Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

லிட்டில் சங்ககார சாருஜன்....



லிட்டில் சங்கக்கார சாருஜனின் நேர்காணல்....

நேர்காணல்:
எஸ்.ரோஷன்


வெறும் ஆறே வயது தான்.
 உலக கிரிக்கெட் பிரபலங்கள் பலர்
இவருக்கு அறிமுகம்!
இலங்கை கிரிக்கெட்
அணியினரின் செல்லப்பிள்ளை!
கிரிக்கெட் வீரர்களதும் வர்ணனையாளர்களதும் ஆச்சரியமான பாராட்டைப் பெற்றிருக்கிறார்.
யூ டியூப்பில்
 இவரது  வீடியோ மிகப்  பிரபலமாக பார்க்கப்படுகிறது.
யாராவது உலகப் பிரபலங்களின் மகனாக இருந்தால், அல்லது தலைசிறந்த கிரிக்கெட்
வீரரின் வாரிசாக இருந்தால் சிலவேளை இந்தப் புகழும் பெருமையும் இலகுவாக கிடைத்திருக்கக்  கூடும்.
ஆனால் சாதாரண ஒரு சிறுவனுக்கு அதிலும் இலங்கையில் ஒரு தமிழ்ச் சிறுவனுக்கு கிடைத்திருக்கிறதென்றால் அது பெரும் ஆச்சரியம்தான்.
ஆம் இந்த ஆச்சரியத்திற்குரிய , பாக்கியத்திற்குரிய சிறுவன் சாருஜன். நடுத்தர குடும்பத்தைச்  சேர்ந்தவர், அப்பா கிரிக்கெட் ஆர்வமுள்ளவர். புகைப்படக் கலைஞர். சாருஜன் கொழும்பு15 இல் வசிக்கிறார்.
சாருஜனை அவரது தந்தையின் வர்த்தக நிலையத்தில் சந்தித்தோம். மழலைக்கே உரிய குணத்தோடு    சாருஜன் வெட்கப்பட அவரது தந்தை சண்முகநாதன் சாருஜன் பற்றிச் சொல்கிறார். முகத்தில் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட பெருமிதம்.
சாருஜன் பிறந்து 10 11 மாதத்தில் அவரது கிரிக்கெட் ஆர்வம் வெளிப்பட தொடங்கி விட்டது. அவர் விளையாட கேட்பது எல்லாமே போல் தான்.  மற்ற குழந்தைகளைப் போல் எதண வேணும் விளையாட்டு சாமான் வேணும் என்று கேட்கமாட்டார். . எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
 எனக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம்.  சாருஜனுக்கு இரண்டு வயது இருக்கும் போது கு.கு.இ மைதானத்தில் இலங்கை, இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பார்க்க கொண்டு போயிருந்தோம். சின்னக் குழந்தையைக் கொண்டு போறோமே அங்கே அழுது அடம்பிடித்தால் என்ன செய்வது. நான்கைந்து மணிநேரம் எப்படி பொறுமையாக இருப்பான் என்றெல்லாம் யோசித்தபடிதான் அவரைக் கொண்டு போனேன். ஆனால் சாருஜன் அமைதியாக ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை ரசித்ததைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.  திரும்பி வீட்டுக்கு வருகின்ற போது ““ அப்பா அவங்க காலில போட்டு இருக்கிறது மாதிரி வேணும் என்று கேட்டார்.
 இவருடைய அளவுக்கு பேட் எடுக்கிறது அவ்வளவு சுலபமில்லையே. அதனால வீட்டில இருந்த அங்கர் மட்டையை எடுத்து காலில் கட்டி விட்டேன். அதன் பிறகு எங்கள் வீடே சாருஜனின் சிறு மைதானமாகிப் போனது.
அங்கர் மட்டையைக் கட்டிக் கொண்டு எந்நேரமும் கிரிக்கெட் விளையாடுவார். வளரவளர இவர் ரைட் சைட்டில் பந்து வீசுவதையும், லெப்ட் சைட்டில் பெட்டிங் செய்வதையும் அவதானித்தேன்.
அப்புறமாக நான் விளையாடப் போகும் போது மனைவிக்கு தெரியாமல் இவரையும் அழைத்துப் போய் விடுவேன்.கிரிக்கெட் ஆர்வம் வேணாம். படிப்பு கெட்டுடும்னு மனைவி திட்டுவாங்க.
ஒரு தடவை பாகிஸ்தான்  இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாங்களும் பார்க்கச் சென்றிருந்தோம்.
அந்த நேரத்தில் இவர் மைதானத்தின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது.  இவர் துடுப்பாடுகின்ற விதம், பந்து வீசுகின்ற விதம் எல்லாவற்றையும் கூஞுணண் குணீணிணூtண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி இருந்தார்கள். நாங்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனோம். இதன் பிறகு தான் கிரிக்கெட் உலகின் அறிமுகம் எமக்கு கிடைத்தது.
இப்போது லிட்டில் சங்ககார என்கிற அளவுக்கு இவருக்கு புகழ் கிடைத்திருக்கிறது. எனது மகன் சங்ககார மாதிரி விளையாடுவதாக சொல்கிறார்கள். சங்ககாரவின் அத்தனை ஸ்டைலும் சாருஜனுக்கு தானாகவே வருகிறது.  சங்ககார பாணியில் இவர் விளையாடுவதை கண்ட பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்  டோனி கிரேக் இவருக்கு “லிட்டில் சங்ககாரசு எனப் பெயர் வைத்தார்.
மகனுக்கும் சங்ககாரவை ரொம்பப் பிடிக்கும். அவருக்கும் இவரை பிடிக்கும். சங்ககார அணித் தலைவர் பதவியிலிருந்து விலகும்போது சாருஜனுக்குத்தான் கடைசி கையொப்பமிட்டுள்ளார்.
சங்ககாரவை உங்களுக்கு ஏன் பிடிக்கும்? என சாருஜனிடம் கேட்டோம்.
அவர் நன்றாக விளையாடுவார். அவர் பெட்டிங் பண்ணுவது, கீப்பிங் பண்ணுவது பிடிக்கும். அதைவிட அம்பயர் அங்கிள் அவுட் காட்டினா ஒன்றும் சொல்லாம போய் விடுவாரு. ரொம்ப நல்ல அங்கிள். அதுமட்டுமில்ல சங்ககார அங்கிள் நல்லா விளையாடனும். நல்லா படிக்கனும்.
நல்ல சாப்பாடு சாப்பிடனும் என்று சொல்லியிருக்கிறார் என்றார் தன் மழழைக் குரலில்.
சாருஜனின் இன்னொரு பேவரிட்  அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேர்ன் வோன். அதுமட்டுமல்ல சாருஜனுக்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கு அடுத்தபடியாக  அவுஸ்திரேலிய  அணியைத்தான் பிடிக்கும்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மேற்கிந்திய அணியின் தலைவர் டெரன் செமி, கிறிஸ்கெய்ல், அதிரடி வீரர் கிரான் பொலக், சர்வான், இந்திய அணியின் தலைவர் தோனி, அதிரடி வீரர் விராட்கோலி. "ரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, பாகிஸ்தான் அணியில் சயிட் அப்ரிடி, அஜ்மால் உட்பட  உலக  கிரிக்கெட் பிரபலங்கள் பலருடன் புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறார் சாருஜன்.
எனினும் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரை மட்டும் சாருஜன் இன்னும் நேரடியாக சந்திக்கவில்லை. அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது சாருஜனின் நீண்ட நாள் ஆசை.
அத்தனைப் புகைப்படங்களையும் அழகிய ஆல்பமாக செய்து வைத்திருக்கிறார் சாருஜனின் தந்தை சண்முகநாதன்.
கொட்டாஞ்சேனை சென்.பெனடிக் கல்லூரியில் முதலாம் தரத்தில் படிக்கிறார் சாருஜன். மேலதிகமாக கிரிக்கெட் பயிற்சியும் பெற்று வருகிறார்.
வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் கிரிக்கெட் பயிற்சிக்காக செல்ல வேண்டும். மற்ற நாட்களில் அம்மாதான் கெஞ்சிக் கூத்தாடி அவரை எழுப்ப வேண்டும்.  கிரிக்கெட் பயிற்சி நடைபெறும் தினங்களில் அதிகாலையிலேயே எழும்பி விடுவார். எங்களையும் எழுப்பி விடுவார். அந்த அளவுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் இருக்கிறது சாருஜனுக்கு.
 இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும். நல்ல பெட்ஸ் மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் சங்ககார மாதிரி வரவேண்டும். இதுதான் என் இலட்சியம் என்கிறார் சாருஜன்.
சாருஜனின் விருப்பம் எப்படியோ  அதற்கேற்ப அவரை உருவாக்குவோம் என்கிறார் சாருஜனின் தந்தை நம்பிக்கையோடு!
இலங்கை அணிக்கு ஒரு சிறந்த வீரர் உருவாகிறார்.சாருஜனை வாழ்த்தி விடைபெற்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக