Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 23 மார்ச், 2012

இலங்கை மக்களைப் பார்த்து வியக்கிறேன்...

தினக்குரலின் சகோதர வெளியீடான வியாழன் தோறும் வெளிவரும் உதயசூரியனின் FACE BOOK பகுதியில் கடந்த வாரத் தொடர்ச்சியின் மிகுதிபக்கத்தில் இந்திய பின்னணிப்பாடகர் எம்.கே.பாலாஜியுடன் நேர்காணல்......

நேர்காணல்: ரோஷன்

நான் பாடகனாக உருவாகி மேடைப் பாடகனாக பிரபல்யமாகி சினிமா பின்னணிப் பாடகனாக உருவான விதம் பற்றி கடந்த வாரம் சொல்லிட்டேன். இந்தவாரம் திரைத்துறையில் எனக்கு கிடைச்ச அனுபவங்களை உங்களோட பகிர்ந்துக்கப் போறேன். முதல் அனுபவம்என் முதல் பாடல் சுராங்கனி. நான் பல மேடைகளில் பாடியிருக்கிறதால் முதல் ரெக்கோடிங் சமயத்தில் எந்த பயமோ பதற்றமோ இருக்கல்ல. செம ஜாலியா இருந்தது. முதல் பாட்டையே இவ்வளவு நேர்த்தியா பாடுற முதல் பாடகனை நான் பார்க்கிறேன்னு அவர் சொன்னாரு. இந்தப் பாராட்டை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இன்னுமொரு மறக்க முடியாத அனுபவமும் இருக்குது. அங்காடித்தெரு படத்தில எங்கே போவேனோ பாட்டு. அந்த பாட்டைப் பாடும் போது உண்மையிலேயே ரொம்பக் கஷ்டப்பட்டேன். அந்தப்பாட்டுல சில வரிகளை ரொம்பவும் உச்ச ஸ்தாயில இன்னும் சொல்லப்போனா கத்திப் பாடனும். ஆனா என் குரல் அதுக்கு ஒத்துழைக்கலை. தொண்டை அடைச்சிடுச்சி. இந்தப் பாட்டு கைவிட்டுப் போயிடுமோன்னு கவலைப்பட்டேன். ஆனா விஜய் அன்டனி சேர் வந்து பாலாஜி இந்த பாடலை நீங்கதான் பாடணும். நாளைக்கு வந்து இந்த பாடலை பாடுங்க என்று சொன்னார். எனக்கு தெரிஞ்சு ஒரு பாட்டை ரெண்டாவது நாளாக பாடின பாடகன் நானாகத்தான் இருப்பேன். அப்புறம் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் படத்தில் ஒரு பாட்டு. கவிஞர் வைரமுத்து தான் வரிகள் எழுதியிருந்தாரு. அந்தப்பாட்டில் ஒரு வரிய 3 தடவை பாடவேண்டும். 3 தடவைகளும் மூன்று விதமான வொய்ஸ் குடுக்கனும். ரொம்பவும் சிரத்தை எடுத்துப் பாடினேன். பாட்டும் ரொம்ப திருப்தியா வந்திச்சி. ரொம்ப திருப்தியா வீட்டுக்குப் போனேன். 3 நாளைக்கப்புறம் இசைமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் என்னை தொலைபேசியில கூப்பிட்டு வைரமுத்து சேர் எழுதிய வரிகள் திருப்தியாக இல்ல திரும்பவும் மாற்றி எழுதியிருக்காரு நீங்க திரும்பவும் வந்து பாடனும்னு சொன்னாரு. ரொம்பவும் கவலையா இருந்துச்சி!சாதிக்க நினைப்பது அண்மையில் வெளிவந்த நண்பன் திரைப்படத்தில் விஜய் ஒரு வசனம் சொல்லுவாரு. வெற்றியைத் தேடி ஓடாதே அறிவைத் தேடி போ வெற்றி உன் பின்னால வரும்னு. என்னை பொறுத்த வரைக்கும் பாலாஜி ஒரு பாடகராக ஒரு 1000 ஹிட் கொடுத்திருக்கார். 2000 பாட்டு பாடியிருக்காருன்னு இருக்கக் கூடாது. பாலாஜி நல்ல பாடகராக வெளியில தெரியனும். ஹிட் என்றது தானா வரும் இலங்கை மக்களைப்பற்றி..?இலங்கையில எனக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறாங்க. முகம் தெரியாத ரசிகர்கள் சமூக இணையத்தளங்கள் மூலம் வாழ்த்து தெரிவிக்கிறாங்க. அவங்க காட்டுற அன்பு, பாசம் எனக்கு பிடிச்சிருக்கு. இலங்கையில மிகப் பெரிய போர் நடந்தும் அந்த மக்கள் தைரியமா மீண்டு வந்திருக்காங்க. அண்மையில் நான் சூரியன் எப்.எம். மெகா பிளாஸ்ட்டுக்காக இலங்கை வந்தபோது இலங்கை மக்களை பார்த்து நான் வியந்து போனேன். போரின் வடுக்களை சுமந்து கொண்டும் தைரியமாக வாழ்க்கையை எதிர்கொள்கிற அந்த மக்களைப் பார்த்து நாம் பாடம் கத்துக்கனும். நடிக்கும் ஆசை உண்டா?அழகா இருக்கீங்க. நீங்க ஏன் படத்துல நடிக்கக்கூடாதுன்னு பலரும் என்கிட்ட கேட்டிருக்காங்க. நடிக்க சந்தர்ப்பமும் கிடைச்சது. நான் மறுத்துட்டேன். இப்போதைக்கு நான் ஒரு பாடகன். அதை திருப்தியா செய்யணும். மக்கள் மனதில் என்றைக்கும் நிலைக்கும் பாடகனாகனும் என்கிறார் பாலாஜி அவர் எண்ணம் ஈடேற உதயசூரியனும் வாழ்த்துகளைப் பகிர்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக