Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 15 மார்ச், 2013

சிறந்த அறிவிப்பாளர்கள் என்பதை விட செய்தி வாசிப்பாளராவதே எனது இலட்சியம்

சூரியன் வா னொலி அறி விப்பாளர்களில் ஒருவர் தான் கும்மாளம் வேணிஜா. குறுகிய காலத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருப்பவர். இந்த வாரம் பேஸ்புக் பகுதியினூடாக சுவாரஷ்யமான விடயங்களை உங்களுடன் பகிர் ந்துகொள்கிறார் வேணிஜா நாராயணசாமி.
நேர்காணல்:எஸ்.ரோஷன்
 ஹாய்... எல்லோருக்கும் வணக்கம்! என்னுடைய சொந்த இடம் இயற்கை அழகின் இருப்பிடமான கண்டி.  அப்பா நாராயணசாமி, அம்மா புஷ்பம், செல்லமா ஒரு குட்டித் தங்கை ஜெயமலர் இதுதான் என்னோட உலகம். என் உணர்வுகளுக்கும் சந்தோசத்திற்கும் உயிர் கொடுக்கும் அழகிய கோவில்.
என் வளர்ச்சிக்கு எப்போதும் பக்க பலமா இருந்தது எனது பாடசாலைதான். (கலஹா ஸ்ரீ ராமகிருஷ்ணா மத்திய கல்லூரி) அத்தோடு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளங் கலைமாணி பட்டப் படிப்பினை நிறைவு செய்து இன்று உங்கள் முன் ஒரு அறிவிப்பாளராக இருக்கின்றேன்.

*அறிவிப்புத் துறை பிரவேசம்,  முதல் நாள் அனுபவம்:
வானொலி அறிவிப்பாளராக வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு. அதற்காக பல முயற்சிகளை செய்தேன். அதற்கான பலன் சில மாதங்கள் கழித்து எனக்கு கிடைத்தது. நேர்முகத் தேர்வுகளின் பின் இறைவனின் கருணையால் தெரிவு செயப்பட்டேன்.
முதல் நாள் அனுபவம் மறக்க முடியாத ஒன்று. தூரத்தே இருந்து காற்றலை வழியே இரசித்த குரல்களுக்கு உரியவர்களோடு அருகே இருந்து வேலை செய்ய சந்தர்ப்பம் கிடைத்தது. சூரிய குடும்பத்தில் நானும் ஒரு அங்கமா இணைந்து கொண்டதும் என் சந்தோசங்களை இரட்டிப்பாக்கின. மேலும் இந்தத் துறையில் என்னை பட்டை தீட்டிய பெருமை நடராஜசிவம் அவர்களையே சாரும்.

*நீங்கள் தொகுத்து வழங்கும் சூரியன் வானொலியின் (கும்மாளம்) நிகழ்ச்சி பற்றி சொல்ல முடியுமா?
தேடல் சார்ந்த தரமானதொரு நிகழ்ச்சிதான் கும்மாளம். ஒவ்வொரு நாளும் புதிய புதிய விடயங்களோடு மணம் வீசும் புதுமையான களம். நேயர்களுக்கு மட்டும் அல்லாமல் நிகழ்ச்சியை தொகுத்து அளிக்கும் எம் அறிவுக்கும் சரியானதோர் விருந்தாகத்தான் இந்நிகழ்ச்சி அமைகின்றது.

*அறிவிப்புத்துறையைச் சார்ந்தவர்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று எல்லோரும் சொல்வார்கள் ஆனால் நீங்கள் சொல்லுங்கள் ஒரு அறிவிப்பாளர் எப்படி இருக்கக்கூடாது?
மெ வருத்தம் பாரார் பசி நோக்கார் கண் துஞ்சார் கடமையே கண்ணாயினர். அதுபோல் கடமையில் எப்போதுமே கண்ணும் கருத்துமா இருக்க வேண்டும். எந்த விடயத்திலும் அலட்சியமா இருந்துவிடக் கூடாது. அலட்சியத்தால் பாரிய ஆபத்துகளை சந்திக்க நேர்ந்திடும். அத்தோடு திறமையை நம்பாமல் மற்றவர்களை காக்கா பிடித்து முன்னால் வர நினைப்பது, குரலை மட்டும் வைத்துக்கொண்டு திறன்களை வளர்க்காதவர்கள் ஓர் சிறந்த அறிவிப்பாளராகிவிட முடியாது.

*நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது நடந்த சுவாரஷ்யமான அனுபவம் பற்றி சொல்லுங்களேன்:
ஒரு தடவை எம் கலையக தொலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. நான் பேச ஆரம்பித்ததும் மறுமுனையில் ஒருவர் மிரட்டும் தொனியில் ஆங்கிலத்தில் உரையாட, எம் மேலதிகாரிகளில் யாரோதான் அழைப்பில் இருக்கின்றார் என பயந்து நடுங்க ஆரம்பித்துவிட்டேன். சற்று நேரத்தின் பின்னர் மறு முனையில் சிரிப்பு சத்தம் கேட்கவும் தான் புரிந்தது, அது எம் சக அறிவிப்பாளர் என...

*பாடசாலை அனுபவம்?  பாடசாலையில் நீங்கள் செத குறும்புகள்:
“அது ஒரு காலம்... அழகிய காலம்...சு வாழ்வில் எப்போதுமே மறக்க முடியாத தருணங்கள் அவை. பாடசாலை காலத்தில் நண்பர்களோடு சேர்ந்து செத குறும்புகள் ஏராளம். அதில் குறிப்பிட்டுச் சொல்வதானால் ஒரு நாள் ண்tச்ஞூஞூ ட்ஞுஞுtடிணஞ் நடக்கும்போது நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து வகுப்பில் துப்பட்டாவை பந்து போல சுற்றி எறிந்து  விளையாடினோம். அதை பார்த்த அதிபர் ஒரு சில நாட்கள் எம்மை வகுப்பிற்குள் வர அனுமதிக்கவில்லை.

*இலங்கையில், இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர் யார்?
இலங்கையைப் பொறுத்தவரைக்கும் லோஷன் அண்ணா, நவநீதன் அண்ணா  மற்றும் சந்துரு அண்ணா ஆகியோர். இந்தியாவில் ஆஐஎ ஊM பாலாஜி.

*நீங்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சி எது?
இளைஞர்களின் துடிப்பை அறிந்து எப்போதுமே தரமான புதிய நிகழ்சிகளை படைக்கும் விஜய் டி.வி. தான் எனக்கு எபோதுமே பிடிக்கும்.

*உங்களுடைய ரோல் மொடல் யார்?
மேனகா மற்றும் ஷைலி 

*சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருக்கின்ற அனுபவம் பற்றி சொல்ல முடிமா?
இங்கு வேலை செகின்றோம் எனும் உணர்வே எமக்கு வருவதில்லை. இது எங்கள் இல்லம், இங்கு இருக்கும் ஒவொருவரும் உணர்வுகளை மதித்து செயற்படும் நல்ல உறவுகள், அத்தோடு எம் நேயர்கள் எம் மீது காட்டும் அன்பும் அளப்பரியது... மொத்தத்தில் இங்கு கிடைக்கும் ஒவ்வொரு அனுபவங்களும் இனிமையானவை.  

*சமீபத்தில் நீங்கள் பார்த்த படம்? பிடித்த நகைச்சுவை நடிகர்?
 பிடித்த படம் துப்பாக்கி. பிடித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு.

*உங்களுடைய வாழ்க்கையில் மறக்க முடியாதா சம்பவம் பற்றி சொல்ல முடியுமா?
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அந்த நாளை என் வாழ்வில் மறக்க முடியாதது.

*அடிக்கடி நீங்கள் முணுமுணுக்கும் பாடல் எது?
 மெல்லினமே... மெல்லினமே...

*உங்களிடம் உள்ள அறிவிப்புத் தவிர்ந்த ஏனைய திறமைகள் என்ன?
சிறுகதை, கவிதை எழுதுவது, நடனத்திலும் சற்று ஆர்வம் உள்ளது.

*சந்திக்க விரும்பும் நபர்?
அப்துல் கலாம்

*உங்களுடைய (பிளஸ், மைனஸ்) என்ன?
பிளஸ் எல்லோரிடமும் நட்போடு பழகுவது, மைனஸ்னா கோபமும் கண்ணீரும் தான்.

*நீங்கள் அடிக்கடி கடுப்பாகும் விடயம்?
மும்முரமாக ஏதாவது வேலையில் ஈடுபடும் போது யாரவது அரட்டை அடித்தால் பிடிக்காது...

*நீங்கள் படித்ததில் உங்களுக்கு பிடித்த விடயம்? உள்ளத்தில் அன்போடு  உறவாடும் வீணை
உதடுகள் இரண்டுமோ அமுதத்தின் பானை
பதியாத மட மாது பார்வைக்கு பதிலேது
நடை போடும் அநு ராகம் நடமாடும் இளமேகம்
அவள் உள்ளம் பெருங் கோயில் ஊண்  உடம்பு ஆலயம்
தெருவிலே அந்த தேவதை நடந்து வந்தால் இலட்சம் விழிகளால்
அவளுக்கு லட்சார்ச்சனை ஆனால்
அவள் வாழ வேண்டும் என்றால் தர வேண்டுமாம் வரதட்சணை
(மேத்தாவின் கவிதை)

*யாருடன் இணைந்து நிகழ்ச்சி செயப் பிடிக்கும்?  தரணிதரனோடு இணைந்து நிகழ்ச்சி செய பிடிக்கும்.

*இலட்சியம்: எதிர்காலத்தில் நேயர்கள் மத்தியில் வேணிஜா நாராயணசாமி என்பவள் நல்ல அறிவிப்பாளர் என்பதை விட ஒரு சிறந்த செதி வாசிப்பாளர் என அடையாளப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது கனவு.

*உங்களுடைய நேயர்களுக்கு சொல்ல விரும்புவது? சூரியனை எப்போதும் தமது உயிராக நேசிக்கும் நேயர்கள் மீதான எனது அன்பு மாற்றமில்லாமல் எபோதும் தொடரும்...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக