Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

செவ்வாய், 29 மே, 2012

நான்

நான்' படம் மூலம் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்தும் இசையமைப்பாளர் விஜய்ஆன்டனி,படத்தின் இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். அதற்காக இந்தப் படத்தில் புதுமுக கவிஞர் ஒருவரை அறிமுகப்படுத்த விரும்பியவர் பாடல்களுக்கான மெட்டை தன் இணையதளத்தில் கொடுத்திருந்தார்.

மெட்டுக்கு பொருத்தமான பாடல் எழுதும் கவிஞரின் பாடல்,நான்' படத்தில் இடம் பெறும் என்றும் அறிவித்திருந்தார்.
இதற்குப்பிறகு தான்; சொன்னது தப்பா... தப்பா...' என்று யோசிக்க ஆரம்பித்தார். உலகம் முழுக்க இருந்து பாடல்கள் குவிந்தன. பார்த்ததும் திக்குமுக்காடிப் போனவர், ஒருவழியாக ரிலாக்ஸ் ஆகி, மெட்டுக்கு பொருத்தமான பாடலை தேர்ந்தெடுத்தே விட்டார். அந்தப் பாடலை எழுதியவர் ஈழத்துக்கவிஞர் பொத்துவில் அஸ்மின்.அவரை தன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தி
கௌரவிக்க இருக்கிறார். பாடல் வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமான முறையில் விரைவில் நடைபெறவுள்ளது.

வெள்ளி, 25 மே, 2012

எனக்கு அறிமுகம் தந்த சக்தியும், சூரியனும்

இலங்கையின் இளம் இசைக்கலைஞர் கந்தப்பு ஜெயந்தன்
தினக்குரலின் சகோதர வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த பேட்டி

நேர்காணல்:எஸ்.ரோஷன்

இப்போதெல்லாம் மனதைக் கவரும் சில பாடல்களைக் கேட்டு விட்டு அது எந்தப்படத்தில் எந்தத் தென்னிந்தியப் பாடகரால் பாடப்பட்டது என்று தேடிப்பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்.
அவை நம்நாட்டுப் பாடல்கள்! நம் மண்ணின் இசையமைப்பாளர்கள், பாடகர்களின் புதிய படைப்புகள்!
நேர்த்தியான இசைக்கோவை, வளமான குரல்வளம், இசைக்கோர்ப்பில் புதிய தொழில் நுட்பங்கள் என எம்மவர்களும் அசத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.
இன்று ஏராளமான புதியவர்கள் இலங்கையின் இசைத்துறையில் பிரவேசித்திருக்கின்றார்கள். இவர்களில் பலரை வெளியுலகிற்கு அறிமுகம் செய்த பெருமை ஊடகங்களையே சாரும்!
அவ்வாறு ஊடகங்களால் வெளிக்காட்டப்பட்டு பல புதிய இசைப்படைப்புகளுக்குச் சொந்தக்காரர்தான் கந்தப்பு ஜெயந்தன்.
கந்தப்பு ஜெயரூபன், கந்தப்பு ஜெயந்தன் ஆகிய இரு பெயர்களும் இலங்கையின் இசை ரசிகர்களுக்கு மிக நெருக்கமானவை! கந்தப்பு ஜெயந்தன் இந்த வாரம் உங்கள் பேஸ்புக் பகுதியில்:

பிறந்தது யாழ்ப்பாணம் கரவெட்டியில். தந்தை பொலிஸ் துறையில் பணியாற்றியவர். எனக்கு இரு சகோதரர்கள். தம்பி ஜெயரூபனுக்கு அறிமுகம் தேவையில்லை. இலங்கையின் சிறந்த பாடகர். சக்தி வானொலி நடாத்திய வானொலி சூப்பர் ஸ்டார் போட்டியில் வெற்றி பெற்றவர். சகோதரி ஜெயபிரதா அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடைபெற்ற சிறந்த இளம் பாடகிக்கான விருதை பெற்றுள்ளார். இப்பொழுது யாழ்.ராமநாதன் நுண்கலை கல்லூரியில் இசைத்துறையில் பயின்று வருகிறார்.

இசைத்துறை பிரவேசம்?

இசையில் ஆர்வம் ஏற்பட காரணம் எங்கள் தந்தையார். பொலிஸ் துறையில் இருந்தாலும் கலை ஆர்வம் மிக்கவர். அவரும் ஒரு பாடகர். பல மெல்லிசை பாடல்களை பாடியவர். அத்தோடு ஒரு நடிகரும் கூட. பல மேடை நாடகங்களில் பங்கேற்றுள்ளார். அத்தோடு எங்கள் தாயாரின் சகோதரர்களும் பிரபல்யமான கலைஞர்கள். அவர்களுள் ஒருவர் கீழ்கரவை கி.குலசேகரன். சிறந்த பாடகர், சிறந்த கவிஞர். கருணாகரன், தனலட்சுமி (சங்கீத ஆசிரியை) ஆகியோர் பிரபல பாடகர்கள். அத்தோடு எங்களது சித்தப்பா மதியழகன், முருகேஷ், வேலுப்பிள்ளை ஆகியோர் நாடகக் கலைஞர்கள். இப்படிப்பட்ட கலைக்குடும்பத்தில் பிறந்த எமக்கு கலையார்வம் இயற்கையாகவே வந்ததில் அதிசயமில்லை.

கிடைத்த முதல் அங்கீகாரம்?

சூரியன் எப்.எம். வானொலி ஆரம்பகாலத்தில் நடாத்திய பாடுவோர் பாடலாம் நிகழ்ச்சியே எனக்கு முதல் அடையாளம் எனலாம்.
சூரியன் அறிவிப்பாளராக இருந்த விமல் மூலமாக அறிமுகம் செயப்பட்டேன். முதன் முதலாக நான் உருவாக்கி வைத்திருந்த மனமே கோபமா என்ற ராஜேந்திரா அவர்கள் எழுதிய
பாடலை சூரியன் வானொலியில் அரங்கேற்றியவர் அறிவிப்பாளர் ஏ.ஆர்.வி.லோஷன் அண்ணா. அதன் பின்னர் சக்தி வானொலியின் அறிவிப்பாளர் அபர்ணா சுதன் அண்ணா நம்மஹிட் நிகழ்ச்சி மூலம் என்னுடைய பாடல்களுக்கு மற்றுமொரு முகவரி கொடுத்தார்.
அதன் பின்னர் சூரியன் வானொலிக்காக இசை அமைத்து பாடிய வானத்து சூரியனே வாடா பாடல் மிக பிரபலம் பெற்று இன்றும் சூரியனின் நிலையக் குறியிசையாக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் எனக்கு கிடைத்த மிகப்பெரும் அங்கிகாரம் என்றால் இலங்கை முழுவதும் சக்தி தொலைக்காட்சியால் நடாத்தப்பட்ட இசை இளவரசர் போட்டிதான். பல லட்சம் வாக்குகளால் இசை இளவரசராக முடிசூடப் பட்டோம்.

இலங்கை ஊடகங்கள், ரசிகர்கள் மத்தியில் உங்கள் பாடல்களுக்கு வரவேற்பு எப்படியிருக்கிறது?

ஆரம்ப காலங்களில் என்னை வளர்த்த எமது வானொலிகளை என்றைக்கும் மறக்கமுடியாது. தொடர்ந்தும் அவர்களது ஆதரவு வேண்டும். உண்மையில் இலங்கை ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைக்கிறது. இப்பொழுது நாங்கள் இணையத்தளங்கள் ஊடாகவே பாடல்களை வெளியிடுகின்றோம். உலகமெங்கும் எமது பாடல்கள் வெற்றி நடை போடுகின்றன. பிரபல்யமான வானொலிகளில் எமது பாடல்களை பல ரசிகர்கள் விரும்பிக் கேட்டு வருகிறார்கள். அண்மையில் வெளியிட்ட காந்தள் பூக்கும் தீவிலே பாடல், யாழ்தேவி, கண்ணோடு கண்கள் பேசுதே, எங்கோ பிறந்தவளே, வவுனியா மண்ணே போன்ற பாடல்கள் பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் விரும்பி ரசித்த பாடல்கள்.
உலகம் எங்கும் இருந்து பல நூற்றுக்கணக்கானவர்கள் தொலைபேசிகள் ஊடாக வாழ்த்துக்களை வழங்கி உட்சாகப் படுத்தி வருகிறார்கள். WWW.YOUTUBE.COM இணையத்தளத்தில் JEYANTHAN13 என்பதை டைப் செது என்னுடைய புதிய பாடல்களைப் பார்த்து ரசிக்கலாம்.
அல்பங்கள் வெளியிட்டுள்ளீர்களா?

திருவரங்கன் கீதங்கள்,
நறுமண மலர்கள்,
எங்களால் முடியும்,
மாற்றத்தின் ஆரம்பம் நாமே,
இதயத்தின் ஓசை,
அம்பாளின் அருள் பிரசாதம்,
நெடுங்கேணியின் தெவீக ராகங்கள்,
காந்தள் பூக்கும் தீவிலே,

இவற்றோடு யாழ்தேவி என்கிற இசைத் தொகுப்பையும் மிக விரைவில் வெளியிட உள்ளேன்.
தென்னிந்திய சினிமாவில் வாப்புத்தேடும் எண்ணம்!
என்னுடைய பாடல்களை ரசித்து என்னுடைய பாடல்களுக்கு கருத்துகளைக் கூறி என்னை ஆற்றுப்படுத்திவரும் இரு இயக்குனர்கள்! ஒருவர் இயக்குனர் விக்ரமன் மற்றவர் விஜயின் பகவதி திரைப்படத்தை இயக்கியவரும் அங்காடித்தெரு திரைப்படத்தின் வில்லன் நடிகர் வெங்கடேஷ் ஐயா! இவர்கள் என்னுடைய பாடல்களை பார்த்து எனக்கு தமது திரைப்படத்தில் வாப்புத் தருவதாக கூறியுள்ளார்கள். அது நிறைவேறும் போது அறியத்தருகிறேன்.

எதிர்கால இலக்கு அல்லது புதிய முயற்சி?

எமக்கு என்று ஒரு தனித்துவமான இசையை உருவாக்க வேண்டும். நமது மண்வாசம் கலந்த பாடல்களை உருவாக்க வேண்டும்.
புதிய முயற்சி என்றால் யாழ்தேவி என்கின்ற இசைத் தொகுப்பை வெளியிட உள்ளதுதான்.
என்னோடு இணைந்துகொள்ள விரும்பும் கலைஞர்கள் பின்வரும் வழிகளில் தொடர்பு கொள்ளலாம்.

facebook: music director k.jeyanthan
yahoo: kandappujeyanthanyahoo.com
gmail: jeyanthan4yahoo.com
t.p.0770886358
skype: kandappujeyanthan

திங்கள், 7 மே, 2012

சிறுவயதுக் கனவு நனவானது!

சூரியன் அறிவிப்பாளர் கணேசராசா மயூரன் தினக்குரலின் சகோதர வெளியீடான
உதய சூரியனுக்கு
அளித்த பெட்டி.

நேர்காணல்:எஸ்.ரோஷன்

நான் பிறந்தது மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலை கிராமத்தில். குடும்பத்தின் முதல் வாரிசு. தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் என அழகான அன்பான குடும்பம்.சிறுவயது முதலே வானொலி மீது தீராத காதல் என்று தான் சொல்ல வேண்டும். வானொலி நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்கும் எனக்கு நானும் ஒரு அறிவிப்பாளனாக வரவேண்டும் என உந்துதல் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. என் ஆர்வத்திற்கு தாய், தந்தையர் இருவரும் கைகொடுத்தனர். சிறந்த குரல்வளம் இருக்கிறது, சிறந்த அறிவிப்பாளராக வருவாய் என்று நம்பிக்கையூட்டினார்கள். அந்தக் கனவு இப்போது நனவாகிவிட்டது.
ஆரம்பத்தில் தலைநகரில் இணையத்தள வானொலி ஒன்றில் அறிவிப்பாளராக கடமையாற்றினேன். அதன் பின்னர் சூரியன் குடும்பத்திற்குள் நுழைந்தேன். ஆரம்பத்தில் எனக்கு பயிற்சியளித்து ஆலோசனைகளை வழங்கியவர் சூரியன் எப்.எம்.இன் சிரேஷ்ட ஆலோசகர் நடா அண்ணா. அதே போன்று சூரியனின் தலைமை நிறைவேற்று பொறுப்பதிகாரி நவா அண்ணா ஊடகத்துறையில் உள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்றும் எவ்வாறு தனித்திறமையை வளர்த்து அறிவிப்பாளராக வரவேண்டும் என்பதை உணர்த்தி என்னை உற்சாகமூட்டியவர். அத்தோடு சூரியன் எப்.எம்.இன் நிகழ்ச்சி முகாமையாளர்களான சந்துரு அண்ணா மற்றும் பரணி அண்ணா ஆகியோர் என்னை தட்டிக் கொடுத்து வளர்ப்பவர்கள். இத்துறை என்னை இன்னும் மகிழ்விப்பதற்கு காரணம் நேயர்கள். அவர்கள் தரும் அன்பும் ஆதரவும்தான் எம்மை உற்சாகமாகப் பணியில் ஈடுபட வைக்கிறது.
மறக்க முடியாத சம்பவம்!
உயர்தரப் பரீட்சை வாழ்வில் முக்கியமான கட்டம். பரீட்சைக்கு முதல் நாள் மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு விட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மறுநாள் பரீட்சை மண்டபத்தில் அந்த வலியோடு பரீட்சை எழுதியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.நண்பர்கள் பற்றி...?
நண்பர்கள் என் வாழ்கையில் முக்கியமான அத்தியாயம். நான் தரம் 09 இல் பாடசாலையில் படிக் கும் போது பாடசாலை திறப்புவிழாவுக்கு என்னை மேடையில் அறிவிப்பு செய்ய திடீரென அழைத்து விட்டார்கள். முன் ஆயத்தம் எதுவுமின்றி அறிவிப்புச் செய்தேன். அன்று நண்பர்கள் தந்த பாராட்டையும் உற்சாகத்தையும் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.அறிவிப்புத் துறையில் செய்ய நினைப்பது...? நிறைய விடயங்களை தேடி நேயர்களுக்கு புதிய விடயங்களை சொல்லவேண்டும். ஊடகத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும். ஊடகத்துறையில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் செயற்பட வேண்டும்.நேயர்களுக்குச் சொல்வது...?
நல்ல நிகழ்ச்சிகளைக் கேளுங்கள். நல்ல நிகழ்ச்சிகளுக்கு நிறைய வரவேற்பு கொடுங்கள்.