Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

சனி, 27 ஏப்ரல், 2013

பில்லா2 சவுண்ட் இஞ்சினியர் கௌசிகன்

தென்னிந்தியத் திரைப்படங்களின் வெற்றிக்கும் அதன் பிரம்மாண்டத்திற்கும் கதை, களம், கதாபாத்திரங்கள் எந்தளவு முக்கியத்துவம் வகிக்கின்றதோ அந்தளவு அப்படத்தின் சவுண்ட் சிஸ்டமும் முக்கியத்துவம் வகிக்கின்றது.
அவ்வாறு அஜித்தின்  பில்லா2 படத்தில் இசையால் அசத்தியவர் கௌசிகன். இவர் ஜேர்மனியைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் இவரது பூர்வீகம் இலங்கை.
இவரது அப்பா சிவலிங்கம் பலராலும் அறியப்பட்டவர். அதாவது ராஜ்சிவா என்று அழைக்கப்படும் எழுத்தாளர். திருகோணமலையைச் சேர்ந்தவர்.
இவ்வாரம் பேஸ்புக் பகுதியில் இணைகிறார் கௌசிகன் சிவலிங்கம்.
ஹாய் வணக்கம்! உங்களுக்கு என்னை அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 இசைத்துறையில் சிறுவயது முதல் ஆர்வமிருந்தாலும் என்னுடைய 5 ஆவது வயதில் அப்பா வாங்கிக் கொடுத்த கீபோர்டுதான் இசைத்துறைப் பயணத்திற்கான முதல் படியாக அமைந்தது. அந்த கீபோர்ட்டில் ""முஸ்தபா... முஸ்தபா...'' என்னும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை முதன் முதலாக  இசைத்துக் காட்டினேன். என்னுடைய இசை ஆர்வத்தை அறிந்து கொண்ட பெற்றோர் இசைப் பள்ளியில் முறையாக இசையைக் கற்றுக்கொள்வதற்காக சேர்த்து விட்டார்கள். கீபோர்ட்டுடன் மிருதங்கமும் கற்றிருக்கிறேன். இவை இரண்டிலும் குறித்த அளவுக்குத் தேர்ச்சி பெற்ற நான், எனது 15 ஆவது வயதில் பாடல்களை இசையமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டேன். எனது மெட்டுகளுக்கு, அப்பா பாடல் வரிகளை எழுதித் தந்தார். அதுவே என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.
ஐரோப்பிய வானொலிகளில் எனது பாடல்கள் வலம் வந்தன.  இதன் பயனாக சென்னை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நான் சென்னை சென்றதும் சினிமாத்துறையில் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது. பல பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள், இசை வல்லுநர்கள் எனப் பலரின் அறிமுகமும் கிடைத்தன. பாடல் ஆசிரியர் சினேகன் அவர்களின் வரிகளுக்கு எனது இசையமைப்பில் உருவான பாடலொன்று பாடகி சைந்தவி  பாட, “கலசா ஸ்ரூடியோசு இல் பதிவானது. அந்த நொடியில் எனக்கு ஆச்சரியமான நிகழ்வு ஒன்று நடந்தது. அதுவே என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.
எனது பாடல்கள் பதிவு செயப்பட்டுக் கொண்டிருக்கும் கலசா ஸ்ரூடியோவின் இன்னுமொரு தளத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தனது பாடல்களைப் பதிவு செதுகொண்டிருந்தார். அங்கு எனக்கு அவரது அறிமுகம் கிடைத்தது. தொழில்நுட்ப ரீதியாக இருவரும் நிறையப் பேசினோம்.
என்னுடைய இசைப் பயிற்சியை முழுமையாக்குவதற்காக SAE  இல் (Society Of Automotive Engineers) கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நானும் கல்லூரியில் சேர்ந்து ஓடியோ சவுண்ட் என்ஜினியரிங் பட்டப்படிப்பை ஆரம்பித்தேன்.
விடுமுறையில் இந்தியா சென்ற நான் அங்கு ஒரு இசை அல்பம் செயும் நோக்குடன் பாடகர்களை வைத்து பாடல்களைப் பதிவு செதேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில், மலேசியாவைச் சேர்ந்த ‘lady Kash & Krissy’ (எந்திரன் படத்தில் ""இரும்பிலே ஒரு இருதயம்''  என்ற பாடலைப் பாடியவர்கள்),  Where ever You Are, It’s Your Time  என இரண்டு ஆங்கிலப் பாடல்களை எனது இசையமைப்பிலும், இசைக்கோர்ப்பிலும் பாடினார்கள். அந்தப்பாடல்களை நீங்கள் யூடிப்பில் இந்த முகவரியுடாக பார்வையிடலாம். (.http://www.youtube.com/watch?v=cPA7LHybe20 ) ( http://www.youtube.com/watch?v=xXuykCIiNRw ).
அதன் பின்னர் நான் எனது படிப்பிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினேன். 2011 இல், Audio Engineerig Diploma பட்டம் கிடைத்தது. 2011 ஏப்ரல் இந்தியா சென்றேன். யுவனுடன் 4 மாதங்களுக்கு மேல் பணியாற்றினேன். இந்த நேரத்தில் Apple Computer நிறுவனத்தில் பணிபுரிய என்னை அழைத்தார்கள். அங்கு வேலை செது கொண்டே இசைத்துறையிலும் ஈடுபட்டேன்.
மீண்டும் 2012 இல் எதிர்பாராத அழைப்பு ஒன்று யுவன் சங்கர் ராஜாவிடமிருந்து வந்தது. “ஒரு படம் பண்ணப்போறோம். அதில் நீ தான் பிரதான சவுண்ட் எஞ்ஜினியர். உனக்குப் பிடித்த மிக பிரபலமான ஸ்ரூடியோவை நீயே புக் பண்ணு'' என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகள் வரவே இல்லை. கண்கள் கலங்கி விட்டன. சவுண்ட் எஞ்ஜினியராக என்னைத் தேடி யுவன் சங்கர் ராஜாவே ஐரோப்பா வருகிறேன் என்றவுடன் எனக்கு அளவு கடந்த சந்தோஷத்துடன் உடனே ஜேர்மனியில் மிகப்பிரபலமான ஸ்டூடியோ ஒன்றை புக் செதேன். ஸ்டூடியோவில் நான் அவரை சந்திக்கும்வரை என்ன படம் என்று தெரியாது. அவரும் சொல்லவில்லை. அவர் ஜேர்மனி வந்து இறங்கியவுடன் அது அஜித் அவர்களின் “பில்லா2'' படம் என்றார். எனது சந்தோசத் துக்கு அளவே இல்லை.
பில்லா2 படத்திற்காக கடுமையாக உழைத்து பாடல்களை பதிவு செது முடித்தோம். அந்தப்  படத்தின் பாடல்கள் முழுமையடைந்து வெற்றியையும் தேடித்தந்தன. அதன் பின்னர் ஜெயம் ரவியின் நடிப்பில், அமீரின் இயக்கத்தில் உருவான ""ஆதிபகவன்'' படத்துக்கும் சவுண்ட் எஞ்சினியராகக் கடமையாற்றினேன். இன்னும் பல திரைப்படங்களுக்கு சவுண்ட் எஞ்சினியாரகக் கடமையாற்றவுள்ளேன்.
இளவயதிலேயே தென்னிந்தியத் திரைப்பட உலகில், முதல் இசைக்கோர்வையாளர் என்ற பெயர் எனக்கு கிடைத்துள்ளது. அத்துடன் இலங்கைத் தமிழர்களில் முதல் இசைக் கோப்பாளராகவும் தென்னிந்தியத் திரைத்துறையில் கடமையாற்றியிருக்கிறேன். இந்த நேரத்தில் நான் ஒன்று சொல்ல வேண்டும். எனது திறமையை அறிந்து என் விருப்பப்படி என்னை வழிநடத்திய எனது பெற்றோர்களே என் வெற்றிக்கு முதல் காரணம். அத்துடன், எனக்கு ஊக்கம் தந்து எல்லாவிதத்திலும் அக்கறை எடுத்த எனது சகோதரிக்கும் என் நன்றிகள். எப்போதும் உற்சாகப்படுத்தும் என் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
அதேபோல் நான் இன்னும் பண்ணப்போகும் பாடல்களுக்கும், நான் இசையமைக்கும் அல்பங்களுக்கும் ரசிகர்களாகிய உங்களுடைய ஆதரவு என்றும் தேவை. வரும் காலத்தில் நான் தென்னிந்திய இசையமைப்பளராக வருவதற்கு என்னுடைய அப்பா, அம்மாவின் தா மண்ணின் மைந்தர்களாகிய உங்களின் ஆசியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக