Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

புதன், 3 ஆகஸ்ட், 2011

தங்கத்தேரில் சூரியன்………….


தங்கத்தேரில் சூரியன்………….
1998ம் ஆண்டின் ஜூலை மாதத்தின் 25ம் திகதிஇ பண்பலை வழியே உலக தமிழ் வானொலிகளின் மத்தியில் விழிப்பை ஏற்படுத்திய அதேவேளை வானொலிகளின் வழமையான கலாசார யுகத்திலிருந்து மாறுபட்டு நேயர்களை நண்பர்களாக்கி உறவாடும் உணர்வை ஏற்படுத்திய வானலை முதல்வன் சூரியன், சூரிய குழந்தையாய் இலங்கையின் மிக உயர்ந்த கட்டிடமான உலக வர்த்தக மையத்தின் 35ம் மாடியில் உதித்த நாள் ……..

1998 இலிருந்து 2011 என்ற 13 ஆண்டுகளில் வானலை வழியே முதல்வனாகஇ வேறெந்த வானொலியாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாத முதல்வன் என்ற ஸ்தானத்தில் அன்பான நேயர்களை தன் உறவுகளாக்கி தன் ஏற்றமிகு பாதையின் ஏணிப்படிளாய் இணைத்துக்கொண்ட வானலை அரசன் சூரியனுக்கு இன்று வயது 13.

திறமைகள் பல கொண்ட அறிவிப்பாளர்கள் பலரை உருவாக்கி அவர்களின் திறமையால் நல்ல பல நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி சாதனை கண்ட வானொலி என்றால் அது நமது சூரியனையே சாரும்.

வானொலி என்பது வெறுமனே பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமன்றி, அதனை சார்ந்த சமூகத்திற்கு அவசியமான இக்கட்டான காலகட்டத்தில் கைகொடுத்து அந்த சமூகத்துடன் ஊடகம் ஒன்று இணைந்திருக்க வேண்டும் என்பதையும் ஒரு பொறுப்புமிக்க ஊடகம் என்ற ரீதியிலும், சூரியன் வானொலி அண்மைய அசாதாரண இயற்கை அனர்த்தங்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து கைகொடுத்திருந்தது.

சமயம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் முன்னுரிமை வழங்கும் சூரியன், எமது கலை, கலாசார, விளையாட்டு என்ற துறைகளில் தம்மாலான பங்களிப்பை தமது உறவுகளுக்கு வழங்கி வருகின்றது. குறிப்பாக எந்த விளையாட்டாக இருந்தாலும் தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும், வேகமாகவும் நேரத்திற்கேற்ப வழங்கி தனக்கென்று தனித்துவ பாதையை சூரியன் வகுத்துள்ளது என்றால் அது மிகையாகாது.

இலங்கையின் வானொலி வரலாற்றிலே எம்மவர் பரந்து வாழும் எமது நாட்டின் சகல பிரதேசங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களுடன் உறவாடி நேயர்களுடன் நெருக்கத்தை உண்டாக்கி அசைக்க முடியாத சொந்தங்களை கொண்ட ஒரே வானொலி நமது சூரியன், சூரியனின் இத்தகைய பயணங்களை பின்தொடர்ந்து ஏனைய வானொலிகளும் இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தன.

இவற்றுடன் மட்டுமல்லாது சூரியன் வானொலியில் எப்போதுமே காலத்திற்கேற்ப புதுமைகள் புகுத்தப்படுவது வழமை.

நிகழ்ச்சிகளாக இருந்தாலும், வானொலியின் நிலைய குறியிசைகளாக இருந்தாலும் காலத்திற்கேற்ப மக்கள் ரசனைக்கேற்ப தயாரித்து, அதனை வடிவமைத்து அதிக நேயர்களின் பாராட்டுக்களை பெறுவது சூரியனின் தயாரிப்புக்களின் பெருமை.

அவ்வாறே அண்மைய சூரியனின் தயாரிப்பான “மழைவிழியின்” பாடல், உலக கிண்ண கிரிக்கட் போட்டிக்கான “ஓடு ஓடு ஓடிப்போடா” பாடல்இ13 ஆம் ஆண்டு சிறப்புப்பாடலான கண்டோம் கண்டோம் பாடல் போன்றன இன்று பல உள்ளங்கள் விரும்பி கேட்கும் அளவுக்கு பிரபல்யமாகி உள்ளன.

புதிய பாடல் ஒன்று அறிமுகமானவுடனேயே முந்திக்கொண்டு நமது சூரியனில் கேட்கமுடியும்.

24 மணித்தியாலங்களும் புதுமைகளை புகுத்த வேண்டும் என்று நினைக்கின்ற இளைஞர் பட்டாளத்தை சிறப்பாக வழிநடத்துகிறார் ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. ரெய்னோ சில்வா அவர்கள். இவரின் தூர நோக்குமிக்க சிந்தனையிலும் பண்பான குணத்திலும், நிறுவனம் ஆரம்பித்த காலம் முதல் இன்று வரை ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை இலங்கையின் முதற்தர வானொலி வலையமைப்பாக கொண்டுசெல்வதற்கும் தன்னுடைய அர்ப்பணிப்பான சேவையில் இன்று நிறுவனத்தின் உரிமையாளராகவும் அதன் தலைவராகவும் உயர்ந்து நிற்கின்றார் திரு. ரெய்னோ சில்வா அவர்கள்.

சகல துறைகளிலும் சிறப்பாக பிரகாசிக்கும் சூரியன் வானொலியின் தலைமையாளர் என்ற கௌரவத்துடன் தன்னுடைய சிறந்த அர்ப்பணிப்புடனான சேவையினூடாக சூரியன் வானொலியின் தலைவரும் சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான திரு.எஸ் நவநீதன் அவர்கள் சூரியக்குடும்பத்தின் ஆத்மார்த்தமான ஆதரவுடன் சிறப்பாக சூரிய குடும்பத்தை வழிநடத்துகிறார்

இவர்களுடன் வானொலித்துறையிலும்; கலைத்துறையிலும் அனுபவம் கொண்டவரும் சிரேஷ்ட ஒலி ஒளிபரப்பாளரும் பிரபல நடிகருமான திரு. சி நடராஜசிவம் அவர்கள் இப்போது ஆசிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் அவர்களுக்கும், சூரியன் வானொலிக்குமான சிரேஷ்ட ஆலோசகராகவும் திகழ்கிறார்;.

இவர்களுடன் சூரியன் வானொலியில் கிழமை நாட்களில் காலை 10 மணிமுதல் இசைச்சமர் நிகழ்ச்சியை வழங்குகின்ற திரு. சந்திரமோகன் மற்றும்; மாலை நேரங்களில் கும்மாளம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் திரு.பரணீதரன் ஆகியோர் நிகழ்ச்சி முகாமையாளர்களாக பொறுப்பேற்றுள்ளார்கள்.



இவர்களுடன் சூரியன் நிகழ்ச்சிகளிலும் ஏனைய செயற்பாடுகளிலும் ஒவ்வொரு அறிவிப்பாளர்களின் பங்களிப்பும் சிறப்பாக காணப்படுகிறது. சிரேஷ்ட அறிவிப்பாளர்களாக ரிம்ஷாட், டிலான், நிஷாந்தன், லங்கேஷ், ஷைலி, மேனகா, மற்றும் சஹானா, காயத்ரி, தரணி, பிருந்தகன், வர்ஷி போன்றவர்களின் திறமையும் பாராட்டப்பட வேண்டியவை.

இவர்களுடன் சிரேஷ்ட பகுதி நேர அறிவிப்பாளர்களாக வானொலி துறையில் அனுபவம் கொண்ட வியாசாஇமுகுந்தன் ஆகியோருடன் மணிவண்ணன், மற்றும் சுமித்; ஆகியோh சிறப்பாக கடமை புரிகின்றனர்.

சூரியனின் நிலையக்குறியிசைகள் மற்றும் தயாரிப்புகளுக்கு இசை வழங்கும் பணியினை மிகவும் சிறப்பாக பிரனீவ் மேற்கொண்டுவருவதோடு,
சூரியனின் இசைக்களஞ்சியத்தில் பெர்லிங்டனும் அலுவலக பணிகளை திருமதி. பிறிஸ்கா மஹேஸ்வரன். ஆகியோர் மேற்கொண்டுவருகின்றனர்.

சூரியனின் நிகழ்ச்சிகள் எவ்வளவு தூரம் மக்கள் மத்தியில் பிரபல்யம் பெறுகின்றதோ அதே போன்றுதான் மக்களுக்கு தேவையானவற்றை தேவையானநேரத்தில் சுடச்சுட செய்திகளாகவும் உலக விடயங்களையும் நாட்டின் உடனடி நிகழ்வுகளையும் வேகமாக முந்திக்கொண்டு சூரியன் செய்திகளாக வழங்குவதில் சூரியன் செய்திப் பிரிவினர் என்று;ம் முன்னிலையில் திகழ்கின்றனர். சூரியன் செய்திப் பிரிவின் முகாமையாளராக ஊடகத்துறையில் அனுபவம் கொண்ட திறமையான திரு. எம். இந்திரஜித் அவர்களும் ஊடகத்துறையில் அனுபவம் கொண்ட வி எஸ் சிகாமணியும்இ சதீப்குமார், விக்னேஷ்வரன், நாகவாணிராஜா, கிருஷ்ணகுமார் ஆகியோரும் இவர்களுடன்; தமது சேவைகளை சிறப்பாக வழங்குகின்றார்.

சூரியனின் வெளிக்கள நிகழ்ச்சிகளை திட்டமிட்டு அதனை சிறப்பாக வழிநடத்தி பல சாதனைகளை படைத்து இன்று வரைக்கும் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவும் சூரியனின் வளர்ச்சியில் கைகோர்த்திருக்கிறார்கள். இதனடிப்படையில் சூரியனின் திட்டமிடல் விரிவாக்கல் பிரிவில் அனுபவம்கொண்டவரும் கள்ள மனத்தின் கோடியில் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கும் திரு. அஷ்ரப் அவர்கள் திட்டமிடல் விரிவாக்கல் முகாமையாளராக சிறப்பாக வழி நடாத்த, திட்டமிடல் விரிவாக்கல் சிரேஷ்ட அதிகாரி அஜித்குமாருடன் கார்த்திக் ஆகியோரும் தங்களது வெளிக்கள நிகழ்ச்சிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

1998ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் திகதி இலங்கையின் வானொலி வரலாற்றில் புரட்சிகரமான வானொலியாய் தடம்பதித்த சூரியன் வானொலி;, இன்றுவரை பல்வேறு தடைகளையும்இசவால்களையும் எதிர்கொண்டு சூரியக்குடும்பத்தின் முழு முயற்சியுடனும் ஒற்றுமை உணர்வுடனும் செயற்பட்டு 13 ஆண்டுகளாக வீர நடைபோட்டு இன்றும் முதற்தர வானொலியாக திகழ்கிறது. புதிய ஆண்டில் காலடி எடுத்து வைக்கவுள்ள சூரியன் பல புதிய நிகழ்ச்சிகளையும் பல மாற்றங்களையும் செய்யவுள்ளதாகவும் அறிந்தோம்.
எந்த வானொலியும் எட்டமுடியாத உயர்ந்த நிலையில் இருக்கும் சூரியன் வானொலிக்கு எமது வாழத்;துகளை தெரிவித்துக்கொள்கிறோம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக