Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

சனி, 22 ஜூன், 2013

அறிவிப்பாளராகனும் என்பது என் சிறுவயதுக் கனவு!

எம்மில் பலருக்கு திரைப்படங்களை பார்ப்பதற்கு முதல் அப்படங்களின் கதைகளை அறிவதில் ஆர்வம் அதிகம். அப்படிப்பட்ட ஆர்வலர்களுக்கு விருந்து படைப்பது வர்ணம் டி.வி.யின் திரைக்கதம்பம் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பிரியா லுவேந்திரன்.
இந்தவாரம் உதயசூரியன் வாயிலாக சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.
ஹாய் ரசிகர்களே! நான் உங்கள் பிரியா லுவேந்திரன் (பிரியதர்ஷினி லுவேந்திரன்) 
நான் பகுதி நேரமாகத்தான் வர்ணம் தொலைக்காட்சியில் தொகுப்பாளரா இருக்கேன்.
 அப்பா, அம்மா, செல்லத் தங்கை மற்றும் என்ன நேசிக்கிற தாத்தா, பாட்டி இதுதான் என்னுடைய குடும்பம். படிச்சது சைவமங்கையர் வித்தியாலயத்தில்.
பாடசாலைக் காலத்தில ரொம்ப குறும்புத்தனமான பொண்ணு. தொகுப்பாளராக வரனும் என்றது என்னோட சிறுவயது கனவு. என்னுடைய கனவு நனவாக மூன்று பேர் காரணகர்த்தாக்களாக இருக்கிறாங்க. ஒன்று ஹிஷாம் அண்ணா மற்றையது என்னுடைய அத்தை நித்தியகல்யாணி பத்மநாதன், மற்றையது பவனீதா லோகநாதன். இவர்களூடாகவே எனது தொகுப்பாளர் பயணம் தொடர்கிறது. 
*முதன் முதல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவம்  2012 செப்டம்பர் 20 ஆம் திகதி என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அதுதான் என்னுடைய ஊடகப் பயணத்தின் முதற்படி.
*நீங்கள் தொகுத்து வழங்கும் திரைக்கதம்பம், டொப் டென் சோங்ஸ் அனுபவம் பற்றி சொல்லுங்கள்: ரொம்பவே சந்தோஷமா நிகழ்ச்சி பண்ணியிருக்கிறேன். சில சமயம் ஸ்கிரிப்ட் மறந்தாலும் சொல்லிக் கொடுக்க பலபேர் இருக்காங்க. சில படங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டதே இல்லை. நிகழ்ச்சிக்காக அந்தப் படங்களை பார்த்த சந்தர்ப் பங்களும் உண்டு.
*மனம் கவர்ந்த நேயர்கள் பற்றி: என்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் அவங்கதான். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். இந்தத் தருணத்தில் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும் சொல்லிக் கொள்கிறேன்.
*நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கிடைத்த அனுபவங்கள்: ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுவாரஷ்யமான அனுபவம்னு தான் சொல்லனும். குறிப்பாகச் சொன்னால் காதலர் தின சிறப்புப் பேட்டி நிகழ்ச்சியை சொல்லலாம். அது எனக்கு மட்டுமல்ல எங்கள் குழுவுக்கே சுவாரஷ்யமான அனுபவமாக இருந்தது.
 உங்களைக் கவர்ந்த அறிவிப்பாளர்கள்: இலங்கையில் ஹிஷாம் மொஹமட், இந்தியாவில் கோபிநாத், சிவகார்த்திகேயன், டிடி
*உங்களுடைய ரோல் மொடல்: எப்பவுமே அப்பாதான். ஆனால், அதிகமான விஷயங்களை கற்றுக்கொண்டது அம்மாவிடம்தான்.
* ஆச்சரியப்பட வைத்த நபர் : நீயா நானா கோபிநாத். அவரைப்பார்த்து ஆச்சரியப்படாத சந்தர்ப்பங்களே இல்லை.
*வர்ணம் தொலைக் காட்சியில் பணியாற்றுவது பற்றி: அங்கு பணிபுரிகிறோம் என்பதை விட ஒரு குடும்பமாக வாழ்கின்ற உணர்வுகளே அதிகம்.
*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்: 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி நடந்த சூப்பர் சிங்கர்ஸுடனான பேட்டி. அதுதான் என்னுடைய முதல் பேட்டி நிகழ்ச்சி. என்னுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்ற சந்தர்ப்பமும் அதுதான். அப்புறம் என்னுடைய சாதாரணதர, உயர்தர பெறுபேறுகள் மூலம் பெற்றோரை பெருமைபடுத்திய அருமையான அந்தத் தருனங்கள்.
*சந்திக்க விரும்பும் நபர்: சந்தர்ப்பம் கிடைத்தால் கோபிநாத் மற்றும் இயக்குநர் பாலாவையும் சந்திக்க வேண்டும்.
* படித்ததில் உங்களுக்குப் பிடித்தது: உன் கண்ணில் நீர் வழிந்தால்  என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ  கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ போன்ற பாரதியின் அற்புதமான கவிவரிகள்
*நேயர்களுக்குக் கூற விரும்புவது: உங்களுடைய உண்மையான அன்பிற்கு தலை வணங்குகிறேன். இதேபோன்ற ஆதரவு என்றும் எனக்குத் தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக