Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 16 மார்ச், 2012

முதன் முதலாக இலங்கை பைலாப்பாட்டு பாடினேன்!

தினக்குரலின் சகோதர வெளியீடான வியாழன் தோறும் வெளிவரும் உதயசூரியனின் பகுதியில் இந்தவாரம் இந்திய பின்னணிப்பாடகர் எம்.கே.பாலாஜியுடன் நேர்காணல்......

நேர்காணல்: ரோஷன்

அங்காடித் தெரு படத்தில் எங்கே செல்வேனா நீ என்னை நீங்கினால்... என்ற மனதை உருக்கும் பாடலின் குரலுக்குச் சொந்ததக்காரர் எம்.கே.பாலாஜி. யார் இந்த புதிய குரல் என்று தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப்பார்க்க வைத்த இளைஞன். வசீகரமான குரலுக்குச் சொந்தக்காரர், குத்து, பைலா, மெலடி என எல்லாப் பாடல்களுக்கும் அச்சொட்டாக பொறுந்திப் போகிற மாயம் அந்தக் குரலுக்கு இருக்கிறது. இந்திய ரசிகர்களைப் பொருத்தவரை திரையுலக பிரவேசத்திற்கு முன்னரே சன் தொலைக்காட்சி யின் ஊ லலல்லா நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் பாலாஜி. இந்த வார பேஸ்புக்கில் உங்களோடு உறவாடுகிறார் பாலாஜி.வணக்கங்க, எனது சொந்த ஊர் சென்னை. குடும்பத்துல ஒரே ஒரு செல்லப்பையன். எம்.பி.ஏ படிப்பை முடிச்சிட்டு இப்ப பாடகரா கலக்கிட்டிருக்கேன். சின்ன வயசிலே நான் பாடகரா உருவாகனும்னு கனவு கூட கண்டதில்ல. ஏன்னா எங்க வீட்ல யாருமே பாடமாட்டாங்க. நான் பாடசாலையில் கூட பாடமாட்டேன். எல்லாரும் எதிர்காலத்தில என்னவா வருவாங்கன்னு பாடசாலைகள் தான் தீர்மானிக்குதுன்னு சொல்வாங்க. ஆனா என்னோட எதிர்காலம் அமைஞ்சது ஸ்கூல் பஸ்லதான். எங்க வீட்லயிருந்து ஸ்கூலுக்கு 40 கிலோ மீற்றர் தூரம் இருக்கும். பஸ்ஸில போகும்போது நண்பர்கள் பாடுவாங்க, அவங்களோட சேர்ந்து நானும் கோரஸ் பாடுவேன். எல்லா வகையான பாடல்களையும் கலந்து பாடுவோம். ஸ்கூல் போகும் வரை எங்க கச்சேரி தொடரும். நண்பர்களோ கோரஸ் பாடிக்கொண்டிருந்த என்னை தனித்துவப் பாடகனாக்கியது அருணா டீச்சர். எங்க பஸ்ல அவங்க வந்து போவாங்க. ஒரு சமயம் அவங்க உன் குரல் நல்லாயிருக்கு, நீ ஏன் மியூசிக் கத்துக்கக் கூடாது? என்று கேட்டாங்க. நானும் சம்மதித்து அவங்களுடன் சேர்ந்து மியூசிக் கத்துக்கிட்டு பல மேடை நிகழ்ச்சி ,கொலேஜ் பங்சன் என எல்லா நிகழ்ச்சிகளில் பாடிக் கொண்டிருந்தேன். அப்போது தான் சன் டீவி. ஊ லலல்லா என்ற நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது அந்த நிகழ்ச்சியில் தமிழ் நாட்டிலிருந்து ஒரு 150160 குழுக்கள் வந்து பங்கு பற்றினாங்க, நாங்களும் இணைந்து கொண்டோம். 160 போட்டியாளர்களிலிருந்து 3பேர் தெரிவு செய்யப்பட்டோம் .அதில் நானும் ஒருவன். இந்த நிகழ்ச்சிதான் எனக்கு எல்லா வாய்ப்புகளும் வரக் காரணமாயிருந்திச்சி, இந்த நிகழ்ச்சியைப் பார்த்திட்டு இசையமைப்பாளர் விஜய் அன்டனி எனக்கு வாய்ப்புத் தந்தார். நான் முதன் முதலா இலங்கை பைலாப் பாட்டுத்தான் பாடினேன். பந்தயம் படத்திற்காக சுராங்கனி .... என்ற பாடலையும் அதே படத்திலேயே சின்ன மாமியே என்ற பாடலையும் பாடினேன். தற்போது நான் 35 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறேன் இப்போது 15 பாடல்கள் பாடிக்கொண்டிருக்கிறேன் இந்த உயர்வுக்கு உண்மையான காரணம் என் அப்பா,அம்மா தான். இஞ்சினியரிங் எம்.பி.ஏ படிச்சுட்டு நம்ம வந்து பாடகராகப் போறேன்னா நிறைய வீட்டில சப்போர்ட் பண்ண மாட்டாங்க. பாட்டாவது ஒன்னாவது எல்லாத்தையும் மூட்டைகட்டி வச்சிட்டு இஞ்சினியராகு என்று சொல்லுவாங்க. ஆனால் என் அம்மா ,அப்பா இதுவரை சொன்னதே கிடையாது . இசைத்துறையில் பெரிய நாட்டம் வந்ததுக்கான காரணம் ரஹ்மான் சேர்தான்! அவருடைய மியூசிக் ரொம்ப விரும்பிக்கேட்பேன். எல்லாரையும் விட எனக்கு முதல்பாடல் வாய்ப்புக்கொடுத்து ரொம்பவும் ஊக்கம் கொடுத்த விஜய் அன்டனி சேரும் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்தான்.

(தொடரும்.......)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக