Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

செவ்வாய், 25 ஜூன், 2013

அம்மா சொன்ன கடைசி வார்த்தை

 சக்தி சுப்பர் ஸ்டார் சுதன் உதயசூரியனுக்கு அளித்த பேட்டி;

சக்தி தொலைக்காட்சி நடத்திய சுப்பர் ஸ்டார் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுவரை முன்னேறி பல இதயங்களில் இடம்பிடித்தவர் சுதன்.

பல போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிகள் இவர் வசமாகியிருக்கின்றன. தமிழ், சிங்கள மொழிகளில் பல பாடல்களைப் பாடி முன்னேறிவரும் இலங்கையின் இளம் பாடகர் இவர்.
இவர் வெற்றி இலக்கைத் தொட்டது பற்றியும் தன் வாழ்க்கையின் கடந்து வந்த பாதை பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
பிறந்தது யாழ்ப்பாணம். ஆனால் சிறுவயதிலிருந்து படித்து வளர்ந்ததெல்லாம் திருகோணமலையில். அப்பா கிருஸ்ணராஜ், அம்மா வடிவழகி. வீட்டில் ஐந்து பிள்ளைகளில் நான் கடைக் குட்டி.
 ஆரம்பம் முதல் உயர்தரம் வரை திருமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில்தான் எனது பள்ளிப்பருவம் கழிந்தது. பள்ளிப்பருவத்தில் நான் பெரிய சாதனையாளன். காரணம் 32 மாணவர்களைக் கொண்ட எங்கள் வகுப்பறையில் நான்தான் 31 ஆம் நிலை. அவ்வளவு மக்கு, படிப்பதில் ஆர்வம் அற்றவனாக இருந்தாலும் பேச்சு, மெவல்லுநர் போட்டிகளில் மாவட்ட, மாகாண மட்டங்களில் முதலிடத்தைப் பெற்றுள்ளேன்.
எந்தவித இசைப் பின்னணியும் கொண்டிராதது எனது குடும்பம். இசையில் நாட்டம் வந்ததற்குக் காரணம் எனது அம்மாதான். அவர் சமைக்கும் பொழுது பாடும் மெல்லிய இசைப் பாடல்கள் அவரது சமையல் போலவே ருசியாக இருக்கும். என்னைப் பாட வைத்து அவர் ரசிப்பது மட்டுமல்லாது அயலவர்களையும் அழைத்து என்னைப் பாட வைத்து மகிழ்ச்சி அடைவார்.
 எனக்கும் என் நண்பர்களுக்கும் மட்டுமே தெரிந்த எனது பாடும் திறமையை வளர்த்துக் கொள்வதற்காக கல்லூரியில் இசை கற்கச் சென்ற முதலாவது நாளே எனது சங்கீத ஆசிரியர் தந்த பரிசு இசைக்கற்பதற்கான ஆர்வத்தையே குறைத்தது. வழமையாக பாடசாலை முதல் தினத்தில் யாரும் பாடசாலைக்கு பெரிதாகச் செல்வதில்லை (அன்றைய தினம்தான் வகுப்பறை ஒழுங்கமைப்பு) அதன்வழி வந்த நானும் பாடசாலை போகவில்லை. இரண்டாம் நாள் சங்கீதப் பாடத்துக்கு முதன்முதலாக சென்றபோது முதலாவது நாள் ஏன் பாடசாலைக்கு வரவில்லையென்று என்னை கண்டித்ததை இன்னும் மறக்கமுடியாது. கைவசம் நிறைய மெட்டுக்கள் இருந்தும் பாடல் வரிகள் இருந்தும் பொருளாதாரம் பெரும் முட்டுக்கட்டையாவே இருந்தது. ஆரம்பத்தில் இசைத் தட்டு வெளியிடுவதற்காக நாங்கள் நாடியவர்களும் எங்ளை ஏமாற்றினார்களே தவிர, கைகொடுக்கவில்லை. எப்படியிருந்தாலும் எனது கல்லூரியில் நடைபெற்ற தியானம் மற்றும் பஜனைப்பாடல்களில் எனது கவனத்தை செலுத்திவந்தேன். இவ்வாறு இருக்க, எனது பாடும் திறனைக்கண்ட ஒரு ஆசிரியர் எனது கல்லூரியில் வலயமட்ட வில்லுப்பாட்டுப்போட்டிக்கு அணித்தலைவராக என்னை நியமித்தார்.
எனக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நீண்டநாள் பயிற்சியின் பின் எனது முதல் மேடையை சந்திக்கத் தயாராக இருந்தேன்.
அன்று எங்களுக்கு போட்டி. வில்லுப்பாட்டுக்கான உடையில் மேடையை நோக்கிச் சென்றபோது எமது கல்லூரியின் உப அதிபர் என்னை மட்டும் நிறுத்தி பாடப்போக வேண்டாம் என்றார், அருகில் எனது மாமா கண்கலங்கியபடி என்னைப் பார்த்தார். அப்பொழுதுதான் எனது அம்மா மரணப்படுக்கையில் இருப்பது தெரியவந்தது.
உடனே கொழும்பு பெரிய மருத்துவமனைக்குச் சென்றோம். எனது அம்மாவின் நிலைகுறித்து நான் அழுதுகொண்டு சென்றேன்.
ஆனால், எனது அம்மா சிரித்தப்படி என்னை வரவேற்றார். அம்மாவிற்கு கடைசிப்பால் பருக்கச்சொன்னார்கள். அம்மா அதை குடித்தபின் என்னிடம் சொன்ன ஒரேயொரு வார்த்தை  தம்பி நல்லா படி. அம்மாவின் மரணத்தின் பின் அந்த வார்த்தை என் வாழ்க்கையையே மாற்றியது. நன்றாகப் படித்தேன். Oசஃ சித்தி எதினேன். உயர்தரத்தில் வர்த்தக பாடத்தைக் கற்று அம்மாவின் ஆசியோடும், அப்பாவின் உறுதுணையோடும் பல்கலைக்கழகம் தெரிவானேன். இதில் மறக்க முடியாத அனுபவம் என்னவென்றால் எனது வகுப்பாசிரியரிடம் (5ஆம் ஆண்டு தொடக்கம் 9 ஆம் ஆண்டு வரை)  பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மற்றைய மாணவர்களுடன் நானும் சென்றேன். வந்த எல்லா மாணவர்களுக்கும் வாழ்த்தி விட்டு என்னைப் பார்த்து நீ எதற்காக வந்தா எனக் கேட்டார்.
 நானும் பல்கலைக்கழகம் தெரிவாகியுள்ளேன் எனக் கூற  கண்கலங்கியவாறு என்னை கட்டியணைத்தார்.
எல்லாம் நன்றாக சென்றுகொண்டிருந்தது. நான் பல்கலைக்கழகம் வந்து ஆறு மாதத்தில் எனது அப்பாவின் இழப்பையும் சந்தித்தேன். இறுதியாக அப்பாவைப் பார்த்தது, என்னை பல்கலைக்கழகத்திற்கு வழியனுப்பியபோது சிரித்தவாறு கைகளை அசைத்த அந்த நிமிடங்கள்தான் இன்னும் என் மனம்விட்டு நீங்காமல் இருக்கின்றது.
பின்பு பல்கலைக்கழகத்தில் இரண்டு வருடங்கள் குளியலறைப் பாடகன்தான். பின்பு எனக்கென ஒரு துணையை   தேடிக்கொண்டேன், நல்ல நண்பர்களையும் சேர்த்துக்கொண்டேன். அவர்களின் தூண்டுதலில் ரோட்டெரி கழகப் பாடல் போட்டிக்குச் சென்று இரண்டாம் இடம் பெற்றேன். பின்பு தேசிய இளைஞர் பேரவையினால்  தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட பாடல் போட்டியில் இரண்டாம் இடம், சக்தி சுப்பர் ஸ்டார் என எனது பாடல் பயணம் நீண்டது. மக்களின் ஆசியுடனும் நண்பர்களின் துணையுடனும் இறுதிப்போட்டிக்கு தெரிவானேன். இந்த வெற்றிக்கு எனது நண்பன் குணூடிண்ட ஈடிடூச் னுடைய உதவிக்கு நான் என்ன செதாலும் ஈடில்லை. இதன்போது எனது பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களின் ஊக்குவிப்பும் எனது இசைப் பயணத்திற்கு மேலும் வலுச் சேர்த்தது.
நிகழ்ச்சியில் நான் இறுதிச்சுற்றுவரை முன்னேறியதை கௌரவப்படுத்தும் வகையில் எனது நண்பர்கள் எனக்காக ஒரு வைபவத்தினை ஒழுங்கு செதிருந்தார்கள். எமது பல்கலைக்கழக வரலாற்றிலேயே தனியொரு மனிதனுக்காக ஒழுங்கமைக்கப்பட்ட முதலாவது வைபவம் அது என்பது எனக்கு பெருமிதம் தந்தது.
இதற்கு எனது சகோதர மொழி நண்பர்கள், கனிஷ்ட மாணவர்கள், வேறு பீட நண்பர்கள் வந்து என்னை வாழ்த்தி கௌரவப்படுத்தினர். எனது பல்கலைக்கழக உபவேந்தரும் வருகை தந்து கேடயம் தந்து என்னை கௌரவித்தார். இந்த உதவிகளுக்கு நான் என்ன கைமாறு செயப்போகிறேன் என்று தெரியவில்லை.
இறுதிவரை நன்றிமறவாத மனம் வேண்டும் இறைவனே. இதுவரை ஏழு இசைத்தட்டுப் பாடல்களைப் பாடியுள்ளேன். அதில் பாத்தியா, சந்தோஷின் பாடல் ஒன்றுக்கு என்னை சொல்லிசை (ரெப்) எழுதுமாறு பணித்தார்கள். அவர்கள் கொடுத்த மெட்டுக்கு பத்து நிமிடத்தில் சொல்லிசை எழுதினேன். இதற்கு அவர்களிடமிருந்து கிடைத்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் நெஞ்சில் நீங்காதவை.
இதுபோன்றே சக்தியால் தயாரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் பாடல்கள் இசைத் தொகுப்பில் இந்திய பின்னணிப் பாடகர் சத்தியன் மேற்பார்வைக்காக அழைக்கப்பட்டார். அதன்போதுதான் பாடல் பாடுவதில் எவ்வளவு நுணுக்கம் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டேன். நான் பயந்து பயந்து பாடிய அந்தப் பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. 
எங்களது அடுத்த இசைத்தொகுப்பு மகுடி புகழ் தினேஸ் கனகரட்ணத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. நிச்சயம் இந்த இசைத்தொகுப்பு வெற்றியடையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. என்னுடைய இசை வளர்ச்சிக்குக் காரணமாக இருந்த எனது சகோதரர்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஊடகங்களுக்கும் பெரும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

எஸ்.ரோஷன்

சனி, 22 ஜூன், 2013

அறிவிப்பாளராகனும் என்பது என் சிறுவயதுக் கனவு!

எம்மில் பலருக்கு திரைப்படங்களை பார்ப்பதற்கு முதல் அப்படங்களின் கதைகளை அறிவதில் ஆர்வம் அதிகம். அப்படிப்பட்ட ஆர்வலர்களுக்கு விருந்து படைப்பது வர்ணம் டி.வி.யின் திரைக்கதம்பம் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் பிரியா லுவேந்திரன்.
இந்தவாரம் உதயசூரியன் வாயிலாக சில விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறார்.
ஹாய் ரசிகர்களே! நான் உங்கள் பிரியா லுவேந்திரன் (பிரியதர்ஷினி லுவேந்திரன்) 
நான் பகுதி நேரமாகத்தான் வர்ணம் தொலைக்காட்சியில் தொகுப்பாளரா இருக்கேன்.
 அப்பா, அம்மா, செல்லத் தங்கை மற்றும் என்ன நேசிக்கிற தாத்தா, பாட்டி இதுதான் என்னுடைய குடும்பம். படிச்சது சைவமங்கையர் வித்தியாலயத்தில்.
பாடசாலைக் காலத்தில ரொம்ப குறும்புத்தனமான பொண்ணு. தொகுப்பாளராக வரனும் என்றது என்னோட சிறுவயது கனவு. என்னுடைய கனவு நனவாக மூன்று பேர் காரணகர்த்தாக்களாக இருக்கிறாங்க. ஒன்று ஹிஷாம் அண்ணா மற்றையது என்னுடைய அத்தை நித்தியகல்யாணி பத்மநாதன், மற்றையது பவனீதா லோகநாதன். இவர்களூடாகவே எனது தொகுப்பாளர் பயணம் தொடர்கிறது. 
*முதன் முதல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய அனுபவம்  2012 செப்டம்பர் 20 ஆம் திகதி என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். அதுதான் என்னுடைய ஊடகப் பயணத்தின் முதற்படி.
*நீங்கள் தொகுத்து வழங்கும் திரைக்கதம்பம், டொப் டென் சோங்ஸ் அனுபவம் பற்றி சொல்லுங்கள்: ரொம்பவே சந்தோஷமா நிகழ்ச்சி பண்ணியிருக்கிறேன். சில சமயம் ஸ்கிரிப்ட் மறந்தாலும் சொல்லிக் கொடுக்க பலபேர் இருக்காங்க. சில படங்களைப் பற்றி நான் கேள்விப் பட்டதே இல்லை. நிகழ்ச்சிக்காக அந்தப் படங்களை பார்த்த சந்தர்ப் பங்களும் உண்டு.
*மனம் கவர்ந்த நேயர்கள் பற்றி: என்னுடைய திறமைக்கு அங்கீகாரம் கொடுத்தவர்கள் அவங்கதான். அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். இந்தத் தருணத்தில் அவர்களுக்கு என்னுடைய நன்றியையும் சொல்லிக் கொள்கிறேன்.
*நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கிடைத்த அனுபவங்கள்: ஒவ்வொரு நிகழ்ச்சியும் சுவாரஷ்யமான அனுபவம்னு தான் சொல்லனும். குறிப்பாகச் சொன்னால் காதலர் தின சிறப்புப் பேட்டி நிகழ்ச்சியை சொல்லலாம். அது எனக்கு மட்டுமல்ல எங்கள் குழுவுக்கே சுவாரஷ்யமான அனுபவமாக இருந்தது.
 உங்களைக் கவர்ந்த அறிவிப்பாளர்கள்: இலங்கையில் ஹிஷாம் மொஹமட், இந்தியாவில் கோபிநாத், சிவகார்த்திகேயன், டிடி
*உங்களுடைய ரோல் மொடல்: எப்பவுமே அப்பாதான். ஆனால், அதிகமான விஷயங்களை கற்றுக்கொண்டது அம்மாவிடம்தான்.
* ஆச்சரியப்பட வைத்த நபர் : நீயா நானா கோபிநாத். அவரைப்பார்த்து ஆச்சரியப்படாத சந்தர்ப்பங்களே இல்லை.
*வர்ணம் தொலைக் காட்சியில் பணியாற்றுவது பற்றி: அங்கு பணிபுரிகிறோம் என்பதை விட ஒரு குடும்பமாக வாழ்கின்ற உணர்வுகளே அதிகம்.
*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்: 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி நடந்த சூப்பர் சிங்கர்ஸுடனான பேட்டி. அதுதான் என்னுடைய முதல் பேட்டி நிகழ்ச்சி. என்னுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்ற சந்தர்ப்பமும் அதுதான். அப்புறம் என்னுடைய சாதாரணதர, உயர்தர பெறுபேறுகள் மூலம் பெற்றோரை பெருமைபடுத்திய அருமையான அந்தத் தருனங்கள்.
*சந்திக்க விரும்பும் நபர்: சந்தர்ப்பம் கிடைத்தால் கோபிநாத் மற்றும் இயக்குநர் பாலாவையும் சந்திக்க வேண்டும்.
* படித்ததில் உங்களுக்குப் பிடித்தது: உன் கண்ணில் நீர் வழிந்தால்  என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணில் பாவையன்றோ  கண்ணம்மா
என்னுயிர் நின்னதன்றோ போன்ற பாரதியின் அற்புதமான கவிவரிகள்
*நேயர்களுக்குக் கூற விரும்புவது: உங்களுடைய உண்மையான அன்பிற்கு தலை வணங்குகிறேன். இதேபோன்ற ஆதரவு என்றும் எனக்குத் தேவை.

சனி, 27 ஏப்ரல், 2013

பில்லா2 சவுண்ட் இஞ்சினியர் கௌசிகன்

தென்னிந்தியத் திரைப்படங்களின் வெற்றிக்கும் அதன் பிரம்மாண்டத்திற்கும் கதை, களம், கதாபாத்திரங்கள் எந்தளவு முக்கியத்துவம் வகிக்கின்றதோ அந்தளவு அப்படத்தின் சவுண்ட் சிஸ்டமும் முக்கியத்துவம் வகிக்கின்றது.
அவ்வாறு அஜித்தின்  பில்லா2 படத்தில் இசையால் அசத்தியவர் கௌசிகன். இவர் ஜேர்மனியைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் இவரது பூர்வீகம் இலங்கை.
இவரது அப்பா சிவலிங்கம் பலராலும் அறியப்பட்டவர். அதாவது ராஜ்சிவா என்று அழைக்கப்படும் எழுத்தாளர். திருகோணமலையைச் சேர்ந்தவர்.
இவ்வாரம் பேஸ்புக் பகுதியில் இணைகிறார் கௌசிகன் சிவலிங்கம்.
ஹாய் வணக்கம்! உங்களுக்கு என்னை அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
 இசைத்துறையில் சிறுவயது முதல் ஆர்வமிருந்தாலும் என்னுடைய 5 ஆவது வயதில் அப்பா வாங்கிக் கொடுத்த கீபோர்டுதான் இசைத்துறைப் பயணத்திற்கான முதல் படியாக அமைந்தது. அந்த கீபோர்ட்டில் ""முஸ்தபா... முஸ்தபா...'' என்னும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலை முதன் முதலாக  இசைத்துக் காட்டினேன். என்னுடைய இசை ஆர்வத்தை அறிந்து கொண்ட பெற்றோர் இசைப் பள்ளியில் முறையாக இசையைக் கற்றுக்கொள்வதற்காக சேர்த்து விட்டார்கள். கீபோர்ட்டுடன் மிருதங்கமும் கற்றிருக்கிறேன். இவை இரண்டிலும் குறித்த அளவுக்குத் தேர்ச்சி பெற்ற நான், எனது 15 ஆவது வயதில் பாடல்களை இசையமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டேன். எனது மெட்டுகளுக்கு, அப்பா பாடல் வரிகளை எழுதித் தந்தார். அதுவே என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது.
ஐரோப்பிய வானொலிகளில் எனது பாடல்கள் வலம் வந்தன.  இதன் பயனாக சென்னை செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. நான் சென்னை சென்றதும் சினிமாத்துறையில் புதிய மனிதர்களின் அறிமுகம் கிடைத்தது. பல பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள், இசை வல்லுநர்கள் எனப் பலரின் அறிமுகமும் கிடைத்தன. பாடல் ஆசிரியர் சினேகன் அவர்களின் வரிகளுக்கு எனது இசையமைப்பில் உருவான பாடலொன்று பாடகி சைந்தவி  பாட, “கலசா ஸ்ரூடியோசு இல் பதிவானது. அந்த நொடியில் எனக்கு ஆச்சரியமான நிகழ்வு ஒன்று நடந்தது. அதுவே என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.
எனது பாடல்கள் பதிவு செயப்பட்டுக் கொண்டிருக்கும் கலசா ஸ்ரூடியோவின் இன்னுமொரு தளத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் தனது பாடல்களைப் பதிவு செதுகொண்டிருந்தார். அங்கு எனக்கு அவரது அறிமுகம் கிடைத்தது. தொழில்நுட்ப ரீதியாக இருவரும் நிறையப் பேசினோம்.
என்னுடைய இசைப் பயிற்சியை முழுமையாக்குவதற்காக SAE  இல் (Society Of Automotive Engineers) கல்வி கற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நானும் கல்லூரியில் சேர்ந்து ஓடியோ சவுண்ட் என்ஜினியரிங் பட்டப்படிப்பை ஆரம்பித்தேன்.
விடுமுறையில் இந்தியா சென்ற நான் அங்கு ஒரு இசை அல்பம் செயும் நோக்குடன் பாடகர்களை வைத்து பாடல்களைப் பதிவு செதேன்.
இந்தச் சந்தர்ப்பத்தில், மலேசியாவைச் சேர்ந்த ‘lady Kash & Krissy’ (எந்திரன் படத்தில் ""இரும்பிலே ஒரு இருதயம்''  என்ற பாடலைப் பாடியவர்கள்),  Where ever You Are, It’s Your Time  என இரண்டு ஆங்கிலப் பாடல்களை எனது இசையமைப்பிலும், இசைக்கோர்ப்பிலும் பாடினார்கள். அந்தப்பாடல்களை நீங்கள் யூடிப்பில் இந்த முகவரியுடாக பார்வையிடலாம். (.http://www.youtube.com/watch?v=cPA7LHybe20 ) ( http://www.youtube.com/watch?v=xXuykCIiNRw ).
அதன் பின்னர் நான் எனது படிப்பிலேயே முழுக் கவனத்தையும் செலுத்தினேன். 2011 இல், Audio Engineerig Diploma பட்டம் கிடைத்தது. 2011 ஏப்ரல் இந்தியா சென்றேன். யுவனுடன் 4 மாதங்களுக்கு மேல் பணியாற்றினேன். இந்த நேரத்தில் Apple Computer நிறுவனத்தில் பணிபுரிய என்னை அழைத்தார்கள். அங்கு வேலை செது கொண்டே இசைத்துறையிலும் ஈடுபட்டேன்.
மீண்டும் 2012 இல் எதிர்பாராத அழைப்பு ஒன்று யுவன் சங்கர் ராஜாவிடமிருந்து வந்தது. “ஒரு படம் பண்ணப்போறோம். அதில் நீ தான் பிரதான சவுண்ட் எஞ்ஜினியர். உனக்குப் பிடித்த மிக பிரபலமான ஸ்ரூடியோவை நீயே புக் பண்ணு'' என்றார். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. வார்த்தைகள் வரவே இல்லை. கண்கள் கலங்கி விட்டன. சவுண்ட் எஞ்ஜினியராக என்னைத் தேடி யுவன் சங்கர் ராஜாவே ஐரோப்பா வருகிறேன் என்றவுடன் எனக்கு அளவு கடந்த சந்தோஷத்துடன் உடனே ஜேர்மனியில் மிகப்பிரபலமான ஸ்டூடியோ ஒன்றை புக் செதேன். ஸ்டூடியோவில் நான் அவரை சந்திக்கும்வரை என்ன படம் என்று தெரியாது. அவரும் சொல்லவில்லை. அவர் ஜேர்மனி வந்து இறங்கியவுடன் அது அஜித் அவர்களின் “பில்லா2'' படம் என்றார். எனது சந்தோசத் துக்கு அளவே இல்லை.
பில்லா2 படத்திற்காக கடுமையாக உழைத்து பாடல்களை பதிவு செது முடித்தோம். அந்தப்  படத்தின் பாடல்கள் முழுமையடைந்து வெற்றியையும் தேடித்தந்தன. அதன் பின்னர் ஜெயம் ரவியின் நடிப்பில், அமீரின் இயக்கத்தில் உருவான ""ஆதிபகவன்'' படத்துக்கும் சவுண்ட் எஞ்சினியராகக் கடமையாற்றினேன். இன்னும் பல திரைப்படங்களுக்கு சவுண்ட் எஞ்சினியாரகக் கடமையாற்றவுள்ளேன்.
இளவயதிலேயே தென்னிந்தியத் திரைப்பட உலகில், முதல் இசைக்கோர்வையாளர் என்ற பெயர் எனக்கு கிடைத்துள்ளது. அத்துடன் இலங்கைத் தமிழர்களில் முதல் இசைக் கோப்பாளராகவும் தென்னிந்தியத் திரைத்துறையில் கடமையாற்றியிருக்கிறேன். இந்த நேரத்தில் நான் ஒன்று சொல்ல வேண்டும். எனது திறமையை அறிந்து என் விருப்பப்படி என்னை வழிநடத்திய எனது பெற்றோர்களே என் வெற்றிக்கு முதல் காரணம். அத்துடன், எனக்கு ஊக்கம் தந்து எல்லாவிதத்திலும் அக்கறை எடுத்த எனது சகோதரிக்கும் என் நன்றிகள். எப்போதும் உற்சாகப்படுத்தும் என் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
அதேபோல் நான் இன்னும் பண்ணப்போகும் பாடல்களுக்கும், நான் இசையமைக்கும் அல்பங்களுக்கும் ரசிகர்களாகிய உங்களுடைய ஆதரவு என்றும் தேவை. வரும் காலத்தில் நான் தென்னிந்திய இசையமைப்பளராக வருவதற்கு என்னுடைய அப்பா, அம்மாவின் தா மண்ணின் மைந்தர்களாகிய உங்களின் ஆசியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்...!

சனி, 23 மார்ச், 2013

எனக்கு நானே ரோல் மொடல்...

சூரியன் வானொலியின் மூலம் அறிவிப்புத் துறைக்கு அறிமுகமாகி வசந்தம் டி.வி.யின் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றி இன்றி வெற்றி எப்.எம்.மின் அறிவிப்பாளராக இருப்பவர் பூஜா.
இந்த வாரம் பேஸ்புக் பகுதியினூடாக உங்களை சந்திக்கிறார்.

எனது ரசிகர்களுக்கு வணக்கம்! எனது சொந்த ஊர், பிறந்தது, வளர்ந்தது எல்லாமே கொழும்புதான். அம்மா ஒரு ஆசிரியர். தங்கை, தம்பி, நான்  என அன்பான அழகான சிறிய குடும். ஆரம்பம் முதல் உயர்கல்வி வரை கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றேன். எனது பாடசாலையிலேயே இரண்டு அறிவிப்பாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதில் நானும் ஒருவர் என்பதில் பெருமையடைகிறேன்.
ஆரம்பத்தில் சூரியனில் இடம்பெற்ற தேர்வில் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் எனது அறிவிப்புப் பயணம் தொடர்ந்தது.
நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி குறித்து சொல்ல முடியுமா?
வார நாட்களில் மதியம் 1 முதல் 3 மணிவரை இடம் பெறும் கூல் ஸ்போர்ட்ஸ் அதைத்தவிர நேயர்களின் விருப்பத் தெரிவு பாடல்கள் வாழ்த்துகளுடன் இணைந்து வரும் மியூசிக் மசாலா.

அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள் இப்படிதான் இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள் ஆனால் நீங்கள்


சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி
இருக்கக்கூடாது?
கேள்வி கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு. ஒரு அறிவிப்பாளருக்கு தலைக்கனம் இருக்கக் கூடாது.  தனது பெயரைப் பயன்படுத்தி சொந்த காரியங்களில் ஈடுபடல், சுய விளம்பரம் செதல் என்பவை இருக்கவே கூடாது.

பாடசாலை அனுபவம்?
பாடசாலைக் காலத்தினை மறக்கவே முடியாது. எனது பாடசாலையில் நான் வகிக்காத பதவிகளே இல்லை. எல்லா போட்டிகளிலும் பங்குபற்றுவேன். என் திறமைகளை வெளிக்கொணர்ந்த களம் எனது பாடசாலையும், ஆசிரியர்களும் தான்.

போட்டிகள் நிறைந்த இந்த துறையில் உங்களின் அடையாளம் என்ன?
வேகமான என்னுடைய பேச்சுப் பாணி

இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?
அமரர். கே.எஸ்.ராஜா. கோபி நாத் (நடந்தது என்ன)

நீங்கள் விரும்பி பார்க்கும் தொலைக்காட்சி?
வசந்தம் டீ.வி. விஜ டீவி.

உங்களுடைய ரோல் மொடல் யார்?
எனக்கு நானே ரோல் மொடல். எனினும் சேத்தனா லியனகே. (சிரச செதி வாசிப்பாளர்) பிடிக்கும்

சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருந்த அனுபவம் பற்றி சொல்ல முடிமா?
என்னை ஒரு அறிவிப்பாளராக அறிமுகப்படுத்தியது என் அன்னை வானொலி சூரியன் எப்.எம்.தான் என்னைத் தெரிவு செத லோஷன் அண்ணா, எனக்குப் பயிற்சி அளித்த சிரேஷ்ட அறிவிப்பாளர்களை மறக்க முடியாது. ரமணன் அண்ணா, கிருஷ்ணா அண்ணா, பரணி அண்ணா, நவா அண்ணா, விமல் அண்ணா, சங்கீதா, குமுதினி அக்கா இவர்கள் எல்லோருமே என்னை பட்டை தீட்டி செம்மைப்படுத்தியவர்கள்

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்? பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? 
ரசித்து பார்த்த படம் கும்கி. பிடித்த நகைச்சுவை நடிகர் சந்தானம் (கண்ணா லட்டு தின்ன ஆசையா?)

வாழ்வில் மறக்க நினைப்பது எது?

இத்துறையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் ?
பூவே வா பேசும் போது...

உங்களுடைய பொழுதுபோக்கு?
இசை கேட்பது, ஷொப்பிங் செல்வது, நல்ல நிகழ்ச்சிகளை பார்ப்பது, நகைச்சுவைக் காட்சிகளை இரசிப்பது, எது கிடைத்தாலும் வாசிப்பது.

உங்களிடம் உள்ள அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன?
அழகுக்கலை, பெயின்டிங்ஸ், சமையல்

திறமைகள் இருந்தும் இந்தத் துறையில் நீங்கள் சாதிக்க முடியாதுபோன சந்தர்ப்பங்கள்?
அப்படி எதுவும் இதுவரை இருக்கவில்லை, எனக்குக் கிடைத்த மூத்த அறிவிப்பாளர்களின் வழிகாட்டலினால் நான் எனது முழுப் பங்களிப்பையும் வழங்குகிறேன். முக்கியமாக எனக்கு கிடைத்த பணிப்பாளர்கள் எல்லோருமே மட்டுமல்ல எங்கள் குழுவிற்கும் திறமைகளைக் வெளிக் காட்டுவதற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

சந்திக்க விரும்பும் நபர் யார்?
பில் கேற்ஸ் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான்.

உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ் எந்த நிகழ்ச்சியையும் செயக்கூடிய ஆற்றல். மைனஸ் கோபம்

அடிக்கடி மறக்கும் பொருள்?
மொபைல் போன், பேனா.

படித்ததில் பிடித்தவை?
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு எனும் கண்ணதாசனின் அற்புதமான தத்துவங்கள்.

யாருடன் இணைந்து நிகழ்ச்சிசெயப் பிடிக்கும்?
அபர்ணா அண்ணா, நான் விரும்பும் திறமையான கம்பீரமான குரலுக்கு சொந்தக்காரர். ராஜ், கவிதா அக்கா இருவருமே கலகலப்பான அறிவிப்பாளர்கள். இவர்களோடு இணைந்து நிகழ்ச்சி செய்வது மிகவும் பிக்கும்.

உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
இந்த ஆறு வருடமும் எனக்கு அளித்த ஆதரவுக்கு மிக்க நன்றி. என்னைப் பாராட்டுவது போல என் குறைகளையும் சுட்டிக்காட்டி என்னை மென்மேலும் செம்மைப்படுத்துங்கள்.
இது போல இனிவரும் காலங்களிலும் உங்கள் ஆதரவை வழங்குங்கள். அதுவே புதிய நிகழ்ச்சிகளை  படைத்தளிப்பதற்கான உத்வேகத்தை அளிக்கும்.

சனி, 16 மார்ச், 2013

இசை பயிற்சி அல்ல உணர்ச்சி!

நம்நாட்டு கலைஞர் ஷமீல் உதயசூரியனுக்கு அளித்த நேர்காணல்.

நேர்காணல்: எஸ்.ரோஷன்

எல்லா புகழும் இறைவனுக்கே...! உலகின் ஆதாரமான இறைவனின் பெயரால் ஆரம்பிக்கிறேன். ஹா உதயசூரியன் நண்பர்களே...
நான் ஷமீல். இலங்கையில் இசைத்துறைக்கு நான் அறிமுகமாகி இந்த வருடத்துடன் ஒன்பது ஆண்டுகள் ஆகின்றன.
நான் ""கனவின் கருவில்...'' என்னும் பாடலின் மூலம் இசையமைப்பாளனாக, பாடலாசிரியராக, பாடகராக அறிமுகமானேன்.
இசை எனக்கு அறிமுகமானது பெற்றோர் மூலமாகவே. அதனால், எனக்கு இசை மீதான ஆர்வம் என்பது அதிசயத்தக்க ஒரு விடயமாக இருக்கவில்லை. ஆனால்  புதிதாக பாடல்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது ஒரு புதிய முயற்சி.
திருகோணமலையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் நான் இசைத்துறையை தேர்ந்தெடுப்பதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள்தான்.
முதன் முதலாக  பேட்டியெடுத்து என்னை உற்சாகப்படுத்தியது காண்டீபன் அண்ணாதான். சக்தி வானொலி  மற்றும் அபர்ணா அண்ணா, காண்டீபன் அண்ணா, கஜமுகன் அண்ணா, டயானா, கணாதீபன் அண்ணா, பிரஜீவ் எல்லோருக்கும் இந்த இடத்தில் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதன் பிறகு எனக்கு முகவரி தந்தது சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசர்கள் நிகழ்ச்சிதான். சியா அண்ணா, சமந்த ராஜ் ஆகியோர் எனக்கு களமமைத்துத் தந்தவர்களில் முக்கியமானவர்கள்.  
பிறகு சூரியனில் எப்.எம். இல் கிடைத்த வேலை இசை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப்போது எத்தனையோ பேருக்கு வேலையின் மகத்துவம் புரிவதில்லை. எனக்குக் கிடைத்த இந்த வேலையை ஒரு கொடையாகவே கருதுகிறேன். முக்கியமாக சூரியன் பொறுப்பதிகாரி நவநீதன் அண்ணாதான் நான் இசைத்துறையில் பிரகாசிக்கக் முக்கிய காரணம். எனக்கு ஒரு வழிகாட்டியாக செயற்பட்டவரும் அவரே. இந்த காலகட்டத்தில் தான் நிறைய பாடல்களை உருவாக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.
""எத கேட்டாலும் சூரியன் போல இருக்குமா...'' பாடலில் தொடங்கி இப்போது ஒலிக்கும் ""வான் முழுதும்...'' பாடல் வரை அநேகமான நிலைய குறியிசைகள் செதுள்ளேன். அதில் 2009 ஆம் ஆண்டு ""எத்தனை நாளா...''  என்ற நிலைய குறியிசைக்கு  சிறந்த நிலைய குறியிசைக்கான விருது கிடைத்தது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த நிலைய குறியிசைகளில் 90 வீத வரிகள் நானே எழுதியதுதான்.
 அத்துடன் முக்கியமாக சூரியன் ஆலோசகர் நடராஜசிவம் அவர்களை நினைவுபடுத்தியாக வேண்டும். வானொலி சம்பந்தமான விடயங்களின் ஊற்று என்றும் அவரை சொல்லலாம். அதில் நானும் கொஞ்சம் பருகிக்கொண்டேன்.
அலுவலக கலைஞர்கள் தவிர்ந்து, எனது பாடல்களுக்காக இலங்கை, இந்தியா, அமெரிக்கா, மலேசியா போன்ற நாட்டுக் கலைஞர்கள் பலருடன் பணி புரிந்துள்ளேன். எனது வாழ்வில் ""கனவின் கருவில்...'' பாடலுக்கு அடுத்தபடியாக பெரிய திருப்பம் தந்தது மழைவிழியின்... பாடல்.
இதன்மூலம் கிடைத்த ஒரு மிகப்பரிய கவிஞர் நண்பன் சதீஷ்காந்த். எனது பாடல்களுக்கு நானே வரி எழுதுவதிலிருந்து சற்று ஒதுங்கக் காரணமாக அமைந்தவர். அவரது அறிமுகத்தின் பின் அவரது பாடல் வரிகள்தான் இப்போது எனது இசையை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் இசையமைப்பாளர் நிக்கி  எனது இசையைத் தாண்டிய தொழிநுட்ப அறிவு வளரக் காரணமாக இருந்தவர்.
அமெரிக்க கலைஞர்களுக்காக இசையமைக்கும் போது தான் நிறைய ஒலி பொறியியலாளர்களின் நட்பு கிடைத்தது. எனது பாடல்களில், அன்றிலிருந்து இன்று வரை சண்டைபோடும் சிறந்த ஒளி நயம், அதில் என்றுமே நான் பின் வாங்கியதில்லை. இன்று வரை ஒவ்வொரு பாடல்களும், ஒவ்வொரு வகையாகத்தான் அமைகின்றன. அதன் சிறந்த இசைக் கலவைக்காக கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். இன்னும் எனக்கு திருப்தி ஏற்படாத விடயம் இசை மட்டும் தான்.
எனது வாழ்க்கையில் மனைவி, பிள்ளைகள் முக்கிய இடத்தை வகிக்கின்றார்கள். மனைவியின் ஒத்துழைப்பு கட்டாயம் அவசியம். ஏனென்றால் இசைப்பயண ஆரம்பம் தொடக்கம் இன்று வரை எனக்கு 2 அல்லது 3 மணி நேரம்தான் தூங்கக் கிடைக்கும். அப்படி இருக்க குடும்ப வேலைகளை முழுதுமாக தன் பொறுப்பில் எடுத்து செது வருகிறார். என்னை எந்த கஷ்டமும் படுத்தாது எனது பாடலின் முதல் விமர்சகராகவும் எனது மனைவி நௌசியா இருக்கிறார். மகள் சஷா, மகன் ஹசன். இவர்கள்தான் எனது  உலகம்.
இப்போது எனது இசைப் பயணம் கடல் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. பெயர் குறிப்பிட முடியாத தென்னிந்திய திரைப்படத்தில் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. இசை குரு ரஹ்மானுடன் பல திரைப்படங்களில் பணிபுரிந்தவரினூடாக எனக்கு இப்படி ஒரு வாப்பு கிடைத்தது இறைவன் சித்தம். இந்தப் படம் முடிவுறும் தருவாயில் உள்ளது. அது பற்றியும் விரைவில் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.
புதிதாக இசைத்துறையில் சாதிக்கும் நோக்குடன் வரும் இளைஞர்கள் தொழில் நுட்பத்தில் பின் நிற்க வேண்டாம். உங்கள் மெட்டுகள், இசை சிறப்பாக இருப்பினும், தொழில்நுட்பத்தில் தான் சறுக்கி விடுகிறோம். அதையும் சிறப்பாகக் கவனித்து, இசையை ஒன்றையொன்று குழப்பாத வகையில் அமைத்து, முடிந்தளவு குரல் பதிவில் அந்த பாடலுக்கான உணர்வுகள் வரும் வரையில்  முயற்சி செது பாருங்கள். கட்டாயம் அதில் உங்களுக்கு வெற்றி இருக்கும்.
இசைப் பயிற்சி அல்ல... இசை உணர்ச்சி...!

வெள்ளி, 15 மார்ச், 2013

சிறந்த அறிவிப்பாளர்கள் என்பதை விட செய்தி வாசிப்பாளராவதே எனது இலட்சியம்

சூரியன் வா னொலி அறி விப்பாளர்களில் ஒருவர் தான் கும்மாளம் வேணிஜா. குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர். இந்த வாரம் பேஸ்புக் பகுதியினூடாக சுவாரஷ்யமான விடயங்களை உங்களுடன் பகிர் ந்துகொள்கிறார் வேணிஜா நாராயணசாமி.
நேர்காணல்:எஸ்.ரோஷன்
 ஹாய்... எல்லோருக்கும் வணக்கம்! என்னுடைய சொந்த இடம் இயற்கை அழகின் இருப்பிடமான கண்டி.  அப்பா நாராயணசாமி, அம்மா புஷ்பம், செல்லமா ஒரு குட்டித் தங்கை ஜெயமலர் இதுதான் என்னோட உலகம். என் உணர்வுகளுக்கும் சந்தோசத்திற்கும் உயிர் கொடுக்கும் அழகிய கோவில்.
என் வளர்ச்சிக்கு எப்போதும் பக்க பலமா இருந்தது எனது பாடசாலைதான். (கலஹா ஸ்ரீ ராமகிருஷ்ணா மத்திய கல்லூரி) அத்தோடு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங் கலைமாணி பட்டப் படிப்பினை நிறைவு செய்து இன்று உங்கள் முன் ஒரு அறிவிப்பாளராக இருக்கின்றேன்.

*அறிவிப்புத் துறை பிரவேசம்,  முதல் நாள் அனுபவம்:
வானொலி அறிவிப்பாளராக வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அதற்காக பல முயற்சிகளை செய்தேன். அதற்கான பலன் சில மாதங்கள் கழித்து எனக்கு கிடைத்தது. நேர்முகத் தேர்வுகளின் பின் இறைவனின் கருணையால் தெரிவு செயப்பட்டேன்.
முதல் நாள் அனுபவம் மறக்க முடியாத ஒன்று. தூரத்தே இருந்து காற்றலை வழியே இரசித்த குரல்களுக்கு உரியவர்களோடு அருகே இருந்து வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. சூரிய குடும்பத்தில் நானும் ஒரு அங்கமா இணைந்து கொண்டதும் என் சந்தோசங்களை இரட்டிப்பாக்கின. மேலும் இந்தத் துறையில் என்னை பட்டை தீட்டிய பெருமை நடராஜசிவம் அவர்களையே சாரும்.

*நீங்கள் தொகுத்து வழங்கும் சூரியன் வானொலியின் (கும்மாளம்) நிகழ்ச்சி பற்றி சொல்ல முடியுமா?
தேடல் சார்ந்த தரமானதொரு நிகழ்ச்சிதான் கும்மாளம். ஒவ்வொரு நாளும் புதிய புதிய விடயங்களோடு மணம் வீசும் புதுமையான களம். நேயர்களுக்கு மட்டும் அல்லாமல் நிகழ்ச்சியை தொகுத்து அளிக்கும் எம் அறிவுக்கும் சரியானதோர் விருந்தாகத்தான் இந்நிகழ்ச்சி அமைகின்றது.

*அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள் ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி இருக்கக்கூடாது?
மெ வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் கடமையே கண்ணாயினர். அதுபோல் கடமையில் எப்போதுமே கண்ணும் கருத்துமா இருக்க வேண்டும். எந்த விடயத்திலும் அலட்சியமா இருந்துவிடக் கூடாது. அலட்சியத்தால் பாரிய ஆபத்துகளை சந்திக்க நேர்ந்திடும். அத்தோடு திறமையை நம்பாமல் மற்றவர்களை காக்கா பிடித்து முன்னால் வர நினைப்பது, குரலை மட்டும் வைத்துக்கொண்டு திறன்களை வளர்க்காதவர்கள் ஓர் சிறந்த அறிவிப்பாளராகிவிட முடியாது.

*நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது நடந்த சுவாரஷ்யமான அனுபவம் பற்றி சொல்லுங்களேன்:
ஒரு தடவை எம் கலையக தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. நான் பேச ஆரம்பித்ததும் மறுமுனையில் ஒருவர் மிரட்டும் தொனியில் ஆங்கிலத்தில் உரையாட, எம் மேலதிகாரிகளில் யாரோதான் அழைப்பில் இருக்கின்றார் என பயந்து நடுங்க ஆரம்பித்துவிட்டேன். சற்று நேரத்தின் பின்னர் மறு முனையில் சிரிப்பு சத்தம் கேட்கவும் தான் புரிந்தது, அது எம் சக அறிவிப்பாளர் என...

*பாடசாலை அனுபவம்?  பாடசாலையில் நீங்கள் செத குறும்புகள்:
“அது ஒரு காலம்... அழகிய காலம்...சு வாழ்வில் எப்போதுமே மறக்க முடியாத தருணங்கள் அவை. பாடசாலை காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து செத குறும்புகள் ஏராளம். அதில் குறிப்பிட்டுச் சொல்வதானால் ஒரு நாள் ண்tச்ஞூஞூ ட்ஞுஞுtடிணஞ் நடக்கும்போது நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து வகுப்பில் துப்பட்டாவை பந்து போல சுற்றி எறிந்து  விளையாடினோம். அதை பார்த்த அதிபர் ஒரு சில நாட்கள் எம்மை வகுப்பிற்குள் வர அனுமதிக்கவில்லை.

*இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?
இலங்கையைப் பொறுத்தவரைக்கும் லோஷன் அண்ணா, நவநீதன் அண்ணா  மற்றும் சந்துரு அண்ணா ஆகியோர். இந்தியாவில் ஆஐஎ ஊM பாலாஜி.

*நீங்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி எது?
இளைஞர்களின் துடிப்பை அறிந்து எப்போதுமே தரமான புதிய நிகழ்சிகளை படைக்கும் விஜய் டி.வி. தான் எனக்கு எபோதுமே பிடிக்கும்.

*உங்களுடைய ரோல் மொடல் யார்?
மேனகா மற்றும் ஷைலி 

*சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருக்கின்ற அனுபவம் பற்றி சொல்ல முடிமா?
இங்கு வேலை செகின்றோம் எனும் உணர்வே எமக்கு வருவதில்லை. இது எங்கள் இல்லம், இங்கு இருக்கும் ஒவொருவரும் உணர்வுகளை மதித்து செயற்படும் நல்ல உறவுகள், அத்தோடு எம் நேயர்கள் எம் மீது காட்டும் அன்பும் அளப்பரியது... மொத்தத்தில் இங்கு கிடைக்கும் ஒவ்வொரு அனுபவங்களும் இனிமையானவை.  

*சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்? பிடித்த நகைச்சுவை நடிகர்?
 பிடித்த படம் துப்பாக்கி. பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு.

*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதா சம்பவம் பற்றி சொல்ல முடியுமா?
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாதது.

*அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது?
 மெல்லினமே... மெல்லினமே...

*உங்களிடம் உள்ள அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன?
சிறுகதை, கவிதை எழுதுவது, நடனத்திலும் சற்று ஆர்வம் உள்ளது.

*சந்திக்க விரும்பும் நபர்?
அப்துல் கலாம்

*உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ் எல்லோரிடமும் நட்போடு பழகுவது, மைனஸ்னா கோபமும் கண்ணீரும் தான்.

*நீங்கள் அடிக்கடி கடுப்பாகும் விடயம்?
மும்முரமாக ஏதாவது வேலையில் ஈடுபடும் போது யாரவது அரட்டை அடித்தால் பிடிக்காது...

*நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்? உள்ளத்தில் அன்போடு  உறவாடும் வீணை
உதடுகள் இரண்டுமோ அமுதத்தின் பானை
பதியாத மட மாது பார்வைக்கு பதிலேது
நடை போடும் அநு ராகம் நடமாடும் இளமேகம்
அவள் உள்ளம் பெருங் கோயில் ஊண்  உடம்பு ஆலயம்
தெருவிலே அந்த தேவதை நடந்து வந்தால் இலட்சம் விழிகளால்
அவளுக்கு லட்சார்ச்சனை ஆனால்
அவள் வாழ வேண்டும் என்றால் தர வேண்டுமாம் வரதட்சணை
(மேத்தாவின் கவிதை)

*யாருடன் இணைந்து நிகழ்ச்சி செயப் பிடிக்கும்?  தரணிதரனோடு இணைந்து நிகழ்ச்சி செய பிடிக்கும்.

*இலட்சியம்: எதிர்காலத்தில் நேயர்கள் மத்தியில் வேணிஜா நாராயணசாமி என்பவள் நல்ல அறிவிப்பாளர் என்பதை விட ஒரு சிறந்த செதி வாசிப்பாளர் என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது கனவு.

*உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது? சூரியனை எப்போதும் தமது உயிராக நேசிக்கும் நேயர்கள் மீதான எனது அன்பு மாற்றமில்லாமல் எபோதும் தொடரும்...!

வெள்ளி, 1 மார்ச், 2013

ஏ.ஆர்.ரகுமான் மாதிரி இருக்கணும்

5வருடங்களை வெற்றிகரமாகக் கடந்து 6 ஆவது ஆண்டிலும் தனது பயணம் தொடரும் வெற்றியில் உற்சாகமாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நேயர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனித்துவத்தை பேணிக் கொண்டிருக்கும் அறிவிப்பாளர் சக்சி! 
அன்பான உதயசூரியன் வாசகர்களும் வெற்றி அறிவிப்பாளர் சக்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...

என்னைப்பற்றி சொல்லனும்னா?  அம்மா, அப்பா நான் என்ற ஒரு சிறு குடும்பம் எங்களது. கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியல் கல்வி கற்றேன். பாடசாலைக் காலத்திலிருந்தே அறிவிப்பாளர் மன்றத்தில் உறுப்பினராகவும் தொடர்ந்து தலைவராகவும் இருந்திருக்கிறேன். இவ்வாறு இருக்கும் பொழுது பாடசாலையில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் தொகுத்து  வழங்கும் வாப்பு எனக்குக் கிடைத்தது. அதுமட்டுமல்லாமல் பாடசாலையில் வருடந்தோறும் நாங்கள் நடத்து Hindu FM  வானொலியும் அறிவிப்புத் துறைக்கு வருவதற்கு ஒரு உந்துசக்தியாக இருந்தது.  பாடசாலைக்காலத்தில்  இருந்தே வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாப்புகள் கிடைத்ததோடு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் அக்னி என்ற விவாத நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக்கூடிய வாப்பும் கிடைத்தது.  இதன்மூலமாக உயர்தரம் முடித்துவிட்டு இந்தத் துறைக்கு உத்தியோகபூர்வமாக வந்தேன்.
நீங்கள் தொகுத்து வழங்கும் vettri FM வானொலியின்  நிகழ்ச்சி பற்றி சொல்ல முடியுமா?
நகைச்சுவை பூர்வமாக நிறைய விடயங்களை சொல்லும் கலகலப்பு நிகழ்ச்சி. வாரநாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை, வெற்றி நைற் டிரைவ்  (Night Drive) மொழி கடந்த இசையினால் (Tamil/ English/ Hindi/ Sinhala இசை) மக்களைக் குதூகலப்படுத்தும் ஒரேயொரு நிகழ்ச்சி (சனி இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை), ஞாயிறு  1 மணி முதல்  3 மணி வரை சக்சியுடன் சனிவூட் நிகழ்ச்சி போன்றவற்றை தொகுத்து வழங்குகின்றேன்.

அறிவிப்புத்துறையைச்  சார்ந்தவர்கள்  இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி இருக்கக்கூடாது?
மக்களுக்குத் தேவையான  விடயங்களை உரிய நேரத்தில் உரிய முறையில் ஊடகத்தில் சொல்ல வேண்டுமே ஒழிய வெளியில் பிதற்றுபவனாக இருக்கக் கூடாது.

நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது நடந்த சுவாரஷ்யமான அனுபவம் பற்றி சொல்லுங்களேன்.
நிகழ்ச்சி நடத்துவதே ஒரு சுவாரஷ்யம் தான், தினம் தினம் ஏராளம் சுவாரஷ்யங்கள் நடக்குது. எதை சொல்றது?

பாடசாலை அனுபவம் எப்படி?, பாடசாலையில் நீங்கள் செத சேட்டை, அதனால் அடிவாங்கிய அனுபவம் உண்டா?
பாடசாலை காலங்களில் நண்பர்களோடு செத குறும்புகள் ஏராளம்! நிறைய சேட்டைகள் செதிருக்கிறேன். மாணவத்தலைவன் என்றபடியால் பாட நேரத்தில் வகுப்பில் இருப்பதில்லை. இதனால் பாட ஆசிரியர்களின் கோபத்துக்கும் ஆளாகியிருக்கிறேன். ஒருமுறை எட்டாம் ஆண்டு படிக்கும் போது  உயர்தர வகுப்புக்குள் இருந்த படியால் அப்போதைய அதிபர் என் முதுகில் அடித்த  அடி இன்னும் வலிக்கிறது.

போட்டிகள் நிறைந்த இந்த துறையில் உங்களின் அடையாளம் என்ன?
மைக் முன்னாடி காட்டுக்கத்து கத்துறது, அதாவது சரளமாக கதைக்கிறது. ஒவ்வொரு நாளும் வித்தியாச வித்யாசன நிகழ்ச்சிகளை படைக்க முயற்சி செய்வது. 

இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?
ஒவ்வொருவரிடமும் வித்தியாசமான  ஒவ்வொரு திறமை உண்டு. அவற்றை ரசிப்பேன் நல்லவற்றை பின்பற்றுவேன்.

உங்களுடைய ரோல் மொடல் யார்?
A.R.RAHMAN அவசரப்பட்டு அவர்போல பெரிய இசை மேதையா வரப்போறேன்னு நினைச்சுடாதிங்க.  என்ன தான் இமயத்துல இருந்தாலும் அவர் போல்  எளிமையான இயல்பு எனக்கு எப்போதும் இருக்கணும்னு ஆசைப்படுகிறேன்.

தொலைக்காட்சியிலும் /  வானொலியிலும்  நிகழ்ச்சி செயும்போது உங்களுக்கு  ஏற்படுகின்ற அனுபவம் அல்லது வித்தியாசம்  பற்றி சொல்ல முடிமா?
இரண்டுமே வெவ்வேறான ஊடகங்கள். உங்களுக்கு தெரியும் வானொலியில் குரல் மட்டுமே வெளிக்காட்டப்படும். ஆனால், தொலைக்காட்சிக்கு உடல் மொழி, சாதாரணமாக அருகிலிருந்து கதைப்பது போன்ற உணர்வை பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஏற்படுத்தவேண்டியிருக்கிறது.  

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் ஏது? பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? எந்தப்படம்?
விஸ்வரூபமெடுத்த விஸ்வரூபம்  1st day 1st show
நகைச்சுவை நடிகர்: அப்போ வடிவேல் இப்போ சந்தானம்

உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதா சம்பவம் பற்றி சொல்ல முடியுமா?
இன்னும் என் மனதை தாக்கும் கசப்பான அனுபவம் எதுவும் இல்லை, நான் பச்ச மண்ணுப்பா. அப்படியே கெட்ட அனுபவம் ஏதும் நடந்தா அடுத்த நிமிஷமே மறந்துடுவேன்.

எந்த வகையான பாடல் உங்களுக்கு பிடிக்கும்? அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது?
புதிய பாடல்களை எப்போதும் ரசிப்பேன். அண்மைக்காலமா காதல் பாடல்கள் ரொம்பப் பிடிக்குது, காதல் மாதம் என்றபடியாலோ தெரியல...

உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
இசையை ரசிப்பேன், வேலை முடிந்ததும் நண்பர்களோடு அரட்டை, பின்பு குறட்டை.  குறிப்பாக பழைய மற்றும் வெளிநாட்டு நாணயங்களை சேகரிப்பது.

உங்களிடம் உள்ள அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன?
கொஞ்சம்  Magic செவேன். இதுதான் என்னுடைய தொலைகாட்சி பிரவேசத்துக்கு உறுதுணையாக இருந்தது.

சந்திக்க விரும்பும் நபர் யார்?
கடவுளைத் தான், ஏன் தெரியுமா? இந்த உலகம் தலை கீழா இருக்கு. அதை கொஞ்சம் நேராக்கிட்டு போங்கனு சொல்லத் தான்.  சும்மா சொன்னேங்க தப்ப நினைக்காதீங்க...

உங்களுடைய (பிளஸ்,மைனஸ்) என்ன?
பிளஸ்: எல்லோரோடும் நொடிப்பொழுதில் பழகி விடுவேன்.
மைனஸ்: மைக்கில கத்துறது போதாதுன்னு வெளியிலையும் அதிகமா கத்திடுவேன்.

நீங்கள் அடிக்கடி கடுப்பாகும் விடயம் என்ன?
நேரடி நிகழ்ச்சி செது கொண்டிருக்கும் போது  என்னோடமொபைலுக்கு கோல் பண்ணி பாட்டு கேட்குறது.

அடிக்கடி எந்த பொருளை மறப்பீர்கள்?
என்னோட கண்ணாடி

நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
steve jobs Cß Think Different Change the world என்ற கருத்து.

உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
இதே அன்பும் ஆதரவும் எப்போதும் வேண்டும், விமர்சனகளையும், கருத்துகளையும் உடனுக்குடன் தெரிவிக்கும் நேயர்களுக்கு நன்றி.
எஸ்.ரோஷன்

புதன், 6 பிப்ரவரி, 2013

சூரியன் அறிவிப்பாளராக இருப்பதை எண்ணி பெருமை அடைகிறேன்

 சூரியன் வானொலி அறிவிப்பாளர் ????? உதயசூரியன் பத்திரிகைக்கு அளித்த நேர்காணல்.
நேர்காணல்:  எஸ்.ரோஷன்

வானொலி ரசிகர்கள் பலரை கண்ணயரவிடாமல் செய்தது சூரியனின் ரீங்காரம் நிகழ்ச்சி என்று சொல்லலாம்.  இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருப்பவரும், செய்தி வாசிப்பாளருமான லரீப் இந்த வாரம் பேஸ்புக் பகுதியினூடாக  இணைந்து கொள்கிறார்.

ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் அன்பான வணக்கம்.
 என்னுடைய சொந்த ஊர் செந்நெல் விளைகின்ற சம்மாந்துறை. அப்பா அமீர் அலி, அம்மா அவ்வா உம்மா.  வீட்டில் நான் தான் கடைசிப் பிள்ளை. இரண்டு அண்ணன்மார், ஒரு அக்கா. அக்காவின் செல்லக் குட்டீஸ். இதுதான் என்னுடைய உலகம்.
என் திறமைக்கு களம் கொடுத்தது எனது பாடசாலை (சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி). அறிவிப்பாளரானது தற்செயலாக நடந்த விடயம். நேர்முகத் தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்டு சூரியக் குடும்பத்தில் நானும் ஒரு அங்கமாக (பகுதிநேர அறிவிப்பாளராக) இருக்கின்றேன். இந்த அளவு என்னை வளர்த்துவிட்டு, ஒவ்வொரு நுட்பங்களையும் சொல்லிக் கொடுத்த பெருமை சூரியன் குடும்பத்தையே சாரும். 

நீங்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பற்றி?
சூரியனின் விடிய விடிய இரவு சூரியன் மற்றும் ரீங்காரம் நிகழ்ச்சிகளையும், ரமலான் மாத முஸ்லிம் நிகழ்ச்சிகள் மற்றும் சனி,  ஞாயிறு தினங்களில் விடுமுறை   நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகின்றேன்.
இதில் ரீங்காரம் நிகழ்ச்சி நேயர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரீங்கார இரசிகர்களை கண்ணயராது காற்றோடு கதை பேச வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். கவிதைகளையும் அதற்கு ஏற்ற பாடல்களையும் வழங்கி என்னால் இயலுமான அளவில் நேயர்களை சந்தோஷப்படுத்தி வருகிறேன்.

பாடசாலை அனுபவம் பற்றி?

 ஒரு தடவை  புதிதாக பாடசாலைக்கு வந்த மாணவர்களை விளையாட்டாக பகிடி வதை செய்து மாட்டிக் கொண்டு அடிவாங்கியது இன்றைக்கும் மறக்க முடியாது.
அப்புறம் பிரிவென்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத எங்களை பிரித்து அர்த்தம் காண்பித்து சென்ற பள்ளிக்கூட கடைசி நாள் இன்னும்
என் கண்முன்னே வந்து போகிறது.

போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்களின் இலக்கு என்ன?
பரந்ததே உலகம்! சிறந்ததே          செல்வம். செல்வங்களில் சிறந்தது அறிவுச் செல்வம். அதே அறிவால்  போட்டித் தன்மையோடு போட்டி யிடும் இளைஞர்களுக்கு மத்தியில் நானும் பலரும் போற்றும்  ஓர்   சிறந்த செதி வாசிப்பாளராக மிளிர
வேண்டும் என்பதே எனது இலக்கு.

அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர் யார்?

நிறையப் பேரை பிடிக்கும். குறிப்பிட்டுச் சொல்வதானால் நவா அண்ணா, சந்ரு அண்ணா, ரவூப் அண்ணா ஆகியோரைப் பிடிக்கும்.

சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருக்கின்ற அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?
வானில் எவ்வளவு நட்சத்திரங்கள் இருந்தாலும் நிலவிற்கு ஈடாகுமா? அதேபோல உலகில் எத்தனை வானொலிகள் இருந்தாலும் அவை  சூரியனிற்கு ஈடாகுமா? எனவே அப்படியான சூரிய குடும்பத்தில் இருப்பதை எண்ணிப் பெருமையடைகிறேன்.
பிரபலங்களின் நட்பு, நாட்டு நடப்புகள் உலக விவகாரங்கள் போன்ற பல விடயங்களை தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. என்னை  அடையாளப்படுத்திய பெருமை சூரியனையே சாரும்.

வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்?
2011.7.25 இந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.  ஏனென்றால் இந்த நாளில்தான் நான் சூரியனில் முதன் முதலாக நவா அண்ணா மூலம் என்றென்றும் புன்னகை நிகழ்ச்சியில்   அறிமுகமாகினேன். சந்தோஷத்தின் உச்சகட்டம் எது என்பதை அன்று நான் உணர்ந்தேன்.

அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது?
உன் பேரை சொல்லும் போதே உள் நெஞ்சில் கொண்டாட்டம்...

அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் ?
விளையாட்டு, கவிதை எழுதுதல்

உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ்: எல்லோரோடும் இணங்கிப் போதல்
மைனஸ்: தடுமாற்றம்

அடிக்கடி கடுப்பாகும் விடயம் என்ன?
தொலைபேசி அழைப்பிற்கு பதில் இல்லாமல் இருக்கும் போது.

நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
""யாயும் ஞாயும் யாராகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப்பெயல்  நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே ''
எனும் கவித்துவமான வரிகள்.


நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
அறிவிப்பளர்கள் பிறப்பதில்லை உருவாகுபவர்கள். ஆகவே அவர்களின் திறமையை பாராட்டும் நீங்கள் அவர்களுடைய சிறு சிறு குறைகளுக்காக அவர்களை விட்டு  விலகாதீர்கள்.


சனி, 15 டிசம்பர், 2012

விஜயிடம் இருந்து கற்றுக்கொண்டேன்...

         ரோஜாக்கூட்டம் படத்தில் இளம் கதாநாயகனாக அறிமுகமாகி அடுத்தடுத்து ஹிட் நாயகனாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் வலம் வந்தவர் ஸ்ரீராம்  என்கிற ஸ்ரீகாந்த் தினக்குரல் பத்திரிகையின் சகோதர வெளியிடான உதயசூரியன் பத்திரிகைக்கு அளித்த நேர்காணல்.

நேர்கண்டவர்:எஸ்.ரோஷன்

ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு மீண்டும் நண்பன், பாகன் என பிஸியாகி அதே ஹிட் இடத்திற்கு வந்திருக்கிறார்.
தமிழில் மட்டுல்ல தெலுங்கு, மலையாளத்திலும்  இப்போது பிஸியான நடிகராக இருக்கும் ஸ்ரீகாந்த் இந்த வாரம் பேஸ்புக் பகுதியில் உங்களோடு...!

வணக்கம் நான் உங்கள் நண்பன் ஸ்ரீகாந்த்! சென்னையில படிக்கும் போதே  எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் முதலில் அறிமுகமானது சின்னத்திரையில்தான். பாலச்சந்திரன் சேரின் மரபுக்கவிதைகள் என்ற  தொலைக்காட்சி தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதேசமயம் நான் மொடலிங் செய்து வந்தேன். என் படத்தை பார்த்து விட்டு  ரோஜாக்கூட்டம் திரைப்படத்திற்கு அழைப்பு வந்தது. ஆனா அந்த கேரக்டருக்கு ஏற்ற வயது எனக்கு இருக்கவில்லை. பின்னர் 2 வருடத்திற்கு பிறகு ரோஜாக்கூட்டம் படத்தில்  நடித்து மக்கள் மத்தியில் பிரபல்யமானேன்.

*ரோஜாக்கூட்டம், ஏப்ரல் மாதத்தில், பார்த்தீபன் கனவு என்று ஆரம்பத்தில் வெற்றிப் படங்களைத் தந்து அசத்தி வந்த நீங்கள் சிறிதுகாலம் அவ்வளவு ஜொலிக்கவில்லையே?
எல்லோருடைய வாழக்கையிலும் வெற்றி தோல்வி  என்று இருக்கும் இல்லையா...? நான் வெற்றிகளையும்  பார்த்து இருக்கிறேன். ஒரு கட்டத்திற்கு பிறகு தோல்விகளையும் பார்த்திருக்கிறேன். தவறுகளை திருத்திக் கொண்டால் வாழ்க்கையில முன்னேற வழி கிடைக்கும். நான் தோல்விகளிலிருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டேன்.  இப்போது நண்பன், துரோகி, பாகன் போன்ற வெற்றிப்படங்களை தந்து கொண்டிருக்கிறேன்.

* நண்பன் படத்தில் விஜய், ஜீவாவுடன் இணைந்து நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
 ஜீவா நான் சினிமாவுக்கு வந்த போது வந்த நடிகர்! ஆனால் விஜய் என்னைவிட மூத்தவர். என்னுடைய நெருங்கிய நண்பர்.
எல்லோரிடமும் ரொம்ப யதார்த்தமாக பழகக்கூடிய ஒருவர்.  ரொம்ப அனுபவசாலி. அவருடைய வார்த்தைகளும்  ரொம்ப கவனமாக இருக்கும். நண்பன் படம் மூலமாக நான் விஜயிடம் நிறைய  கற்றுக்கொண்டேன்.

* கல்லூரி மாணவனாக அதிகமான படங்களில் நடித்துள்ளீர்கள் அது பற்றி?
 இடையில் எனது வயதுக்கு மீறிய கதைகளிலும் நடித்திருந்தேன். நான் இந்த வயசில ஒரு கல்லூரி  மாணவனா நடிக்கலனா பிறகு நடிக்க முடியாது.  அந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்த வேண்டுமென்று கல்லூரி மாணவன் கதைகள் வந்ததால் நடித்தேன்.

 *கதைகள் தெரிவு செய்யும் போது எவ்வாறான   விடயங்களில் கவனம் செலுத்துவீர்கள்?
நான் ஏற்கனவே நடித்த படங்களின் கதைகள் போல் இருந்தால் தெரிவு செய்ய மாட்டேன். எனது கதாபாத்திரத்தில் என்ன புதுமை இருக்கு என்று பார்ப்பேன். இயக்குநர்  அந்தக் கதை மூலம் நம்மள வெளிப்படுத்துவாரா என்று தெரிந்து  கொள்வேன்.

* இலங்கைக்கு பல தடவைகள் வந்து இருக்கிறீர்கள். அந்த அனுபவம் பற்றி?
 பார்த்திபன் கனவு, வர்ணஜாலம் ஆகிய திரைப்படங்களை முழுமையாக இலங்கையில் தான் பண்ணினோம். பிறகு ஜூட் படத்தின் பாடல் காட்சிக்காகவும் இலங்கை வந்து இருக்கிறேன்.
றம்பொடை, நுவரெலியா, கண்டி, பெந்தோட்ட, கொழும்பு போன்ற இடங்களுக்கு திரைப்பட சூட்டிங்காக வந்து இருக்கிறேன். இதன்போது இலங்கை நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பும் கூட கிடைத்தது.

எங்களுக்கு தெரிந்த விடயங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளக் கூடியதாக இருந்தது.
இலங்கை மக்கள் ரொம்பவும் அன்பும், பாசத்துடனும் பழகுபவர்கள்.
நாங்கள் தமிழ்  நாட்டில் இருந்து வந்திருக்கிறோம் என்றதும் அவர்களுடைய விருந்தாளிகள் போல் கவனித்துக் கொண்டார்கள்.

*உங்களுக்கு கிடைத்த விருதுகள் பற்றி?
விருதுகளை எண்ண முடியாது. அண்மையில் கூட மலேசியாவில்  பாலச்சந்திரன் சேர் கையால சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

* சொந்தக் குரலில் பாட வேண்டும் என்ற ஆசை உண்டா?
 சந்தர்ப்பம்  கிடைத்தால் பாடுவேன். ஆனா கொஞ்சம் பயம் இருக்குங்க. ஏன்னா  நம்ம குரலை கேட்டு மற்றவங்க என்ன ஆவங்க என்று!

*அரசியலுக்கு வரும் ஐடியா?
சத்தியமாக கிடையாது. அரசியல் எனக்கு ஏணி வச்சாகூட எட்டாதுங்க.  நான் ஒரு நடிகனாக (கலைஞனாக) மட்டும் தான் இருக்க ஆசைப்படுகிறேன்.

* இயக்குநர் ஆகும் ஆசை?
நான் நடிப்புல மட்டும் தான் கவனம் செலுத்தனும் என்று நினைக்கிறேன். நடிப்பு கடல் மாதிரி. நான் இன்னும் நிறைய  தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.  நான் என் திறமையை இன்னம் வளர்த்துக்கொள்ள ஆசைப்படுகின்றேன்.

 * உங்களுடன் இணைந்து நடித்த நடிகைகள் பற்றி?
நான் அதிகமா  சினேகா, மீராஜாஸ்மின், சோனியா அகர்வால் ஆகியோருடன் ஜோடி சேர்ந்து நடிச்சிருக்கேன். சினேகா புன்னகை அரசி.  நன்றாக தமிழ் பேசுவாங்க. தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தவங்க. இவங்க கூட நடித்ததில்  எனக்கு பெருமையும் மகிழ்ச்சியுமாக இருக்கு.
அடுத்தது  மீரா ஜாஸ்மின்,  நடிப்பு என்பது அவங்களுக்குள் ஊறியிருக்கும் ஒரு விடயம். ஒரு சிறந்த நடிகையுடன் நடித்ததில் ரொம்ப மகிழ்ச்சி.
அப்புறமா சோனியா அகர்வால்.  இவங்களுக்கு தமிழ் பேச வராது என்றாலும் ரொம்ப அன்பாக பழகுவாங்க. இவங்க 3 பேர் கிட்ட  இருந்தும் பல விடயங்களை கற்றுக்கொண்டேன்.

*நீங்கள் சந்திக்க நினைக்கும் நபர் ?
 வேற யாருங்க!  நம்ம உலக நாயகன் கமல்தான்.  கமல்  பெரிய அறிவாளி. சினிமாவைப் பற்றி எத்தனை கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் கொடுத்து கொண்டே இருப்பாருன்னு கேள்விப்பட்டிருக்கிறேன்.
நண்பன் படக்காட்சியில் நிஜமாகவே அழுதேன்...
* நீங்கள் நடித்ததில் உங்களுக்குப் பிடித்த காட்சி?
‘நண்பன்’ படத்தில் ஒரு காட்சி. நான் படிக்காம கமரா மேனாக போகனும்னு அப்பாவிடம் சொல்ல  அவர் வேண்டாம்னு சொல்வாரு. அந்த சமயத்தில என் ஆசை நிறைவேறாத ஏக்கத்தில அழுவேன். அந்தக்  காட்சியில் உண்மையாகவே அழுதுட்டேன். இந்தக் காட்சி என் வாழ்க்கையில் நடந்த காட்சியாகத் தான் பார்க்கிறேன். ஆரம்பத்தில் அப்பாகிட்ட படிப்ப விட்டுட்டு சினிமாவுக்கு  போவதற்கு அனுமதி கேட்டேன். அப்பா சம்மதிக்கலை.  அப்போது நண்பன் படக்காட்சி போன்றே அழுதேன்.

*அண்மையில் தீபாவளி கொண்டாடிய அனுபவம்?
எனது  ஆண் குழந்தைக்கு மூன்றரை வயது, பெண் குழந்தைக்கு ஒன்றரை வயது.  இவங்களுடன் சேர்ந்து சொந்தக்காரர் வீடுகளுக்குச் சென்றும் பட்டாசு வெடித்தும் கொண்டாடணும் என்று ஆசைப்பட்டோம்.  அதேமாதிரி கொண்டாடினோம். எனது வீட்டுக்கு சில தொலைக்காட்சிகள் வந்து என்னுடன் சேர்ந்து தீபாவளி நிகழ்ச்சியை கொண்டாடினார்கள்.  நிறைய விடயங்களை இந்தத் தீபாவளிமூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது.

 *உங்களுடைய குழந்தைகளை  நடிக்க அனுமதிப்பீர்களா?
எனது குழந்தைகளுக்கு விருப்பம் இருந்தா அவங்க வருவாங்க. நான் அவங்க நல்லா படிக்கணும்னு தான் ஆசைப்படுகின்றேன். அவங்க படித்து முடித்தவுடன் பார்க்கலாம்.

*இலங்கை  ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
நல்ல படங்களை பாருங்கள். திருட்டு சீடி மூலமாகவோ ஒன்லைன் மூலமாகவோ படங்களை பார்க்க வேண்டாம். இது எல்லோரும் சொல்லும் விடயம்தான். ஒரு படம் நல்லா இருக்குதா? இல்லையா? என்றதை நீங்களே பார்த்து நீங்களே முடிவெடுங்கள். அடுத்தவங்கக்கிட்ட தெரிந்து கொண்டு இந்தப் படம் நல்லாருக்கா படம் ஓடுமா என்று தெரிந்து கொண்டு போறதை விட அந்த முடிவு அவங்களுடையதாக இருக்கணும். ஏன்னா ஒரு படத்துக்கு பின்னாடி பலருடைய வாழ்க்கையும் இருக்கு. சில குடும்பங்களும் அதை நம்பியிருக்கு.
அழகான இந்தத் திரையுலகம் இன்னும் வாழ வேண்டும் என்றால் நீங்கள் உங்களுடைய ஒத்துழைப்பை கொடுக்கவேண்டும். உங்களை மகிழ்ச்சிப்படுத்த நாங்க இருக்கோம்.




வெள்ளி, 30 நவம்பர், 2012

எனக்கு கைக்கொடுத்த வேட்டைக்காரன் பாடல்...


வசந்தம் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஷரன் ஜிதேந்திரா.  ஞாயிற்றுக் கிழமைகளில் மியூசிக் கபே நிகழ்ச்சி மற்றும் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஹரன் ஜிதேந்திரா இந்த வார உதயசூரியனில் 


நேர்காணல்: எஸ்.ரோஷன்

சினிமாவைப் போல் அறிவிப்புத்துறையும் மிகப் போட்டி நிறைந்தது. நேயர்களின் ரசனை அறிந்து, காலம் உணர்ந்து சில நிமிட பேச்சுகளில் உள்ளத்தை கொள்ளைக் கொள்வது ஒரு அபாரமான கலை! அந்தக் கலையை சரியாகக் கையாளத் தெரிந்தவர்கள் மட்டும் ஜெயிக்கிறார்கள்.
அந்தவகையில் நேயர்களின் உள்ளத்தில் இடம்பிடித்து ஒரு வெற்றிகரமான அறிவிப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் வசந்தம் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஷரன் ஜிதேந்திரா.
 ஞாயிற்றுக்கிழமைகளில் மியூசிக் கபே நிகழ்ச்சி மற்றும் நினைத்தாலே இனிக்கும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ஹரன் ஜிதேந்திரா இந்த வார உதயசூரியனில் உங்களோடு தனது அனுபவங்களைப்  பகிர்ந்து கொள்கின்றார்.

ஹாய் வணக்கம்! என் சொந்த இடம் எட்டியாந்தோட்டை. அப்பா சச்சுதானந்தன் ஒரு ஓவியர், அம்மா கஸ்தூரி ராணி, செல்லத் தங்கை சரண்யபாரதி என அழகான குடும்பம்.
ஆரம்பக் கல்வியை எட்டியாந்தோட்டை சென். மேரிஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றேன். பின்னர் புலமைப்பரிசில் மூலம் கொழும்பு டீ.எஸ்.சேனாநாயக்க கல்லூரியில் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைத்தது.
ஊடகத்துறைக்கு வந்தது ஒரு பெரிய கதை. இலங்கையில் ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியின் மூலமாக கவிஞர் அஸ்மியினுடைய நட்புக் கிடைத்தது. அதன் பிறகு சிறிதுகாலம் வேலை இடமாற்றம் காரணமாக தொடர்பு இல்லாமலிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் வசந்தம் டி.வி.யின் புது வசந்தம் நிகழ்ச்சியில் பாடுவதற்காகச் சென்ற எனது நண்பன் சுதர்ஷன் மூலமாக அஸ்மியின் தொடர்பு  மீண்டும் கிடைத்தது. அவரது உதவியால்தான் அறிவிப்பாளராக இணைந்தேன்.

முதல் நாள் நிகழ்ச்சியை தொகுத்தளித்த அனுபவம்  வாழ்நாளில் மறக்கவே முடியாது. முதல்நாள் இரவு முழுதும் நான் தூங்கவே இல்லை. தூக்கமே வரவில்லை. அடுத்த நாள் ரொம்ப பதற்றமாக இருந்தேன்.
பதற்றமாக இருக்கும் போது பாட்டு கேட்பது வழக்கம். உடனே என்னுடைய செல்போனை எடுத்து பாட்டைப் போட்டேன். வேட்டைக்காரன் படத்துல புலி உறுமுது, பாடல் போனது. அந்தப்பாடல் என்னுள் ஏதோ ஒரு அசாத்தியமான துணிச்சலை ஏற்படுத்தியதை உணர்ந்தேன். அந்தப் பாடல் வரிகள் எல்லாம் எனக்கே எழுதின மாதிரி இருந்தது. அந்தத் தைரியத்தில் அப்படியே போய் கமரா முன்னாடி நின்றேன். நிகழ்ச்சியை வெற்றிகரமாக முடித்தேன். அதை இன்றைக்கு நினைத்தாலும் சிரிப்புதான் வரும். ஒரு விடயத்தை செய்யும் போது நாம் என்ன மன நிலையில இருக்கிறோம் என்பது முக்கியம் என்பதை அன்று உணர்ந்து கொண்டேன்.

போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்களின் அடையாளம் என்ன?:
எனது அடையாளத்தை , தனித்துவத்தை ரசிகர்கள்தான் சொல்லணும் என்பது  என்னுடைய கருத்து. இருந்தாலும் புதிதாக ஏதாவது பண்ணணும். 5 நிமிடம் பேசினாலும் அதில் எனக்குத் தெரிந்த ஏதாவது ஒரு விடயத்தை நேயர்களிடம் பகிர்ந்து கொள்ளணும் என நினைப்பேன்.

அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்கள் யார்?  இந்திய அறிவிப்பாளர்கள் என்றால் அறிவிப்பாளராக இருந்து நடிகராக மாறிய சிவகார்த்திகேயன் அப்புறம் கோபிநாத் ஆகியோரை ரொம்பப் பிடிக்கும். இலங்கையில் இராஜேஸ்வரி அம்மாவையும் லோஷன் அண்ணாவையும் பிடிக்கும்.

வசந்தம் டி.வி.யில் கிடைத்த மறக்க முடியாத சம்பவம்:  வசந்தத்தில் ஒளிபரப்பாகும் ஆட்டோகிராப் நிகழ்ச்சிக்கு வந்திருந்த இராஜேஸ்வரி அம்மாவை சந்தித்து பேசியது. அதன் பிறகு சில நாட்களில் அவர் இறந்த செய்தி கேட்டதும் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.   சித்திரைப் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக முதன் முதல் யாழ்ப்பாணம் சென்ற அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.

உங்களுடைய ரோல் மொடல்: நிச்சயமாக என்னோட அம்மாதான். ஒரு பிரச்சினையை எப்படித் தைரியமாக எதிர்கொள்வது அதை எப்படி வென்று வருவது என்ற மன தைரியத்தை அம்மாவிடம் தான் கற்றுக் கொண்டேன்.
பிடித்த நடிகர், நடிகை: பிடித்த நடிகர்  தல அஜித். சமூகத்துல உயர்ந்த அந்தஸ்துல இருந்தாலும் எளிமையும், எவருக்கும் உதவும் தன்மையும் இவர் மேல இருக்கிற பிரியத்தை நாளுக்கு நாள் அதிகரித்தது. எப்போதும் வெற்றிப் படங்களையே கொடுத்து மக்களின் இதயத்தில் இடம் பிடிக்கிறது சாதாரண விடயம்தான். ஆனாலும் தோல்விப் படங்களை கொடுத்தாலும் இவர் மீது ரசிகர்கள் வெறித்தனமா இருக்கிறாங்கன்னா அதற்கு காரணம் அவரோட உயர்ந்த பண்பு.
நடிகைகளில் ஸ்ரேயாவை ரொம்பப் பிடிக்கும். அடுத்தது காஜல் அகர்வாலையும் பிடிக்கும்.

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்: துப்பாக்கி. இலங்கையில் முதல் காட்சி  பார்த்து விட்டு இது  மிகப் பெரிய வெற்றியடையப் போவதை உணர்ந்தேன். இத்திரைப்படத்திற்கு வரப்போகும் பிரச்சினையைப் பற்றியும் உணர முடிந்தது.

வாழ்வில் மறக்க நினைப்பது: ஒரே நாள் இரவில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொன்ற சுனாமியின் நினைவுகள் மற்றது 2012.12.21 இல் உலகம் அழிந்து விடுமோ என்கிற நினைப்பையும் மறக்க விரும்புகிறேன்.

மறக்க முடியாத சம்பவம்: நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு கலை விழா நிகழ்ச்சிக்கு அம்மா வந்திருந்தாங்க. நான் நடன நிகழ்ச்சியில் மட்டும்தான் இருந்தேன். ஆனால், போட்டி நிகழ்ச்சிகளில் பரிசில்கள் வாங்கிய மாணவர்களை பார்த்துவிட்டு நானும் அப்படி பரிசு வாங்கி இருந்தால் நல்லது என அம்மா கூறி வருத்தப்பட்டாங்க. அதற்குப் பிறகு சில வருடங்களில் நான் கவிதை, கட்டுரை, விவாதம் என எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசும் வாங்கினேன். கடைசியில் 2004ஆம் ஆண்டு நான் கல்லூரியின் இந்த மாணவர் மன்றத் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். பின்னர் நாங்கள் ஒழுங்கு செய்திருந்த போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு என் கையால் சான்றிதழ் வழங்குவதை அம்மா பார்த்துச் சந்தோசப்பட்டாங்க. அன்று நான் பெற்ற சந்தோசத்திற்கு அளவே இல்லை. இந்த சம்பவத்தை என்றும் மறக்க மாட்டேன்.

அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்: லேட்டஸ்ஸா துப்பாக்கி படத்தில் அலைக்க லைக்க அப்பிள் என்ற பாடல்.

அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள்: கொஞ்சம் கொஞ்சம் கவிதை எழுதுவேன். ரொம்ப சுமாரா பாடுவேன், அப்புரம் நல்லா சுவீமிங் பண்ணுவேன், அப்பா மாதிரி கொஞ்சம் வரைவேன்.

சந்திக்க விரும்பும் நபர்: நடிகர் அஜித் அவரைச் சந்தித்து பிறகு அப்படியே அவருடைய உதவியுடன் சுப்பர் ஸ்டார், உலக நாயகன், இசைப்புயல், கவிப்பேரரசு ஆகியோரைச் சந்திக்க ஆசை.

திருமணம் எப்போது: திருமணத்தைப் பற்றி இன்னும் யோசிக்கவில்லை. இன்னும் 2 வருடங்களில் நடக்கும் என்று நினைக்கிறேன். காதல் என்பது எல்லா மனிதர்களுக்கும் வரக்கூடிய ஒரு பொதுவான உணர்வு. அதுக்கு நான் மட்டும் விதி விலக்கல்ல.

அடிக்கடி மறக்கும் பொருள்: பேனைதான். இதுவரைக்கும் ஒரு பேனையை கூட மை முடியும் வரை பாவித்த சரித்திரமே கிடையாது.

நீங்கள் படித்ததில் உங்களுக்குப் பிடித்தது: வெற்றியாளர்கள் வித்தியாசமான செயல்களைச் செய்வதில்லை. அவர்கள் தாங்கள் செய்வதையே வித்தியாசமாக செய்கிறார்கள் என்ற தத்துவம் ரொம்ப பிடிக்கும்.

யாருடன் இணைந்து நிகழ்ச்சி செய்ய பிடிக்கும்: யாரோடு நிகழ்ச்சி தொகுத்து வழங்க நேர்ந்தாலும் அதை சந்தோஷமாக செய்ய வேண்டும் என்பதுவே என்னுடைய ஆசை.

உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது: நீங்கள் தோல்வியடையும் போதெல்லாம் ஒன்றை நினைத்துக் கொள்ளுங்கள். உங்களை மேலும் பலப்படுத்திக் கொள்ள இறைவன் வழங்கும் வாய்ப்புகள் என உங்கள் மனதை ஊக்கப்படுத்துங்கள்.
மேலும் எனது நிகழ்ச்சிகளை பார்த்து கருத்து தெரிவியுங்கள். காரணம் எங்கள் பலவீனம் என்ன என்பதை உணர்ந்து கொள்வதே எம்முடைய பலம்.

வியாழன், 22 நவம்பர், 2012

ராகுமான் இசையில் பாடனும்...

‘கோ’ திரைப்படத்தில் என்னமோ ஏதோ என்ற ஒரே பாடல் மூலம் உச்சத்திற்கு போனவர் பாடகர் அலப்ராஜ்.  தற்போது மாற்றான் திரைப்படத்தில் இவர் பாடிய  தீயே... தீயே... பாடல்தான் இளைஞர்களின் ரிங்டோன். 

இந்தவாரம்  அவர் உதயசூரியன் வாயிலாக உங்களைச் சந்திக்கிறார்.
நேர்காணல்: எஸ்.ரோஷன்

ஹாய் முதல்ல  எல்லோருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்கள்! நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையிலதாங்க. நான் தமிழன் என்று நீங்க எல்லாம் நினைத்துக் கொண்டிருப்பீங்க. நான் தமிழன் இல்லைங்க. நான் ஒரு மலையாளி.

பாடகராக அறிமுகமாகியது எப்படி ?

எனது குடும்பம் இசைக் கலைஞர்களைக் கொண்ட ஒரு அழகான குடும்பம். என்னுடைய அம்மா பாடகி. அத்தோடு டப்பிங் குரல் கொடுப்பவர். அப்பாவும் பாடகர், இசையமைப்பாளர். இந்தக் குடும்பப் பின்னணியில் இருந்ததால எனக்கும் சின்ன வயசுல இருந்தே இசைத்துறையில் ஆர்வம் இருந்தது. இசைத்துறையில் அப்பாதான் எனக்கு பயிற்சியளித்தார். நாங்கள் இருவரும் பல மேடைகளில் பாடல்களை பாடியிருக்கின்றோம்.  எனது நண்பரான தமன் என்னை  2009 ஆம் ஆண்டு ஐயனார் திரைப்படத்திற்கு பாடுவதற்கு அழைத்தார்.  நான் இதுவரையில் 20  22 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கின்றேன். இன்னும் புதிய பாடல்களையும் பாடிக் கொண்டிருக்கின்றேன். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பாடியிருக்கீங்க. இதில் எந்த மொழியில் பாடுவதற்கு உங்களுக்கு இலகுவாக உள்ளது?

நான் மலையாளி என்பதாலோ என்னவோ மலையாளப் பாடல்கள் பாடுவதற்கு இலகுவாக இருக்கும்.  தமிழில பாடுவது கொஞ்சம் கஷ்டம்தான். தமிழ் மொழியில் சிலவார்த்தைகளை பாவனையாகவும் அழகாகவும் உச்சரித்துப்பாட வேண்டும் என்ற காரணத்தினால்தான். இருந்தாலும் தமிழில் பாடுவது ரொம்பப் பிடிக்கும்.

நீங்கள் பாடிய பாடலில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எது ?

 கோ படத்தில என்னமோ ஏதோ... தான் என் பேவரிட். இந்தப் பாட்டுதாங்க என் வாழ்க்கையையே மாற்றியது. இதுக்கு பிறகு தான் எனக்கு பல விருதுகளும் நிறைய சந்தர்ப்பங்களும் கிடைத்தது. அதுமட்டுமல்ல இன்றைக்கு வரை ஹிட்டாகவும் இருக்குது.

நீங்க ஹீரோ மாதிரி இருக்கீங்க.  ஏதாவது திரைப்படத்தில் நடிக்கனும்னு என்று தோணலியா?

ஏங்க எக்கு தப்பா கேக்குறீங்க. படங்களில் நடிக்கிறது என்று இதுவரை நான் யோசித்தது கூட கிடையாது.
எந்த ஹீரோவுக்கு உங்களுடைய குரல் ஒத்துப்போகுமென்று நினைக்கின்றீர்கள்?

எனக்கு யாராக இருந்தாலும் பரவாயில்லை. உதாரணமாக என்னமோ ஏதோ பாட்டுக்கு யார் நடிகர் என்று தெரியாது. பிறகுதான் நடிகர்  ஜீவான்னு தெரியும். அதேமாதிரி எங்கேயும் காதல் படத்தில் நான் பாடிய  எங்கேயும் காதல் பாட்டுக்கு பிரபுதேவா  தான் திரையில வருவார் என்று தெரியாது. ஆனா ரெண்டு பேருக்குமே அந்தப்பாடல் ரொம்பப் பொருந்திப் போனது.   யார் நடித்தாலும் பரவாயில்லை எனது பாட்டு மக்கள் மத்தியில் வெளிவந்தால் அதுவே எனக்கு சந்தோஷம்தான்.
வெற்றிக்குத்தேவை திறமையா? அதிர்ஷ்டமா?
இரண்டுமே தேவை.

 தீபாவளியில் உங்களுக்கு மறக்கமுடியாத அனுபவம் இருக்கா?

நான் ஒரு கிறிஸ்தவன். இருந்தாலும் சின்ன வயசுல இருந்தே தீபாவளி என்றால் எனது நண்பனுடைய வீட்டுக்குப் போவேன். அந்தத் தொடர்மாடி கட்டிடத்தில உள்ள எல்லாரும் ஒரு இடத்தில கூடி பட்டாசு வெடிப்பாங்க. ரொம்ப சந்தோஷமாகவும் அழகாகவும் இருக்கும். 

சந்திக்க விரும்பும் நபர் யார்?

நான் நிறைய இசையமைப்பாளர்களை சந்தித்திருக்கின்றேன். ஆனால் சந்திக்க விரும்பும் ஒரே ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான் தான். அவர் இசையில் பாடனும்னு இல்லாவிட்டால் அவரது பாடலுக்கு கிட்டார் வாசிக்க சந்தர்ப்பம் கிடைச்சாலே போதும்.

இலங்கை வந்த அனுபவம் பற்றி?

2010 இல் நான் இலங்கைக்கு வந்திருக்கின்றேன். கிட்டார் வாசிப்பதற்காக. நிறைய நண்பர்களை அங்கு சந்தித்தேன். கொழும்பு அனுபவம் எனக்கு சிறந்த அனுபவமாக இருந்தது.

இன்றைய பாடலாசிரியர்களில் உங்களுக்குப் பிடித்தவர் யார்?

புதுப் பாடலாசிரியர்கள்ல வந்து மதன் கார்க்கி ரொம்பப் பிடிக்கும். அவரது வரிகளில் கவித்துவத்தோடு புதுமையும் இருக்கும். 

மாற்றான் படத்துல தீயே... தீயே... பாடல் அனுபவம் எப்படி?

ஹரிஸ் ஜெயராஜ் சேர் பாடக் கூப்பிட்டார். இரட்டை வேடத்தில நடிக்கிற சூரியாவில் ஒரு  சூரியாவுக்கு நான் பாடினேன். ஹாரிஸ் ஜெயராஜ் கூட பணியாற்றுவது ரொம்ப இனிமையான அனுபவம்.

இலங்கையிலுள்ள உங்களுடைய ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

உங்கள் எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி. நீங்க தருகிற ஆதரவுதான் எங்களோட பலம். அது ரொம்ப முக்கியம். உங்களுடைய பாராட்டுக்கள் தான் எங்களுக்கு ஊக்கம் கொடுக்கின்றது. பாடகர்களாகிய எங்களுக்கு எப்போதும் உங்களுடைய பங்களிப்பைத் தாருங்கள். 

வெள்ளி, 9 நவம்பர், 2012

பாடகியாக ஆசைப்பட்டேன்....


சூரியன் FM அறிவிப்பாளர்
 Fresha.IN 
நேர்காணல்
நேர்காணல்:
எஸ்.ரோஷன்


புத்துணர்ச் சியான காலைப் பொழுதில் இனிமையான பாடல்கள், வாழ்த்துக்களோடு சூரியன் வானொலியில் அருணோதயம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் தொகுப்பாளினி Fresha.
 இந்த வார உதய சூரியனில் உங்களோடு அவர்...
 ஹா உதய சூரியன் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் Fresha Leena எனது சொந்த இடம் மன்னார் . அம்மா கொலஸ்டா, அப்பா நேசன், தம்பி பிரஷ்ஷான், தங்கை  அபிஷா  என மிகவும் கலகலப்பான குடும்பம் என்னுடையது.

சிறுவயது முதலே ஊடகத்துறையில்  பணியாற்ற மிகவும் ஆசைப்பட்டேன். அதுவும் பாடகியாக வருவதற்காக மிகவும் முயற்சி செதேன். அது பலிக்கவில்லை.  நான் ஒரு அறிவிப்பாளராக வர ஆசைப்பட்டேன்.  என் ஆசை நிறைவேறியது.

கொழும்பில் ஓர் நிறுவனத்தில் அறிவிப்பு பயிற்சியை முடித்துக் கொண்டு சூரியனுக்கு விண்ணப்பித்தேன். நான் அதிர்ஷ்டசாலி.  எனக்கு இவ்வளவு  இலகுவாகக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  இப்பொழுது ஓரு அறிவிப்பாளராக உங்கள் முன் நிற்கிறேன்.
நீங்கள் தொகுத்து வழங்கும் அருணோதயம் நிகழ்ச்சி பற்றி?
சூரியன் வானலையில் அதிகாலை நேர நிகழ்ச்சி அருணோதயம், நான் பாடசாலை செல்லும் காலங்களில் இந் நிகழ்ச்சியைக் கேட்டபடி தான் செல்வேன். இந் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குவேன்  என்று அப்போது கனவிலும் நினைக்கவில்லை.   புத்துணர்ச்சியாக அந்த காலை  பொழுதில் இனிமையான பாடல்கள், வாழ்த்துகள் என்று தொகுத்து வழங்கும் போது  கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

இந்தத் துறையில் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என நினைக்கிறீர்கள்?
  புகழ் பணம் வந்து விட்டால் தங்கள் பழைய நிலைமைகளை மறப்பது.
 புகழைச் சேர்ப்பதற்கு நல்லவர்கள் போல் நடிப்பது  (இப்படியானவர்களைப் பார்த்திருக்கிறேன்).
 திறமையை நம்பாமல் மற்றவர்களை நம்புவது (காக்கா பிடிப்பது)
 குரலை மட்டும் வைத்துக் கொண்டு  தேடல் இல்லாமல் இருப்பது
 இதையெல்லாம் இங்கே நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்கள் அடையாளம் என்ன?
இத்துறையில் தேடல் அவசியம். மற்றும் பொறுமை மிகமிக அவசியம். என்னை அடையாளப்படுத்த இன்று நான் கற்றுக் கொள்ள வேண்டியது  நிறைய இருக்கிறது.

இலங்கை இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்  யார்?
 இலங்கையில் லோசன், நவநீதன், சைலி, மேனகா

சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருக்கின்ற அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?
 நான் ரசித்து மகிழ்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் நான் ரசித்த அறிவிப்பாளர்களுடன் பணியாற்றுவது மிகவும் சந்தோசம்.

 உங்களுக்கு ரோல் மொடல் யார்?
 மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சால்வா.  அடுத்து எனது அம்மா.

உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகை யார்?
 நடிகர் ஜெயம் ரவி, கம்பீரமான தோற்றம்
ஜெனிலியா குறும்பு, ஆடையலங்காரம் சிரிப்பு

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது?
 மாற்றான்

வாழ்வில் மறக்க நினைப்பது?
அப்படி எதுவும் இல்லை, எதுவும் நீண்டநாள் நினைவு இருக்காது.

பொழுது போக்கு : வானொலி, தியானம்.

ஏனைய திறமை : பாடுவது

 கடுப்பாகும் விடயம் : அர்த்தமில்லாமல் காத்திருப்பது.

 பிளஸ் : துணிச்சல், யாரையும் நம்பாதது,

மைனஸ்;  எல்லா விடயத்தையும் விளையாட்டுத் தனமா எடுப்பது.

யாருடன் இணைந்து நிகழ்ச்சி செயப் பிடிக்கும்?
 ஆசையை வெளியில்  சொன்னால் நிறைவேறாது. எனது ஆசை சீக்கிரம்

நிறைவேறும். அப்போது உங்களுக்கே தெரியும்.
மறக்க முடியாத சம்பவம்?

 எனக்கு 6 வயது  இருக்கும் போது மாமாவின் மகன்.  என்னிலும் 4 வயது இளையவன். என்னுடன் விளையாடி கொண்டிருந்தான். பின்பு நான் வீடு சென்று விட்டேன். மாலையில் கிணற்றிலிருந்து அவனை பிணமாக எடுத்தார்கள் அதை என் கண்கள் மறக்கவில்லை.

துப்பாக்கி முனையில் நேர்காணல் செய்ததை என்னால் மறக்க முடியாது


வசந்தம் டிவி சிரேஷ்ட தொகுப்பாளரும், அறிவிப்பாளருமான  இர்பானுடைய நேர்காணல்.

நேர்காணல்:
எஸ்.ரோஷன்

வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பாளரும், தொகுப்பாளரும், சிரேஷ்ட அறிவிப்பாளருமான இர்பான் இந்த வார உதயசூரியனில் உங்களுடன் தன்னைப்பற்றிய  விடயங்களை பகிர்ந்து கொள்கின்றார்...
வாசகர் வட்டத்திற்கு வணக்கம். நான் பிறந்தது முல்லைத்தீவு. வளர்ந்தது, படித்தது, வாழ்ந்துகொண்டிருப்பது எல்லமே புத்தளத்தில். புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையில் உயர்தரம் வரை கல்வி கற்று  தொடர்ச்சியாக அங்கேயே ஒரு வருடம் ஆசிரியராகவும் கடமை புரிந்திருக்கிறேன். எனது மாமா லியூசின் மூலமாகவே ஊடகத் துறைக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் கிடைத் தது.  இதேநேரம் எனக்கு தொடர்ச்சியாக வாப்புக்களை வழங்கியதில் கே.டி.பிரசாத் மறக்க முடியாதவர். ஊடகத்துறையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றவர்களில் எம்.என்.ராஜா அவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.

1999 ஆம் ஆண்டு சினிமாஸ் நிறுவனத்தின் வெள்ளித்திரை விருந்து என்ற நிகழ்ச்சியை தயாரித்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது எனது உணர்வலைகளை சொல்லித்தீர்க்க வார்த்தைகள் இல்லை. முதல் படைப்பை தருகின்ற எல்லோரும் இதனை உணர்ந்திருப்பார்கள்.

*வசந்தம் டி.வி.க்கு வருவதற்கு முன்னர் நேத்ரா தொலைக்காட்சியில் பணிபுரிந்துள்ளீர்கள். அங்குள்ள அனுபவங்களை சொல்ல முடியுமா?
மறக்க முடியாத அனுபவங்கள் அங்குதான் கிடைத்தன. 2004 ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட வேளையில் அந்த நெருக்கடியான நேரத்தில் பணிபுரிந்த திகில் அனுபவமே அனைத்தையும் தாண்டி மனதில் இருக்கிறது.

* அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள்  எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? இது உன்னதமான தொழில். யாருக்கும் இலகுவில் கிடைக்காத வாப்பு. நேரத்தை அறிந்து செயற்படுவதோடு பொறுப்புணர்வோடு செயலாற்ற வேண்டும். புதிய விடயங்களை தேடுபவராகவும் மொழி வளமுள்ளவராகவும் இருக்க வேண்டும்.
*வசந்தம் டி.வி.யில் நீங்கள் தயாரித்து, தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் பற்றி? வசந்தம் தொலைக்காட்சி ஆரம்பித்து மூன்று வருடங்களேயான நிலையில் முதல் வருடத்திலேயே இரண்டு தேசிய விருதுகளை பெற்றுக் கொண்டது. இங்கு இருக்கின்ற அனைவருமே ஒரு குடும்பமாக செயற்படுகிறோம். நிகழ்ச்சிகளை வழங்குகின்ற போது சுதந்திரமாக செயற்படும் வாப்பை எமது முகாமையாளர் வழங்குவதால்தான் தரமான நிகழ்ச்சிகள் வெளிவருகின்றன. அந்த வகையில் எனது தயாரிப்புகளாக முகமூடி, தலைவாசல், சுற்றிவரும் பூமி, கண்மணி,    எமது பார்வை, நினைத்தாலே இனிக்கும், நிலாவே வா, வசந்தம் டொப் டென் போன்றவற்றை  குறிப்பிடலாம்.

*முகமூடி நிகழ்ச்சி பற்றி ?
ஆரம்பத்தில் நமது நாட்டில் இவ்வாறான நிகழ்ச்சிகள் சாத்தியமா? என்ற சந்தேகம் இருந்தது. பின்னர் ரசிகர்களின் ஆதரவினால் இன்று நல்ல தரமான நிகழ்ச்சி என்ற பெயரை  குறுகிய காலத்துக்குள்ளே முகமூடி பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதற்கு நாடெங்கிலும் இருந்து நூற்றுக்கணக்கான
தொலைபேசி அழைப்புக்கள் வருகின்றன.
முகமூடி சமூகத்தில் அநீதி இழைக்கப்பட்டவர்களின் குரலாகவும் திறமையுள்ளவர்களுக்கு களமாகவும் அமைகிறது.

*பாடசாலை அனுபவம் எப்படி?  பாடசாலையில் நீங்கள் செத சேட்டை, அதனால் அடிவாங்கிய அனுபவம் உண்டா?
பாடசாலையில் நான் ரொம்ப நல்ல பிள்ளை... இருந்தும் ஒரு முறை வகுப்பறையில் சில மாணவர்கள் விசில் அடித்துக்கொண்டிருந்தார்கள். அந்த நேரம் அவ்வழியே வந்த கந்தசாமி சேர் நான்தான் அந்த தவறை செதேன் என்று என்னை மைதானத்தின் நடுவே வெயிலில் நிற்கவைத்தார். இன்றும் செயாத தவறுக்காக தண்டிக்கப்பட்டதை எண்ணி வருத்தப்படுகிறேன்.

*போட்டிகள் நிறைந்த இந்த துறையில் உங்களின் அடையாளம்?
அனைவரோடும் கலகலப்பாக கடமையாற்றுவதோடு இயல்பாக இருப்பது.

*உங்களுடைய ரோல் மொடல் யார்?
 நீ செல்வதற்கு பாதை இல்லை என்று கவலைப்படாதே. நீ சென்றால் அதுவே பாதை. என்ற கூற்றுக்கிணங்க செயற்பட்டு வருகின்றேன்.

*இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களை கவர்ந்தவர்?
பீ.எச்.அப்துல் ஹமீது, கோபிநாத்

*உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகை யார்?
நடிகர் விஜஉற்சாகமான நடிப்பு, நடனம்.
நடிகை நதியாஎன்றும் இளமையான நடிப்பு.

*வாழ்வில் மறக்க நினைப்பது எது?
கடந்த கால யுத்தம் தந்த நினைவுகள்.

*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ?
யுத்த காலத்தில் மட்டக்களப்பில் துப்பாக்கி முனையில் முன்னாள் முதலமைச்சர்  பிள்ளையானை முதன் முதலாக நேர்காணல் செதது.

*அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
வாயை மூடி சும்மா இருடா...

*பொழுதுபோக்கு?
முகப்புத்தகத்தில் நண்பர்களோடு அரட்டை அடிப்பது.

* அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள்?
தினம் தினம் கவிதைகளை எழுதி கண்காணாது
மறைத்துவைப்பேன்.

*சந்திக்க விரும்பும் நபர் யார்?
 ஆங் சாங் சூகி

*நீங்கள் அடிக்கடி கடுப்பாகும் விடயம் என்ன?
அவசர அழைப்புகளை எடுக்கும் போது Answer  பண்ணாமல் இருப்பது.

* நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
Until the Final Hour  என்ற ஹிட்லரின்  கடைசி நிமிடங்கள்.
உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
நல்ல தரமான நிகழ்ச்சிகளின் உருவாக்கம் உங்கள் கைகளிலே இருக்கிறது. ஆகவே தரமான நிகழ்ச்சிகளுக்கே உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

மனதில் பட்டதை சொல்லுவேன்...


சக்தி’ தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி 
தற்போது வசந்தம் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக 
கடமையாற்றுகிறார் பிரியா.
இந்த வாரம் உதயசூரியனுக்கு 
அளித்த நேர்காணல்.

நேர்காணல்:எஸ்.ரோஷன்

என் சகோதரி, சகோதரியின் கணவர் ஆகியோர் ஊடகத்துறையில் இருந்தாலும் நான் ஊடகத்துறைக்கு வந்தது எதிர்பாராமல் நடந்த சம்பவம். நான் முதன்முதல் பணியாற்றிய ஊடக நிறுவன அதிபரை முதல் முறை சந்தித்தபோது அவர் ‘‘நீங்கள் என்னவாக வர விரும்புகிறீர்கள்சு எனக் கேட்டார். நான் பொதுவாக மனதில் பட்டதைச் சொல்லும் இயல்புடையவள். அவர் கேட்ட கேள்விக்கு நான் சொன்ன பதில் பிரபல்யமாக வேண்டும் என்பது தான், அவர் சிரித்துக் கொண்டே  தந்த வாப்புத்தான் என்னை இந்தத் துறைக்கு அழைத்து வந்தது.
கடுமையான உழைப்பும், ஆர்வமும் என்னை இந்தத் துறையில் நிலைத்திருக்க வைத்திருக்கிறது. ஒவ்வொரு காலத்திலும் ஒரு ட்ரென்ட்  இருக்கும். அதைப் பின்பற்றுபவர்கள்தான் வெற்றி பெற முடியும்.
போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்களின் அடையாளம் என்ன?
அறிவிப்பாளராக இருப்பது ஒரு தனித்திறமை. அதை செபவர்களை பார்க்கும்போது பெரும் ஆச்சரியம் ஏற்படும். நான் அதை என் உயிராக மதித்து செது வருகிறேன். என் தொழிலுக்கு நான் ஒருபோதும் துரோகம் நினைத்ததில்லை. கடுமையாக உழைத்திருக்கிறேன். என்னுடைய அடையாளம் நான் நானாக இருப்பது என்று நினைக்கிறேன்.
 விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி எது?
Travel and Living, Animal Planert ரொம்ப ரொம்பப் பிடித்த தொலைக்காட்சிகள். படிக்க அறிய, ரசிக்க ஏராளம் உண்டு.

ரோல் மொடல் யார்?
பெண்களுக்காக, சமூகத்துக்காக போராடும் பெண்கள் என் ரோல் மாடல்.

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது? பிடித்த நகைச்சுவை நடிகர் யார்? எந்தப் படம்?

திரையரங்குக்குப் போகும் பழக்கமில்லை. சுதந்திரமாக வீட்டில் அமர்ந்து படம் பார்க்கப் பிடிக்கும். தமிழ், ஆங்கிலம், இந்தி படங்கள் பார்ப்பேன். அதிகம் நல்ல படங்களை தவறவிடமாட்டேன். அண்மையில் பார்த்து ரசித்த படம் வித்யாபாலனின் ‘கஹனி’ வித்தியாசமான கதைக்களம் கொண்டது.
எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவர் நடித்த எல்லா படங்களும் பிடிக்கும்.

வாழ்வில் மறக்க முடியாதது ?
இரண்டு நாட்களுக்கு முன் பார்த்த நண்பன் அவர் வீட்டு வாசலில் இறந்து கிடந்தது. தற்கொலை செது கொண்டான் என்று சொல்லப்பட்டது.
* நான் சாதாரண அறிவிப்பாளராக இருந்து முகாமையாளராக பதவி உயர்வு பெற்றது.
* கலைஞர் தொலைக்காட்சியில் என்னுடைய முரளியுடனான நேரடிப் பேட்டி நிகழ்ச்சியை பார்த்து பாராட்டு குவிந்தது.
* தேசிய விருது கிடைத்தது.
 இவை எதையுமே மறக்க முடியாது
.
பொழுது போக்கு?
பாடல் கேட்பது, தனியாக அமர்ந்திருப்பது, உடற்பயிற்சி நிலையம் செல்வது.

 அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் !
விதம்விதமாக வித்தியாசமாக சமைப்பது, மற்றவர்களை நன்றாக பேசி சமாதானம் செவது. Saree டிசைன் செவது, அழகுக் கலை மீது தனிப்பிரியம் உண்டு.
  வசந்தம் டி.வி.யில் நீங்கள் தொகுத்து வழங்கும் முகமூடி நிகழ்ச்சி பற்றி ?

நீண்ட காத்திருப்பு, போராட்டத்தின் பின் ஆரம்பித்த நிகழ்ச்சி எங்கேயோ செயவேண்டியது, இங்கே செயக் கிடைத்தது. அற்புதமான நிகழ்ச்சி. இது கதையல்ல நிஜம் போலவே என்று என்னை கேட்பார்கள். நான் ‘ஆம்’ ஆனால் இது நம் மக்களுடைய தனிப்பட்ட சமூகப் பிரச்சினைகள் என்று விளக்கம் கூறுவேன். கரு ஒன்று ஆனால் களம் வித்தியாசமானது. நம்முடைய பிரச்சினைகள் மிக வித்தியாசமானவை. இன்னும் இன்னும் வித்தியாசமான விடயங்களை உங்கள் முன் கொண்டுவர தயாராகிறோம். பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர நீங்களும் ஒவ்வொரு ரசிகரும் முன்வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். உங்கள் பிரச்சினை வெளிவருமே தவிர நீங்கள் யார் என்பது வெளிவராதது இதன் சிறப்பு. இங்கு வரும் ஒவ்வொருவரின் கதை மூலமும் நம் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணரக் கூடியதாக இருக்கும்.

சந்திக்க விரும்பும் நபர்?
இருந்திருந்தால் (உயிரோடு) கிளியோபாட்ரா...

உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ்  எதை செதாலும் மனதை ஒரு நிலைப்படுத்தி உண்மையாக நேர்மையாக செது முடிப்பது.
மைனஸ்  அதிக முன்கோபம், அதைக் குறைக்க அதிகம் முயற்சிக்கிறேன்.
 நீங்கள் படித்ததில் பிடித்தது?
அநேகமாக வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்கள் அதிகம் பிடிக்கும். சேகுவேராவின் வரலாற்றுப் புத்தகம் மிக மறக்க முடியாத புத்தகம். அவரை இன்னும் பிடிக்கவைத்தது. மற்றும் பெண்கள் சம்பந்தமான புத்தகங்கள் அதிகம் படிப்பேன்.

 நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
எங்கு சென்றாலும் இவர் அவர்தானே என்று குறுகுறு பார்வை பார்ப்பது. சிலர் பேசலாமா, இவர் பேசுவாரா என தயங்குவது இவை எல்லாம் என் கண்களுக்கு புலப்படும். நான்  எல்லோரோடும் சகஜமாக பேசுபவள். யார் என்னை எங்கு கண்டாலும் தாராளமாக பேசுங்கள்.
ஊச்ஞிஞுஞணிணிடு மூலம் அதிகபட்ச நண்பர்கள் இருக்கிறார்கள். என் நிகழ்ச்சிகளின் குறை நிறைகள் உங்களைத் தவிர யாராலும் சிறப்பாக சுட்டிக்காட்ட முடியாது. காத்திருக்கிறேன். அதேபோல் ஊடகங்களின் நல்லபடைப்புகளை மனம் விட்டு பாராட்டுங்கள்.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

சந்திக்க விரும்பிய உங்கள் ஊர் பிரமுகர்...


இசையமைப்பாளராகவும்,  பின்னணிப் பாடகராகவும், சிறந்த நடிகராகவும்
மக்கள் மத்தியில் அறியப்பட்டவர், பல விருதுகளுக்கு சொந்தக்காரர் 
 மாணிக்க விநாயகம் ! 

நேர்காணல்:எஸ்.ரோஷன்

ஒரு பாடகராக இலங்கையின் மூலை முடுக்கெங்கும் இவர் அறிமுகமாகியிருந்தாலும் இவருக்கும் இலங்கைக்கும் கலைக்குமான தொடர்பு மிக நீண்டது, இறுக்கமானது.
இலங்கை ரசிகர்களுக்கு எனது வணக்கம்!  என்னோட சொந்த பெயரே மாணிக்க விநாயகம்தான். எனது தந்தையார் வல்லுவூர் ராமையாப் பிள்ளை, உலகம் போற்றும் நாட்டிய மேதை. தாயார் ஞானசுந்தரம் அம்மாள். எனது தந்தை இந்தியாவிலும் இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் பல நாட்டிய மேதைகளை வளர்த்து விட்டவர். தற்போது அவர்கள் எல்லாம் வெளிநாடுகளில்  நாட்டிய மேதைகளாகவும், நாட்டிய ஆசிரியர்களாகவும் இருக்கின்றார்கள்.
என்னுடைய தகப்பனாரின் நாட்டிய நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணத்துக்கு பல தடவைகள் வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் யாழ்ப்பாணம் மண் செழித்த, தமிழ் செழித்த பூமி. இப்போ யுத்தத்திற்குப்பிறகு யாழ்ப்பாணம் சென்ற போது உருக்குலைந்த யாழ்ப்பாணத்தப் பார்த்து நான் பட்ட வேதனையை வார்த்தையால் சொல்ல முடியாது.
உடைஞ்சு உருக்குலைஞ்சு போயிருந்தாலும்  அந்த மக்களோட பாசமும் பண்பும் இன்றும் மாறல.
* இசைத்துறை அறிமுகம்
எனக்கு ஏழு வயதிருக்கும் போதே எனது மாமாவும், குருவுமான இசை மேதை சிதம்பரப்பிள்ளை யிடம் சங்கீதம் கற்றுக்கொண்டேன். இது தவிர குடும்பக்கலையுமான நாட்டியத்தையும் கற்றுக் கொண்டேன். பின்னர் இசையின் மீது கொண்ட ஈர்ப்பால் 1980களில் ஒரு வானொலியில் இசையமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டு சென்னையிலுள்ள தொலைக்காட்சிகள், வானொலிகளில் பல நூறு பாடல்களுக்கு இசையமைத்து வந்தேன்.
அதன் பின்னர் சில காலங்களில் பல ஒலி நாடாக்களுக்கு பக்திப் பாடல்கள், காதல் பாடல்கள், தேவாரங்கள், திருப்புராணங்கள் போன்றவற்றுக்கு இசையமைத்து உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தேன். அது மட்டுமல்ல, எனது இசையில் பழைய பாடகர்களில் இருந்து தற்போது உள்ள பாடகர்கள்  வரை பல பாடகர்கள் பாடியிருக்காங்க.
இதுவரையில் 15,000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து பாடியிருக்கிறேன். இதற்காக தமிழக அரசு 2003 ஆம் ஆண்டு ‘கலைமாமணி’ விருது கொடுத்தது. 2008 இல் கலைஞர் கருணாநிதி ‘இசைமேதை’ என்ற பட்டம் கொடுத்தார்.
*திரை இசைக்கு அறிமுகம்!
என்னோட பாடல்களை வித்தியாசாகர் கேட்டுவிட்டு ‘தில்’ படத்தில் முதன் முதலாக நடிகர் விக்ரமுக்காக பாடும் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த படத்தில்  “கண்ணுக்குள்ள கெளுத்திசு என்ற பாடல் எனக்கு பெரும் புகழையும் வெற்றியையும் தேடித்தந்தது.
 அதுக்கு அப்புறமாக வித்தியாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், டி.இமான், யுவன் சங்கர் ராஜா இப்படிப்பட்ட எல்லா இசையமைப்பாளர்களிடமும் வெற்றிப் பாடல்களைப் பாட சந்தர்ப்பம் கிடைத்தது. தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் பாடியிருக்கிறேன்.
*திரை உலகில் உங்கள் நண்பர்கள் பற்றி?
சமகாலத்துல வந்த நண்பர்கள்னா கார்த்திக், திப்பு, தேவன் போன்றவங்கதான்.  நாங்க எல்லோரும் பாடகர்கள். எங்களுக்குள் போட்டி உண்டு. பொறாமை இல்லை.
*திரையுலகில் உங்களுக்கு நடந்த கசப்பான சம்பவம் பற்றி?
ஒரு பாட்ட பாடுறதுக்கு இசையமைப்பாளர்கள் கூப்பிடுவாங்க. நாங்களும் போய் ரொம்ப சந்தோஷமா  பாடிட்டு பணத்தையும் வாங்கிட்டு வந்திடுவோம். அப்புறம் படம் வந்த பிறகு போய்ப் பார்த்தா நாங்க பாடின பாட்டு இருக்காது. அந்தப் பாட்டு சிலநேரம் கதாநாயகனுக்குப் பிடிக்காமல் போகும். அல்லது அவரே பாடுவதாக சொல்லியிருக்கலாம். அல்லது இசையமைப்பாளரே பாடுவதாகவும் இருக்கும். இதுபோன்ற சம்பவம் பல தடவை நடந்திருக்கு.
*இன்றைய பாடலாசிரியர்களில் உங்களுக்குப் பிடித்தவர்?
இளைய தலைமுறையில சொல்லப்போனா கவியரசு வைரமுத்துவின் மகன் கார்க்கி. இவர் ஒரு அற்புதமான பாடலாசிரியர்.
*நீங்கள் சந்திக்க விரும்பும் நபர் யார்?
நான் ரொம்ப ஆசையா சந்திக்க விரும்பியவர் உங்களுடைய (இலங்கையில்) ஊர்லதான் இருந்தாரு. அவரை பெயர் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. உங்கள் எல்லோருக்கும்தான் தெரியுமே. அவரை பார்க்க முடியாது ஏங்கும் எத்தனையோ இலட்சம் பேர்ல நானும் ஒருத்தன்.
*பாடுவது மட்டுமல்லாது நடித்தும் இருக்கின்றீர்கள். நடிப்பு அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?
பாடகராகும் வாய்ப்பு ஒரு விபத்து. அது மாதிரித்தான் நடிப்பும் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியாக இருந்தது. முதன் முதலாக திருடா திருடி திரைப்படத்தில் தனுஷýக்கு அப்பாவாக  நடித்தேன். முதல் படத்திலேயே எனக்கு சிறந்த குணச்சித்திர நடிகர் விருது கிடைத்தது.   என்னோடு நடித்த கதாநாயகர்கள் எல்லோருமே ரொம்ப மரியாதையானவங்க. அவங்களோட இருந்ததே ஒரு அனுபவம்தான்.
*நீங்கள் இதுவரை எத்தனை திரைப்படங்களில் நடித்திருக்கிறீர்கள்?
இதுவரைக்கும் கிட்டத்தட்ட ஒரு 500, 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறேன். ஒட்டுமொத்தமாக 25 விருதுகளையும் பெற்றிருக்கிறேன்.
*அடிக்கடி மறக்கும் பொருள்?
நான் எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க மாட்டேன். இருந்தும் ஒரு நாள் ரயில்ல வரும் போது  எனது ஒரு பையை மறந்துவிட்டு இறங்கிட்டேன். ரொம்ப தவிச்சிப் போயிட்டேன். பிறகு என் மகள் போய்த் திரும்ப அதை எனக்குக் கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு என்னுடைய வெற்றிலைப்பை எவ்வளவு முக்கியம்னு என் குடும்பத்திற்குதாங்க தெரியும்.
*ரசிக்கும் பாடல்கள்?
எனக்கு அதிகமாக கிராமிய இசைப் பாடல்களும், பொப்  பாடல்களும் ரொம்பப் பிடிக்கும்.
*இலங்கை ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?
உங்களுடைய அன்பையும், தன்னம்பிக்கையையும் எப்பவும் இழக்காதீங்க. சந்தோஷத்த எப்பவும் மாத்திக்காதீங்க. நாங்கள் இருக்கிறோம் உங்களை சந்தோஷப்படுத்த. உங்களுடைய பொழுது போக்குக்காகத் தான் பாடிக் கொண்டு இருக்கிறோம்.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

அம்மா தான் என்னுடைய ரொல்மோடல்....


சக்தி தொலைக்காட்சியில் அறிமுகமாகி தற்போது  வசந்தம் டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும்  அர்ச்சனாவின் நேர்காணல்

 நேர்காணல்:
 எஸ்.ரோஷன்

பாடசாலை காலங்களில் நான் இலக்கியத்தில் பெரும் நாட்டம் கொண்டவள். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி வந்தேன்.  அப்படியிருந்தும் தற்போது ஒரு எழுத்தாளராக வருவதற்கு ஒரு சந்தர்ப்பம் இல்லாது போவிட்டது. இருந்தும் ஒரு அறிவிப்பாளராக புகழ்பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறார் சக்தி தொலைக்காட்சியில் அறிமுகமாகி தற்போது  வசந்தம் டி.வி.யின் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும்  அர்ச்சனா.
இந்த வார உதயசூரியனில் உங்களுடன்...


ஹா வணக்கம். நான் குடும்பத்தில் ஒரே ஒரு செல்லப்பிள்ளை.  என் சொந்த இடம் யாழ்ப்பாணம். பாடசாலை காலத்தில் பரதநாட்டியம், நாடகம், இலக்கியம், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு பல வெற்றிகளை  பெற்றிருக்கிறேன்.  உயர் கல்வியை கொழும்பில் படித்துக்கொண்டு இருக்கும் போது சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் தேவை என்ற விளம்பரம் பார்த்து விண்ணப்பித்தேன். எனது முதல் நிகழ்ச்சியான ஆனந்த இல்லம் நிகழ்ச்சி  2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த சஞ்சிகை நிகழ்ச்சிக்கான தேசிய விருதைப் பெற்றது.
பின்னர்  சக்தி தொலைக்காட்சியில் பெண்மணிக்காக, சந்திப்போமா, சக்தி சட், குட்மோனிங் சிறிலங்கா, பிரியமான தோழியே ஆகிய நிகழ்ச்சிகளை  ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் தொகுத்து வழங்கினேன்.
தற்போது வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருப்பதுடன் தலைவாசல் என்ற காலை நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றேன்.
* அறிவிப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான்  இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி இருக்கக்கூடாது?
அறிவிப்பாளர் தொலைக்காட்சியில் தன்னை எல்லாம் தெரிந்த விற்பனர்  என நினைத்து தனது கருத்துகளை மக்களுக்கு திணிக்கக் கூடாது. ஏன் என்றால் மக்களுள் ஒருவராக நேயர்களுடன் சினேக பூர்வ கருத்தாடலை மேற்கோள்ள வேண்டும். மற்றவர்களின் மாதிரிகளைப் பின்பற்றாமல் தனித்துவமான பாணியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்கலாம்.
*இலங்கையில்/ இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?
வானொலியிலும் தொலைக்காட்சியிலும் எனக்குப் பிடித்த அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் அவர்கள்தான். இவரின் குரல் வளமும் தமிழ் உச்சரிப்பும் நேர்த்தியான நிகழ்ச்சித் தொகுப்பும் பிரமிக்கத்தக்கது.
*நீங்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி எது?
விஜ டி.வி.தான்  நான் விரும்பிப் பார்ப்பது. காரணம் விஜ டி.வி.யின் நிகழ்ச்சிகள் பிரமாண்டமாகவும் சுவாரஷ்யமாகவும் சமுகத்துக்கு தேவையான நல்ல கருத்துகளை முன்வைக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகின்றார்கள். அதில் நீயா நானா என்ற நிகழ்ச்சி ரொம்பப் பிடிக்கும். அதன் தொகுப்பாளர் கோபிநாத் ஒரு முற்போக்கு சிந்தனையாளர், பத்திரிகையாளர் அதுமட்டுமல்ல நல்ல எழுத்தாளரும் கூட, அதற்குச் சான்றாக ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க, தெருவெல்லாம் தேவதைகள், நேர் நேர் தேமா ஆகிய புத்தகங்களை எழுதி உள்ளார்.
*உங்களுடைய ரோல் மொடல் யார்?
எனது ரோல் மொடல் என் அம்மா தான். அம்மாவைப் போல், தன்னம்பிக்கையை துணையாகக் கொண்டு வாழ்க்கையில் சாதித்தவரை இது வரைக்கும் நேராக நான் கண்டதில்லை.
*உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர்,  நடிகை யார்?
நடிகை ஸ்னேகாவின் அழகும் நடிப்பும் ரொம்பப் பிடிக்கும். அவர் நடித்த பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் போன்ற திரைப்படங்கள் என்றும் ரசிக்கக் கூடியவை. நடிகர்களில் ரஜனிகாந்தின் ஸ்டைல் ரொம்பப் பிடிக்கும். அவரைச் சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய புவனா ஒரு கேள்விக்குறி, முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற பழைய திரைப்படங்களும் பிடிக்கும்.
*சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது?
சமீபத்தில் நான் பார்த்து, ரசித்து, வியந்த படம் நான் ஈ தாங்க... நம் சிந்தனைக்கு அப்பாற்பட்ட கதை அம்சம் கொண்ட படம். நடிகர்களின் நடிப்பு, இசை, பாடல் எல்லாமே சிறப்பு. சாதாரணமாக ஈயை அடித்து கொல்பவர்களும் இந்த படத்தைப் பார்த்து ஒரு ஈக்காக அழுதார்கள்.
*வாழ்வில் மறக்க நினைப்பது எது?
வாழ்வில் மறக்க நினைப்பது போரும், அது தந்த மனக் காயங்களையும் கண்ணீரையும் எனது வாழ்வில் மறக்க நினைக்கின்றேன்...
*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ?
என் தா மண்ணான யாழ்ப்பாணத்தில் இருந்து தொகுத்து வழங்கிய சந்திப்போமா நிகழ்ச்சி. மற்றையது சந்திப்போமா நிகழ்ச்சிக்காக பூண்டுலோயாவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு சென்றிருந்த போது அந்த பாடசாலையின் இடைவேளை நேரத்திற்கான மணி அடித்ததும் மாணவர்கள் அனைவரும் என்னிடம் ஓடி வந்து  சுற்றிவளைத்துக்கொண்டு ஓட்டோகிராப் கேட்டது என்றும் மறக்க முடியாது.
*உங்களுடைய பொழுதுபோக்கு என்ன?
எனது பொழுதுபோக்கு புகைப்படங்கள் எடுப்பது, மற்றும் இணையத்தளத்தில் சமையல் குறிப்புகளை பார்த்து சமைத்து பார்ப்பது.
* திருமணம் எப்போது...?
வீட்டில் பார்த்துக்கொண்டிருக்காங்க... மிக விரைவில் டும் டும் டும் தாங்க...
*உங்களுடைய பிளஸ், மைனஸ் என்ன?
 பிளஸ் முதல் சந்திப்பிலேயே என்னை எல்லோரும் ஸ்னேகிப்பது.
   மைனஸ்  முன் கோபம். அதை விட கொடுமை
    அந்த கோபமும் கொஞ்ச நேரம் தான்.

*உங்களுக்கு பிடித்த சாப்பாடு?
அம்மா சமைக்கிற சாப்பாடு எது என்றாலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
*அடிக்கடி எந்தப் பொருளை மறப்பீர்கள்?
நான் அடிக்கடி மறக்கும் பொருள் என்றால் பேனை தாங்க. அது கிடைக்காட்டி யாரிடமாவது கேட்டுவாங்கி எழுத மாட்டேன். மீண்டும் ஒரு புதிய பேனையை வாங்கிடுவேன்.
*நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்?
 தன்னை முகமூடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிற மனிதர்கள் தங்களையே தொலைத்து விடுவார்கள் என்ற ஒஷோவின் தெளிவான பார்வை எல்லோருக்கும் தெளிவைத் தரும். தத்துவங்கள் என்றாலே, அவை தளர்ந்து போனவர்களுக்குத்தான் என்கிற தவறான கருத்தைத் தகர்த்து, வாழ்வியலின் வலிமையே தத்துவம் என்கிற புதிய பார்வையோடு எதையும் அணுகிய ஒஷோவைப் பிடிக்கும்.
* நேயர்களுக்கு சொல்ல விரும்புவது?
போட்டியும் சவால்களும் நிறைந்ததுதான் ஊடகம்.  பெண்கள் ஊடகத்துறைக்கு வந்து பிரபல்யம் அடைவதை மட்டும் சாதனையாக எண்ணாமல், தனிப்பட்ட வாழ்விலும் சிறந்து நற்பெயருடன்  வாழவேண்டும்.

லிட்டில் சங்ககார சாருஜன்....



லிட்டில் சங்கக்கார சாருஜனின் நேர்காணல்....

நேர்காணல்:
எஸ்.ரோஷன்


வெறும் ஆறே வயது தான்.
 உலக கிரிக்கெட் பிரபலங்கள் பலர்
இவருக்கு அறிமுகம்!
இலங்கை கிரிக்கெட்
அணியினரின் செல்லப்பிள்ளை!
கிரிக்கெட் வீரர்களதும் வர்ணனையாளர்களதும் ஆச்சரியமான பாராட்டைப் பெற்றிருக்கிறார்.
யூ டியூப்பில்
 இவரது  வீடியோ மிகப்  பிரபலமாக பார்க்கப்படுகிறது.
யாராவது உலகப் பிரபலங்களின் மகனாக இருந்தால், அல்லது தலைசிறந்த கிரிக்கெட்
வீரரின் வாரிசாக இருந்தால் சிலவேளை இந்தப் புகழும் பெருமையும் இலகுவாக கிடைத்திருக்கக்  கூடும்.
ஆனால் சாதாரண ஒரு சிறுவனுக்கு அதிலும் இலங்கையில் ஒரு தமிழ்ச் சிறுவனுக்கு கிடைத்திருக்கிறதென்றால் அது பெரும் ஆச்சரியம்தான்.
ஆம் இந்த ஆச்சரியத்திற்குரிய , பாக்கியத்திற்குரிய சிறுவன் சாருஜன். நடுத்தர குடும்பத்தைச்  சேர்ந்தவர், அப்பா கிரிக்கெட் ஆர்வமுள்ளவர். புகைப்படக் கலைஞர். சாருஜன் கொழும்பு15 இல் வசிக்கிறார்.
சாருஜனை அவரது தந்தையின் வர்த்தக நிலையத்தில் சந்தித்தோம். மழலைக்கே உரிய குணத்தோடு    சாருஜன் வெட்கப்பட அவரது தந்தை சண்முகநாதன் சாருஜன் பற்றிச் சொல்கிறார். முகத்தில் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட பெருமிதம்.
சாருஜன் பிறந்து 10 11 மாதத்தில் அவரது கிரிக்கெட் ஆர்வம் வெளிப்பட தொடங்கி விட்டது. அவர் விளையாட கேட்பது எல்லாமே போல் தான்.  மற்ற குழந்தைகளைப் போல் எதண வேணும் விளையாட்டு சாமான் வேணும் என்று கேட்கமாட்டார். . எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்.
 எனக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் அதிகம்.  சாருஜனுக்கு இரண்டு வயது இருக்கும் போது கு.கு.இ மைதானத்தில் இலங்கை, இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பார்க்க கொண்டு போயிருந்தோம். சின்னக் குழந்தையைக் கொண்டு போறோமே அங்கே அழுது அடம்பிடித்தால் என்ன செய்வது. நான்கைந்து மணிநேரம் எப்படி பொறுமையாக இருப்பான் என்றெல்லாம் யோசித்தபடிதான் அவரைக் கொண்டு போனேன். ஆனால் சாருஜன் அமைதியாக ஆர்வமாக கிரிக்கெட் போட்டியை ரசித்ததைப் பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது.  திரும்பி வீட்டுக்கு வருகின்ற போது ““ அப்பா அவங்க காலில போட்டு இருக்கிறது மாதிரி வேணும் என்று கேட்டார்.
 இவருடைய அளவுக்கு பேட் எடுக்கிறது அவ்வளவு சுலபமில்லையே. அதனால வீட்டில இருந்த அங்கர் மட்டையை எடுத்து காலில் கட்டி விட்டேன். அதன் பிறகு எங்கள் வீடே சாருஜனின் சிறு மைதானமாகிப் போனது.
அங்கர் மட்டையைக் கட்டிக் கொண்டு எந்நேரமும் கிரிக்கெட் விளையாடுவார். வளரவளர இவர் ரைட் சைட்டில் பந்து வீசுவதையும், லெப்ட் சைட்டில் பெட்டிங் செய்வதையும் அவதானித்தேன்.
அப்புறமாக நான் விளையாடப் போகும் போது மனைவிக்கு தெரியாமல் இவரையும் அழைத்துப் போய் விடுவேன்.கிரிக்கெட் ஆர்வம் வேணாம். படிப்பு கெட்டுடும்னு மனைவி திட்டுவாங்க.
ஒரு தடவை பாகிஸ்தான்  இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த போது நாங்களும் பார்க்கச் சென்றிருந்தோம்.
அந்த நேரத்தில் இவர் மைதானத்தின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் யாரும் எதிர்பாராத அந்தச் சம்பவம் நடந்தது.  இவர் துடுப்பாடுகின்ற விதம், பந்து வீசுகின்ற விதம் எல்லாவற்றையும் கூஞுணண் குணீணிணூtண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்கி இருந்தார்கள். நாங்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனோம். இதன் பிறகு தான் கிரிக்கெட் உலகின் அறிமுகம் எமக்கு கிடைத்தது.
இப்போது லிட்டில் சங்ககார என்கிற அளவுக்கு இவருக்கு புகழ் கிடைத்திருக்கிறது. எனது மகன் சங்ககார மாதிரி விளையாடுவதாக சொல்கிறார்கள். சங்ககாரவின் அத்தனை ஸ்டைலும் சாருஜனுக்கு தானாகவே வருகிறது.  சங்ககார பாணியில் இவர் விளையாடுவதை கண்ட பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர்  டோனி கிரேக் இவருக்கு “லிட்டில் சங்ககாரசு எனப் பெயர் வைத்தார்.
மகனுக்கும் சங்ககாரவை ரொம்பப் பிடிக்கும். அவருக்கும் இவரை பிடிக்கும். சங்ககார அணித் தலைவர் பதவியிலிருந்து விலகும்போது சாருஜனுக்குத்தான் கடைசி கையொப்பமிட்டுள்ளார்.
சங்ககாரவை உங்களுக்கு ஏன் பிடிக்கும்? என சாருஜனிடம் கேட்டோம்.
அவர் நன்றாக விளையாடுவார். அவர் பெட்டிங் பண்ணுவது, கீப்பிங் பண்ணுவது பிடிக்கும். அதைவிட அம்பயர் அங்கிள் அவுட் காட்டினா ஒன்றும் சொல்லாம போய் விடுவாரு. ரொம்ப நல்ல அங்கிள். அதுமட்டுமில்ல சங்ககார அங்கிள் நல்லா விளையாடனும். நல்லா படிக்கனும்.
நல்ல சாப்பாடு சாப்பிடனும் என்று சொல்லியிருக்கிறார் என்றார் தன் மழழைக் குரலில்.
சாருஜனின் இன்னொரு பேவரிட்  அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேர்ன் வோன். அதுமட்டுமல்ல சாருஜனுக்கு இலங்கை கிரிக்கெட் அணிக்கு அடுத்தபடியாக  அவுஸ்திரேலிய  அணியைத்தான் பிடிக்கும்.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மற்றும் மேற்கிந்திய அணியின் தலைவர் டெரன் செமி, கிறிஸ்கெய்ல், அதிரடி வீரர் கிரான் பொலக், சர்வான், இந்திய அணியின் தலைவர் தோனி, அதிரடி வீரர் விராட்கோலி. "ரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, பாகிஸ்தான் அணியில் சயிட் அப்ரிடி, அஜ்மால் உட்பட  உலக  கிரிக்கெட் பிரபலங்கள் பலருடன் புகைப்படம் எடுத்து வைத்திருக்கிறார் சாருஜன்.
எனினும் இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கரை மட்டும் சாருஜன் இன்னும் நேரடியாக சந்திக்கவில்லை. அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது சாருஜனின் நீண்ட நாள் ஆசை.
அத்தனைப் புகைப்படங்களையும் அழகிய ஆல்பமாக செய்து வைத்திருக்கிறார் சாருஜனின் தந்தை சண்முகநாதன்.
கொட்டாஞ்சேனை சென்.பெனடிக் கல்லூரியில் முதலாம் தரத்தில் படிக்கிறார் சாருஜன். மேலதிகமாக கிரிக்கெட் பயிற்சியும் பெற்று வருகிறார்.
வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் கிரிக்கெட் பயிற்சிக்காக செல்ல வேண்டும். மற்ற நாட்களில் அம்மாதான் கெஞ்சிக் கூத்தாடி அவரை எழுப்ப வேண்டும்.  கிரிக்கெட் பயிற்சி நடைபெறும் தினங்களில் அதிகாலையிலேயே எழும்பி விடுவார். எங்களையும் எழுப்பி விடுவார். அந்த அளவுக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் இருக்கிறது சாருஜனுக்கு.
 இலங்கை கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க வேண்டும். நல்ல பெட்ஸ் மேனாகவும், விக்கெட் கீப்பராகவும் சங்ககார மாதிரி வரவேண்டும். இதுதான் என் இலட்சியம் என்கிறார் சாருஜன்.
சாருஜனின் விருப்பம் எப்படியோ  அதற்கேற்ப அவரை உருவாக்குவோம் என்கிறார் சாருஜனின் தந்தை நம்பிக்கையோடு!
இலங்கை அணிக்கு ஒரு சிறந்த வீரர் உருவாகிறார்.சாருஜனை வாழ்த்தி விடைபெற்றோம்.