Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 9 நவம்பர், 2012

துப்பாக்கி முனையில் நேர்காணல் செய்ததை என்னால் மறக்க முடியாது


வசந்தம் டிவி சிரேஷ்ட தொகுப்பாளரும், அறிவிப்பாளருமான  இர்பானுடைய நேர்காணல்.

நேர்காணல்:
எஸ்.ரோஷன்

வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளரும், தொகுப்பாளரும், சிரேஷ்ட அறிவிப்பாளருமான இர்பான் இந்த வார உதயசூரியனில் உங்களுடன் தன்னைப்பற்றிய  விடயங்களை பகிர்ந்து கொள்கின்றார்...
வாசகர் வட்டத்திற்கு வணக்கம். நான் பிறந்தது முல்லைத்தீவு. வளர்ந்தது, படித்தது, வாழ்ந்துகொண்டிருப்பது எல்லமே புத்தளத்தில். புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்று  தொடர்ச்சியாக அங்கேயே ஒரு வருடம் ஆசிரியராகவும் கடமை புரிந்திருக்கிறேன். எனது மாமா லியூசின் மூலமாகவே ஊடகத் துறைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் கிடைத் தது.  இதேநேரம் எனக்கு தொடர்ச்சியாக வாப்புக்களை வழங்கியதில் கே.டி.பிரசாத் மறக்க முடியாதவர். ஊடகத்துறையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றவர்களில் எம்.என்.ராஜா அவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.

1999 ஆம் ஆண்டு சினிமாஸ் நிறுவனத்தின் வெள்ளித்திரை விருந்து என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது எனது உணர்வலைகளை சொல்லித்தீர்க்க வார்த்தைகள் இல்லை. முதல் படைப்பை தருகின்ற எல்லோரும் இதனை உணர்ந்திருப்பார்கள்.

*வசந்தம் டி.வி.க்கு வருவதற்கு முன்னர் நேத்ரா தொலைக்காட்சியில் பணிபுரிந்துள்ளீர்கள். அங்குள்ள அனுபவங்களை சொல்ல முடியுமா?
மறக்க முடியாத அனுபவங்கள் அங்குதான் கிடைத்தன. 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட வேளையில் அந்த நெருக்கடியான நேரத்தில் பணிபுரிந்த திகில் அனுபவமே அனைத்தையும் தாண்டி மனதில் இருக்கிறது.

* அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள்  எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இது உன்னதமான தொழில். யாருக்கும் இலகுவில் கிடைக்காத வாப்பு. நேரத்தை அறிந்து செயற்படுவதோடு பொறுப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். புதிய விடயங்களை தேடுபவராகவும் மொழி வளமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.
*வசந்தம் டி.வி.யில் நீங்கள் தயாரித்து, தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் பற்றி? வசந்தம் தொலைக்காட்சி ஆரம்பித்து மூன்று வருடங்களேயான நிலையில் முதல் வருடத்திலேயே இரண்டு தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டது. இங்கு இருக்கின்ற அனைவருமே ஒரு குடும்பமாக செயற்படுகிறோம். நிகழ்ச்சிகளை வழங்குகின்ற போது சுதந்திரமாக செயற்படும் வாப்பை எமது முகாமையாளர் வழங்குவதால்தான் தரமான நிகழ்ச்சிகள் வெளிவருகின்றன. அந்த வகையில் எனது தயாரிப்புகளாக முகமூடி, தலைவாசல், சுற்றிவரும் பூமி, கண்மணி,    எமது பார்வை, நினைத்தாலே இனிக்கும், நிலாவே வா, வசந்தம் டொப் டென் போன்றவற்றை  குறிப்பிடலாம்.

*முகமூடி நிகழ்ச்சி பற்றி ?
ஆரம்பத்தில் நமது நாட்டில் இவ்வாறான நிகழ்ச்சிகள் சாத்தியமா? என்ற சந்தேகம் இருந்தது. பின்னர் ரசிகர்களின் ஆதரவினால் இன்று நல்ல தரமான நிகழ்ச்சி என்ற பெயரை  குறுகிய காலத்துக்குள்ளே முகமூடி பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதற்கு நாடெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான
தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றன.
முகமூடி சமூகத்தில் அநீதி இழைக்கப்பட்டவர்களின் குரலாகவும் திறமையுள்ளவர்களுக்கு களமாகவும் அமைகிறது.

*பாடசாலை அனுபவம் எப்படி?  பாடசாலையில் நீங்கள் செத சேட்டை, அதனால் அடிவாங்கிய அனுபவம் உண்டா?
பாடசாலையில் நான் ரொம்ப நல்ல பிள்ளை... இருந்தும் ஒரு முறை வகுப்பறையில் சில மாணவர்கள் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த நேரம் அவ்வழியே வந்த கந்தசாமி சேர் நான்தான் அந்த தவறை செதேன் என்று என்னை மைதானத்தின் நடுவே வெயிலில் நிற்கவைத்தார். இன்றும் செயாத தவறுக்காக தண்டிக்கப்பட்டதை எண்ணி வருத்தப்படுகிறேன்.

*போட்டிகள் நிறைந்த இந்த துறையில் உங்களின் அடையாளம்?
அனைவரோடும் கலகலப்பாக கடமையாற்றுவதோடு இயல்பாக இருப்பது.

*உங்களுடைய ரோல் மொடல் யார்?
 நீ செல்வதற்கு பாதை இல்லை என்று கவலைப்படாதே. நீ சென்றால் அதுவே பாதை. என்ற கூற்றுக்கிணங்க செயற்பட்டு வருகின்றேன்.

*இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர்?
பீ.எச்.அப்துல் ஹமீது, கோபிநாத்

*உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகை யார்?
நடிகர் விஜஉற்சாகமான நடிப்பு, நடனம்.
நடிகை நதியாஎன்றும் இளமையான நடிப்பு.

*வாழ்வில் மறக்க நினைப்பது எது?
கடந்த கால யுத்தம் தந்த நினைவுகள்.

*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ?
யுத்த காலத்தில் மட்டக்களப்பில் துப்பாக்கி முனையில் முன்னாள் முதலமைச்சர்  பிள்ளையானை முதன் முதலாக நேர்காணல் செதது.

*அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
வாயை மூடி சும்மா இருடா...

*பொழுதுபோக்கு?
முகப்புத்தகத்தில் நண்பர்களோடு அரட்டை அடிப்பது.

* அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள்?
தினம் தினம் கவிதைகளை எழுதி கண்காணாது
மறைத்துவைப்பேன்.

*சந்திக்க விரும்பும் நபர் யார்?
 ஆங் சாங் சூகி

*நீங்கள் அடிக்கடி கடுப்பாகும் விடயம் என்ன?
அவசர அழைப்புகளை எடுக்கும் போது Answer  பண்ணாமல் இருப்பது.

* நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
Until the Final Hour  என்ற ஹிட்லரின்  கடைசி நிமிடங்கள்.
உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
நல்ல தரமான நிகழ்ச்சிகளின் உருவாக்கம் உங்கள் கைகளிலே இருக்கிறது. ஆகவே தரமான நிகழ்ச்சிகளுக்கே உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக