Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

இந்திய இசைக்களத்திலும் கால்பதிக்கு இலங்கை பாடலாசிரியர் ஸதீஷ்காந்

ஒரே நேரத்தில் இலங்கை, இந்திய, மலேசிய, கனேடிய திரைப்படங்களில் பாடல்களை எழுதிக் கொண்டிருக்கும் இளம் முன்னணிப் பாடலாசிரியர் ஸதீஸ்காந். தினக்குரலின் சகோதர
வெளியிடான உதயசூரியனுக்கு அளித்த நேர்காணல்
நேர்காணல்: எஸ்.ரோஷன்

பல அர்த்தமுள்ள வரிகள் மூலம் முத்திரை பதித்திருக்கும் ஸதீஸ்காந் இந்த வாரம் உங்களுடன்.
ஹாய் வணக்கம்! மீன்பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு தான் என் சொந்த ஊர். குடும்பத்தில் 4 பேர். அப்பா மின்சார சபையில் தொழில் புரிகின்றார். அம்மா ஆசிரியை. ஒரே மகன் நான். கடைசி செல்லப்பிள்ளை எனது தங்கை.
நான் இசைத்துறையில் பாடலாசிரியராக அறிமுகமான அனுபவம் பற்றி சொல்லப் போனால் சக்தி டி.வி.யின் இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் முதல் சுற்றில் பங்கு பற்றினேன். எனினும் 2 ஆம் சுற்றுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
அதன் பிறகு இலங்கையில் இருக்கும் எல்லா இசையமைப்பாளர்களிடமும் வாய்ப்பு கேட்டேன்.
வாய்ப்புகள் எனும் வரம் எல்லோருக்கு இலகுவாக கிடைத்து விடுவதில்லையே! அதற்காக நிறைய முயற்சித்தவம் செய்ய வேண்டும். தளராத மனம் வேண்டும். இவை இருந்தால் வாய்ப்புக் கதவு என்றாவது ஒருநாள் திறக்கும்.
எனக்கும் ஒருநாள் கதவு திறந்தது. 2007 இல் இசையமைப்பாளர் ஷமீலின் இசையில் “வானவில் தேவதை'' எனும் பாடலை எழுத சந்தர்ப்பம் கிடைத்தது.
இந்தப் பாடல் மூலம் இசை உலகிற்கு அறிமுகமாகி இதுவரை 3 தேசிய விருதுகளையும் ஒரு மாகாண விருதையும் பெற்றுள்ளேன்.
எனக்கு 2011ஆம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருது ஜனாதிபதியால் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது. ஜனாதிபதி கையால் விருது பெற்றது என்வாழ்வில் மறக்கமுடியாது.
இதுவரை நான் 6 இசைத் தொகுப்புகளில் பாடல்களை எழுதியுள்ளேன். கனவின் கருவில் (ஷமீல்), உள்ளம் திறந்தேன் (ஷமில் நிக்கி), டெஸ்டினி (பிரணிவ்), யாழ் தேவி (ஜெயந்தன்) ஆகிய பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ளதுடன். சகிஸ்ணா, பிரஜீவின் இசையில் இரு இசைத் தொகுப்புகள் மிக விரைவில் வெளிவர இருக்கின்றன.

சகிஸ்ணாவின் இசையில் வெளிவரவுள்ள இசைத் தொகுப்பில் இந்தியாவின் பிரபல பாடகர்களான பிரசன்னா, ஸ்ரீ சரண், வந்தனா ஸ்ரீநிவாசன், ஷில்பா, விஜ ஜேசுதாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி போன்றவர்கள் பாடியிருப்பது சிறப்பம்சமாகும்.
அதுமட்டுமல்ல இதுவரை 55 பாடல்கள், 20 நிலையக் குறியிசைகள், 100 விளம்பரப் பாடல்களை எழுதியுள்ளேன். வெற்றி, வசந்தம், சூரியன் ஆகிய வானொலிகளில் நிலையக் குறியிசைகளை எழுதியுள்ளேன்.
நான் எழுதிய வானவில் தேவதை, காதல்னா காதல் இல்லை, யாழ்தேவி, சோனியா. ஐ லவ் யு, ஏதேதோ, பூக்கின்றா பூவா, துளித் துளி, காதோடு காதல், உன்னாலே உன்னாலே, ரொக் வேமு ஆகிய பாடல்கள் சமூக வலையத்தளங்களிலும் வானொலி ஊடகங்களிலும் இலட்க் கணக்கான மக்களின் வரவேற்பைப் பெற்றது. அத்தோடு நான் எழுதிய 5 பாடல்கள் (சோனியா, துளித் துளி, காதோடு காதல், ஐ லவ் யு, ஓராயிரம் வெண்ணிலா) சக்தி தமிழ் இசை விருதிற்காக வேறுபட்ட பிரிவுகளில் பரிந்துரை செயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சூரியன் தயாரிப்பில் ஷமீலின் இசையில் எழுதிய மழை விழி என்ற பாடல் இலங்கை இசையில் ஒரு இலக்கண படைப்பாக வெளிவந்ததுடன் தனியார் வானொலிகளில் ஆயிரக் கணக்கான தடவைகள் ஒலிபரப்பானது.
அது top 20 யில் அதிக தடவைகள் முதல் இடத்தைப் பெற்று சாதனை படைத்தது. கிரிஷான் மகேசனின் இசையில் எனது வரிகளில் இந்திய இசைத் துறையின் ஜாம்பவான்களான ஷங்கர் மகாதேவன், எசான், லோ பாடிய ரொக் வெமு (rugby song) பாடல் வலையத்தளங்களில் அதிகம் பகிரப்பட்ட பாடலாக மாறியதுடன், ஒரே வாரத்தில் 12000 இற்கும் மேற்பட்டவர்களால் download செயப்பட்டது.
இலங்கையின் பிரபல அறிவிப்பாளர் A.R.V.லோஷனில் குரலில் எனது வரிகளிலும் ஷமீலின் இசையிலும் வெளிவந்த இறைவன் அருகில் என்ற கவிதை மக்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுத்தந்தது.
அத்துடன் கல்லூரியின் கடைசி பெஞ்ச்சு, இன்று மாலை தென்றலுடன் கூடிய காதல் வரும் ஆகிய கவிதைக் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் மிகப் பிரபலமாக பேசப்பட்டன.
இதுவரை ஷமீல், பிரஜீவ், கந்தப்பு ஜெயந்தன், ஜோக்ஸ், பிரணிவ், சகிஸ்ணா, சஞ்சித் லக்ஸ்மன், ராஜ், கிரிஷான் மகேசன், ஸ்ரீ விஜ, நிக்கலின் மரியோ, ஒஸ்மான், லக்ஸ்மன் உட்பட 20 இற்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களுக்கு எனது பாடல்களை எழுதியுள்ளேன்.
நான் சக்தி நிறுவனம் தயாரிக்கும் எழுதாத கதை திரைப்படத்தில் பிரஜீவின் இசையில் பாடல்களை எழுதி வருகின்றேன். அதனோடு இரண்டு இந்தியத் திரைப்படத்திலும் மலேசிய, இலங்கை மற்றும் கனேடியக் குறுந்திரைப்படத்திலும் பாடல்களை எழுதி வருகின்றேன்.
தற்போது நான் ஷாகிஸ்னா இந்திய இசையமைப்பாளரின் இசையில் 10 பாடல்களில் 8 பாடல்கள் எழுதியுள்ளேன்.
இன்னும் நான் பாடல்கள் எழுதி சிறந்த பாடலாசிரியராக வளர்வதற்கு ரசிகர்களாகிய உங்களின் ஆதரவு என்றும் தேவை.

1 கருத்து:

  1. சதீயிஸ் அண்ணா நீங்கள் இன்னும் வளர்ந்து எமது மண்ணிற்கு பெருமை சேர்ப்பீர்கள் என்பதில் ஐயமில்லை

    பதிலளிநீக்கு