Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 1 மார்ச், 2013

ஏ.ஆர்.ரகுமான் மாதிரி இருக்கணும்

5வருடங்களை வெற்றிகரமாகக் கடந்து 6 ஆவது ஆண்டிலும் தனது பயணம் தொடரும் வெற்றியில் உற்சாகமாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நேயர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனித்துவத்தை பேணிக் கொண்டிருக்கும் அறிவிப்பாளர் சக்சி! 
அன்பான உதயசூரியன் வாசகர்களும் வெற்றி அறிவிப்பாளர் சக்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

என்னைப்பற்றி சொல்லனும்னா?  அம்மா, அப்பா நான் என்ற ஒரு சிறு குடும்பம் எங்களது. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியல் கல்வி கற்றேன். பாடசாலைக் காலத்திலிருந்தே அறிவிப்பாளர் மன்றத்தில் உறுப்பினராகவும் தொடர்ந்து தலைவராகவும் இருந்திருக்கிறேன். இவ்வாறு இருக்கும் பொழுது பாடசாலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து  வழங்கும் வாப்பு எனக்குக் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் பாடசாலையில் வருடந்தோறும் நாங்கள் நடத்து Hindu FM  வானொலியும் அறிவிப்புத் துறைக்கு வருவதற்கு ஒரு உந்துசக்தியாக இருந்தது.  பாடசாலைக்காலத்தில்  இருந்தே வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாப்புகள் கிடைத்ததோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் அக்னி என்ற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடிய வாப்பும் கிடைத்தது.  இதன்மூலமாக உயர்தரம் முடித்துவிட்டு இந்தத் துறைக்கு உத்தியோகபூர்வமாக வந்தேன்.
நீங்கள் தொகுத்து வழங்கும் vettri FM வானொலியின்  நிகழ்ச்சி பற்றி சொல்ல முடியுமா?
நகைச்சுவை பூர்வமாக நிறைய விடயங்களை சொல்லும் கலகலப்பு நிகழ்ச்சி. வாரநாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை, வெற்றி நைற் டிரைவ்  (Night Drive) மொழி கடந்த இசையினால் (Tamil/ English/ Hindi/ Sinhala இசை) மக்களைக் குதூகலப்படுத்தும் ஒரேயொரு நிகழ்ச்சி (சனி இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை), ஞாயிறு  1 மணி முதல்  3 மணி வரை சக்சியுடன் சனிவூட் நிகழ்ச்சி போன்றவற்றை தொகுத்து வழங்குகின்றேன்.

அறிவிப்புத்துறையைச்  சார்ந்தவர்கள்  இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி இருக்கக்கூடாது?
மக்களுக்குத் தேவையான  விடயங்களை உரிய நேரத்தில் உரிய முறையில் ஊடகத்தில் சொல்ல வேண்டுமே ஒழிய வெளியில் பிதற்றுபவனாக இருக்கக் கூடாது.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது நடந்த சுவாரஷ்யமான அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.
நிகழ்ச்சி நடத்துவதே ஒரு சுவாரஷ்யம் தான், தினம் தினம் ஏராளம் சுவாரஷ்யங்கள் நடக்குது. எதை சொல்றது?

பாடசாலை அனுபவம் எப்படி?, பாடசாலையில் நீங்கள் செத சேட்டை, அதனால் அடிவாங்கிய அனுபவம் உண்டா?
பாடசாலை காலங்களில் நண்பர்களோடு செத குறும்புகள் ஏராளம்! நிறைய சேட்டைகள் செதிருக்கிறேன். மாணவத்தலைவன் என்றபடியால் பாட நேரத்தில் வகுப்பில் இருப்பதில்லை. இதனால் பாட ஆசிரியர்களின் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறேன். ஒருமுறை எட்டாம் ஆண்டு படிக்கும் போது  உயர்தர வகுப்புக்குள் இருந்த படியால் அப்போதைய அதிபர் என் முதுகில் அடித்த  அடி இன்னும் வலிக்கிறது.

போட்டிகள் நிறைந்த இந்த துறையில் உங்களின் அடையாளம் என்ன?
மைக் முன்னாடி காட்டுக்கத்து கத்துறது, அதாவது சரளமாக கதைக்கிறது. ஒவ்வொரு நாளும் வித்தியாச வித்யாசன நிகழ்ச்சிகளை படைக்க முயற்சி செய்வது. 

இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?
ஒவ்வொருவரிடமும் வித்தியாசமான  ஒவ்வொரு திறமை உண்டு. அவற்றை ரசிப்பேன் நல்லவற்றை பின்பற்றுவேன்.

உங்களுடைய ரோல் மொடல் யார்?
A.R.RAHMAN அவசரப்பட்டு அவர்போல பெரிய இசை மேதையா வரப்போறேன்னு நினைச்சுடாதிங்க.  என்ன தான் இமயத்துல இருந்தாலும் அவர் போல்  எளிமையான இயல்பு எனக்கு எப்போதும் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்.

தொலைக்காட்சியிலும் /  வானொலியிலும்  நிகழ்ச்சி செயும்போது உங்களுக்கு  ஏற்படுகின்ற அனுபவம் அல்லது வித்தியாசம்  பற்றி சொல்ல முடிமா?
இரண்டுமே வெவ்வேறான ஊடகங்கள். உங்களுக்கு தெரியும் வானொலியில் குரல் மட்டுமே வெளிக்காட்டப்படும். ஆனால், தொலைக்காட்சிக்கு உடல் மொழி, சாதாரணமாக அருகிலிருந்து கதைப்பது போன்ற உணர்வை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படுத்தவேண்டியிருக்கிறது.  

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் ஏது? பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? எந்தப்படம்?
விஸ்வரூபமெடுத்த விஸ்வரூபம்  1st day 1st show
நகைச்சுவை நடிகர்: அப்போ வடிவேல் இப்போ சந்தானம்

உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதா சம்பவம் பற்றி சொல்ல முடியுமா?
இன்னும் என் மனதை தாக்கும் கசப்பான அனுபவம் எதுவும் இல்லை, நான் பச்ச மண்ணுப்பா. அப்படியே கெட்ட அனுபவம் ஏதும் நடந்தா அடுத்த நிமிஷமே மறந்துடுவேன்.

எந்த வகையான பாடல் உங்களுக்கு பிடிக்கும்? அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது?
புதிய பாடல்களை எப்போதும் ரசிப்பேன். அண்மைக்காலமா காதல் பாடல்கள் ரொம்பப் பிடிக்குது, காதல் மாதம் என்றபடியாலோ தெரியல...

உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
இசையை ரசிப்பேன், வேலை முடிந்ததும் நண்பர்களோடு அரட்டை, பின்பு குறட்டை.  குறிப்பாக பழைய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை சேகரிப்பது.

உங்களிடம் உள்ள அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன?
கொஞ்சம்  Magic செவேன். இதுதான் என்னுடைய தொலைகாட்சி பிரவேசத்துக்கு உறுதுணையாக இருந்தது.

சந்திக்க விரும்பும் நபர் யார்?
கடவுளைத் தான், ஏன் தெரியுமா? இந்த உலகம் தலை கீழா இருக்கு. அதை கொஞ்சம் நேராக்கிட்டு போங்கனு சொல்லத் தான்.  சும்மா சொன்னேங்க தப்ப நினைக்காதீங்க...

உங்களுடைய (பிளஸ்,மைனஸ்) என்ன?
பிளஸ்: எல்லோரோடும் நொடிப்பொழுதில் பழகி விடுவேன்.
மைனஸ்: மைக்கில கத்துறது போதாதுன்னு வெளியிலையும் அதிகமா கத்திடுவேன்.

நீங்கள் அடிக்கடி கடுப்பாகும் விடயம் என்ன?
நேரடி நிகழ்ச்சி செது கொண்டிருக்கும் போது  என்னோடமொபைலுக்கு கோல் பண்ணி பாட்டு கேட்குறது.

அடிக்கடி எந்த பொருளை மறப்பீர்கள்?
என்னோட கண்ணாடி

நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
steve jobs Cß Think Different Change the world என்ற கருத்து.

உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
இதே அன்பும் ஆதரவும் எப்போதும் வேண்டும், விமர்சனகளையும், கருத்துகளையும் உடனுக்குடன் தெரிவிக்கும் நேயர்களுக்கு நன்றி.
எஸ்.ரோஷன்

1 கருத்து: