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது.
சில நாட்களுக்கு பின்னர் சூரியன் எப்.எம் இன் நகருக்குள் நகரும் இசை வாகன நிகழ்ச்சியில் ((Gibbons) இசைக் குழுவில் பாடகனாக பாட வாய்ப்புக் கிடைத்தது. அத்தருணத்தில்தான் தனியார் தொலைக் காட்சியில் Super star நிகழ்ச்சி பற்றி அறிந்து அங்கு சென்றேன். அதன் மூலமாக வஃபா இலங்கை முழுவதும் அறிந்த பாடகனாக அறிமுகப்படுத்தப்பட்டான்.
அந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு திருப்பு முனை என்றும் கூறலாம். ஆடலுடன் பாடி அசத்தினேன். பலர் பாராட்டினார்கள். ஆனால் சிலர் பல தப்பான விமர்சனங்களை சொன்னார்கள். நான் பாடுவதில்லை. ஆடுகிறேன் என்றார்கள். அந்த நிகழ்ச்சியில் தெரிவு செய்யப்பட்ட 12 பேரில் முதலாவதாக வெளியேறியது நான் தான். மிகவும் மனம் நொந்தேன்.
ஆனாலும் இறுதி நிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைப்புக் கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு என்னை நிரூபிக்க வேண்டும் என நினைத்தேன். எனது முயற்சி பலன் தந்தது. அதில் நாள் ஒரு star ஆக தெரிவு செய்யப்பட்டேன்.
இறுதிப் போட்டியின் பின்னர் என்னை புகழாத யாரும் இல்லை. தொடர்ந்தும் இசைத்துறையை கைவிடாது கற்றுக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறேன்.
முகவரி இசைக் கோவை, சக்தி சுப்பர் ஸ்டார் அல்பம் என தொடர்ந்தும் பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் என்று பாடிக் கொண்டிருக்கிறதுங்க.
நான் அதில் கற்றது கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. எனது அடுத்தக்கட்ட முயற்சியாக லெஜன்ஸ் என்ற பெயரில் இசைக் குழுவை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறேன். ஆர்வமுள்ள திறமையான இளைஞர்களுக்கு இதில் வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளேன்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இசைத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் எனது தொலைபேசி இலக்கத்துடன் (0775442451) தொடர்பு கொள்ள முடியும்.
என்னைப் போன்ற இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்பதுதான்.