Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

திங்கள், 7 மே, 2012

சிறுவயதுக் கனவு நனவானது!

சூரியன் அறிவிப்பாளர் கணேசராசா மயூரன் தினக்குரலின் சகோதர வெளியீடான
உதய சூரியனுக்கு
அளித்த பெட்டி.

நேர்காணல்:எஸ்.ரோஷன்

நான் பிறந்தது மட்டக்களப்பின் கொக்கட்டிச்சோலை கிராமத்தில். குடும்பத்தின் முதல் வாரிசு. தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள் என அழகான அன்பான குடும்பம்.சிறுவயது முதலே வானொலி மீது தீராத காதல் என்று தான் சொல்ல வேண்டும். வானொலி நிகழ்ச்சிகளை விரும்பிக் கேட்கும் எனக்கு நானும் ஒரு அறிவிப்பாளனாக வரவேண்டும் என உந்துதல் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. என் ஆர்வத்திற்கு தாய், தந்தையர் இருவரும் கைகொடுத்தனர். சிறந்த குரல்வளம் இருக்கிறது, சிறந்த அறிவிப்பாளராக வருவாய் என்று நம்பிக்கையூட்டினார்கள். அந்தக் கனவு இப்போது நனவாகிவிட்டது.
ஆரம்பத்தில் தலைநகரில் இணையத்தள வானொலி ஒன்றில் அறிவிப்பாளராக கடமையாற்றினேன். அதன் பின்னர் சூரியன் குடும்பத்திற்குள் நுழைந்தேன். ஆரம்பத்தில் எனக்கு பயிற்சியளித்து ஆலோசனைகளை வழங்கியவர் சூரியன் எப்.எம்.இன் சிரேஷ்ட ஆலோசகர் நடா அண்ணா. அதே போன்று சூரியனின் தலைமை நிறைவேற்று பொறுப்பதிகாரி நவா அண்ணா ஊடகத்துறையில் உள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்றும் எவ்வாறு தனித்திறமையை வளர்த்து அறிவிப்பாளராக வரவேண்டும் என்பதை உணர்த்தி என்னை உற்சாகமூட்டியவர். அத்தோடு சூரியன் எப்.எம்.இன் நிகழ்ச்சி முகாமையாளர்களான சந்துரு அண்ணா மற்றும் பரணி அண்ணா ஆகியோர் என்னை தட்டிக் கொடுத்து வளர்ப்பவர்கள். இத்துறை என்னை இன்னும் மகிழ்விப்பதற்கு காரணம் நேயர்கள். அவர்கள் தரும் அன்பும் ஆதரவும்தான் எம்மை உற்சாகமாகப் பணியில் ஈடுபட வைக்கிறது.
மறக்க முடியாத சம்பவம்!
உயர்தரப் பரீட்சை வாழ்வில் முக்கியமான கட்டம். பரீட்சைக்கு முதல் நாள் மயங்கி விழுந்து தலையில் அடிபட்டு விட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மறுநாள் பரீட்சை மண்டபத்தில் அந்த வலியோடு பரீட்சை எழுதியது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்.நண்பர்கள் பற்றி...?
நண்பர்கள் என் வாழ்கையில் முக்கியமான அத்தியாயம். நான் தரம் 09 இல் பாடசாலையில் படிக் கும் போது பாடசாலை திறப்புவிழாவுக்கு என்னை மேடையில் அறிவிப்பு செய்ய திடீரென அழைத்து விட்டார்கள். முன் ஆயத்தம் எதுவுமின்றி அறிவிப்புச் செய்தேன். அன்று நண்பர்கள் தந்த பாராட்டையும் உற்சாகத்தையும் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.அறிவிப்புத் துறையில் செய்ய நினைப்பது...? நிறைய விடயங்களை தேடி நேயர்களுக்கு புதிய விடயங்களை சொல்லவேண்டும். ஊடகத்துறையில் நிறைய சாதிக்க வேண்டும். ஊடகத்துறையில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் செயற்பட வேண்டும்.நேயர்களுக்குச் சொல்வது...?
நல்ல நிகழ்ச்சிகளைக் கேளுங்கள். நல்ல நிகழ்ச்சிகளுக்கு நிறைய வரவேற்பு கொடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக