Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 9 நவம்பர், 2012

பாடகியாக ஆசைப்பட்டேன்....


சூரியன் FM அறிவிப்பாளர்
 Fresha.IN 
நேர்காணல்
நேர்காணல்:
எஸ்.ரோஷன்


புத்துணர்ச் சியான காலைப் பொழுதில் இனிமையான பாடல்கள், வாழ்த்துக்களோடு சூரியன் வானொலியில் அருணோதயம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் தொகுப்பாளினி Fresha.
 இந்த வார உதய சூரியனில் உங்களோடு அவர்...
 ஹா உதய சூரியன் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். எனது பெயர் Fresha Leena எனது சொந்த இடம் மன்னார் . அம்மா கொலஸ்டா, அப்பா நேசன், தம்பி பிரஷ்ஷான், தங்கை  அபிஷா  என மிகவும் கலகலப்பான குடும்பம் என்னுடையது.

சிறுவயது முதலே ஊடகத்துறையில்  பணியாற்ற மிகவும் ஆசைப்பட்டேன். அதுவும் பாடகியாக வருவதற்காக மிகவும் முயற்சி செதேன். அது பலிக்கவில்லை.  நான் ஒரு அறிவிப்பாளராக வர ஆசைப்பட்டேன்.  என் ஆசை நிறைவேறியது.

கொழும்பில் ஓர் நிறுவனத்தில் அறிவிப்பு பயிற்சியை முடித்துக் கொண்டு சூரியனுக்கு விண்ணப்பித்தேன். நான் அதிர்ஷ்டசாலி.  எனக்கு இவ்வளவு  இலகுவாகக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.  இப்பொழுது ஓரு அறிவிப்பாளராக உங்கள் முன் நிற்கிறேன்.
நீங்கள் தொகுத்து வழங்கும் அருணோதயம் நிகழ்ச்சி பற்றி?
சூரியன் வானலையில் அதிகாலை நேர நிகழ்ச்சி அருணோதயம், நான் பாடசாலை செல்லும் காலங்களில் இந் நிகழ்ச்சியைக் கேட்டபடி தான் செல்வேன். இந் நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்குவேன்  என்று அப்போது கனவிலும் நினைக்கவில்லை.   புத்துணர்ச்சியாக அந்த காலை  பொழுதில் இனிமையான பாடல்கள், வாழ்த்துகள் என்று தொகுத்து வழங்கும் போது  கிடைக்கும் சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

இந்தத் துறையில் நிலைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என நினைக்கிறீர்கள்?
  புகழ் பணம் வந்து விட்டால் தங்கள் பழைய நிலைமைகளை மறப்பது.
 புகழைச் சேர்ப்பதற்கு நல்லவர்கள் போல் நடிப்பது  (இப்படியானவர்களைப் பார்த்திருக்கிறேன்).
 திறமையை நம்பாமல் மற்றவர்களை நம்புவது (காக்கா பிடிப்பது)
 குரலை மட்டும் வைத்துக் கொண்டு  தேடல் இல்லாமல் இருப்பது
 இதையெல்லாம் இங்கே நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில் உங்கள் அடையாளம் என்ன?
இத்துறையில் தேடல் அவசியம். மற்றும் பொறுமை மிகமிக அவசியம். என்னை அடையாளப்படுத்த இன்று நான் கற்றுக் கொள்ள வேண்டியது  நிறைய இருக்கிறது.

இலங்கை இந்தியாவில் உள்ள அறிவிப்பாளர்களில் உங்களைக் கவர்ந்தவர்  யார்?
 இலங்கையில் லோசன், நவநீதன், சைலி, மேனகா

சூரியன் வானொலியில் அறிவிப்பாளராக இருக்கின்ற அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?
 நான் ரசித்து மகிழ்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் நான் ரசித்த அறிவிப்பாளர்களுடன் பணியாற்றுவது மிகவும் சந்தோசம்.

 உங்களுக்கு ரோல் மொடல் யார்?
 மறைந்த விண்வெளி வீராங்கனை கல்பனா சால்வா.  அடுத்து எனது அம்மா.

உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகர், நடிகை யார்?
 நடிகர் ஜெயம் ரவி, கம்பீரமான தோற்றம்
ஜெனிலியா குறும்பு, ஆடையலங்காரம் சிரிப்பு

சமீபத்தில் நீங்கள் பார்த்த படம் எது?
 மாற்றான்

வாழ்வில் மறக்க நினைப்பது?
அப்படி எதுவும் இல்லை, எதுவும் நீண்டநாள் நினைவு இருக்காது.

பொழுது போக்கு : வானொலி, தியானம்.

ஏனைய திறமை : பாடுவது

 கடுப்பாகும் விடயம் : அர்த்தமில்லாமல் காத்திருப்பது.

 பிளஸ் : துணிச்சல், யாரையும் நம்பாதது,

மைனஸ்;  எல்லா விடயத்தையும் விளையாட்டுத் தனமா எடுப்பது.

யாருடன் இணைந்து நிகழ்ச்சி செயப் பிடிக்கும்?
 ஆசையை வெளியில்  சொன்னால் நிறைவேறாது. எனது ஆசை சீக்கிரம்

நிறைவேறும். அப்போது உங்களுக்கே தெரியும்.
மறக்க முடியாத சம்பவம்?

 எனக்கு 6 வயது  இருக்கும் போது மாமாவின் மகன்.  என்னிலும் 4 வயது இளையவன். என்னுடன் விளையாடி கொண்டிருந்தான். பின்பு நான் வீடு சென்று விட்டேன். மாலையில் கிணற்றிலிருந்து அவனை பிணமாக எடுத்தார்கள் அதை என் கண்கள் மறக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக