Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

சனி, 23 மார்ச், 2013

எனக்கு நானே ரோல் மொடல்...

சூரியன் வானொலியின் மூலம் அறிவிப்புத் துறைக்கு அறிமுகமாகி வசந்தம் டி.வி.யின் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இன்றி வெற்றி எப்.எம்.மின் அறிவிப்பாளராக இருப்பவர் பூஜா.
இந்த வாரம் பேஸ்புக் பகுதியினூடாக உங்களை சந்திக்கிறார்.

எனது ரசிகர்களுக்கு வணக்கம்! எனது சொந்த ஊர், பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கொழும்புதான். அம்மா ஒரு ஆசிரியர். தங்கை, தம்பி, நான்  என அன்பான அழகான சிறிய குடும். ஆரம்பம் முதல் உயர்கல்வி வரை கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். எனது பாடசாலையிலேயே இரண்டு அறிவிப்பாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவர் என்பதில் பெருமையடைகிறேன்.
ஆரம்பத்தில் சூரியனில் இடம்பெற்ற தேர்வில் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் எனது அறிவிப்புப் பயணம் தொடர்ந்தது.
நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்து சொல்ல முடியுமா?
வார நாட்களில் மதியம் 1 முதல் 3 மணிவரை இடம் பெறும் கூல் ஸ்போர்ட்ஸ் அதைத்தவிர நேயர்களின் விருப்பத் தெரிவு பாடல்கள் வாழ்த்துகளுடன் இணைந்து வரும் மியூசிக் மசாலா.

அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள் இப்படிதான் இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள் ஆனால் நீங்கள்


சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி
இருக்கக்கூடாது?
கேள்வி கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஒரு அறிவிப்பாளருக்கு தலைக்கனம் இருக்கக் கூடாது.  தனது பெயரைப் பயன்படுத்தி சொந்த காரியங்களில் ஈடுபடல், சுய விளம்பரம் செதல் என்பவை இருக்கவே கூடாது.

பாடசாலை அனுபவம்?
பாடசாலைக் காலத்தினை மறக்கவே முடியாது. எனது பாடசாலையில் நான் வகிக்காத பதவிகளே இல்லை. எல்லா போட்டிகளிலும் பங்குபற்றுவேன். என் திறமைகளை வெளிக்கொணர்ந்த களம் எனது பாடசாலையும், ஆசிரியர்களும் தான்.

போட்டிகள் நிறைந்த இந்த துறையில் உங்களின் அடையாளம் என்ன?
வேகமான என்னுடைய பேச்சுப் பாணி

இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?
அமரர். கே.எஸ்.ராஜா. கோபி நாத் (நடந்தது என்ன)

நீங்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி?
வசந்தம் டீ.வி. விஜ டீவி.

உங்களுடைய ரோல் மொடல் யார்?
எனக்கு நானே ரோல் மொடல். எனினும் சேத்தனா லியனகே. (சிரச செதி வாசிப்பாளர்) பிடிக்கும்

சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருந்த அனுபவம் பற்றி சொல்ல முடிமா?
என்னை ஒரு அறிவிப்பாளராக அறிமுகப்படுத்தியது என் அன்னை வானொலி சூரியன் எப்.எம்.தான் என்னைத் தெரிவு செத லோஷன் அண்ணா, எனக்குப் பயிற்சி அளித்த சிரேஷ்ட அறிவிப்பாளர்களை மறக்க முடியாது. ரமணன் அண்ணா, கிருஷ்ணா அண்ணா, பரணி அண்ணா, நவா அண்ணா, விமல் அண்ணா, சங்கீதா, குமுதினி அக்கா இவர்கள் எல்லோருமே என்னை பட்டை தீட்டி செம்மைப்படுத்தியவர்கள்

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்? பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? 
ரசித்து பார்த்த படம் கும்கி. பிடித்த நகைச்சுவை நடிகர் சந்தானம் (கண்ணா லட்டு தின்ன ஆசையா?)

வாழ்வில் மறக்க நினைப்பது எது?

இத்துறையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் ?
பூவே வா பேசும் போது...

உங்களுடைய பொழுதுபோக்கு?
இசை கேட்பது, ஷொப்பிங் செல்வது, நல்ல நிகழ்ச்சிகளை பார்ப்பது, நகைச்சுவைக் காட்சிகளை இரசிப்பது, எது கிடைத்தாலும் வாசிப்பது.

உங்களிடம் உள்ள அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன?
அழகுக்கலை, பெயின்டிங்ஸ், சமையல்

திறமைகள் இருந்தும் இந்தத் துறையில் நீங்கள் சாதிக்க முடியாதுபோன சந்தர்ப்பங்கள்?
அப்படி எதுவும் இதுவரை இருக்கவில்லை, எனக்குக் கிடைத்த மூத்த அறிவிப்பாளர்களின் வழிகாட்டலினால் நான் எனது முழுப் பங்களிப்பையும் வழங்குகிறேன். முக்கியமாக எனக்கு கிடைத்த பணிப்பாளர்கள் எல்லோருமே மட்டுமல்ல எங்கள் குழுவிற்கும் திறமைகளைக் வெளிக் காட்டுவதற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

சந்திக்க விரும்பும் நபர் யார்?
பில் கேற்ஸ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்.

உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ் எந்த நிகழ்ச்சியையும் செயக்கூடிய ஆற்றல். மைனஸ் கோபம்

அடிக்கடி மறக்கும் பொருள்?
மொபைல் போன், பேனா.

படித்ததில் பிடித்தவை?
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு எனும் கண்ணதாசனின் அற்புதமான தத்துவங்கள்.

யாருடன் இணைந்து நிகழ்ச்சிசெயப் பிடிக்கும்?
அபர்ணா அண்ணா, நான் விரும்பும் திறமையான கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர். ராஜ், கவிதா அக்கா இருவருமே கலகலப்பான அறிவிப்பாளர்கள். இவர்களோடு இணைந்து நிகழ்ச்சி செய்வது மிகவும் பிக்கும்.

உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
இந்த ஆறு வருடமும் எனக்கு அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. என்னைப் பாராட்டுவது போல என் குறைகளையும் சுட்டிக்காட்டி என்னை மென்மேலும் செம்மைப்படுத்துங்கள்.
இது போல இனிவரும் காலங்களிலும் உங்கள் ஆதரவை வழங்குங்கள். அதுவே புதிய நிகழ்ச்சிகளை  படைத்தளிப்பதற்கான உத்வேகத்தை அளிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக