Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வெள்ளி, 6 ஜூலை, 2012

பலர் பாராட்டினார்கள் சிலர் தூற்றினார்கள்

பாடலோடு உற்சாக துள்ளல் நடனமென தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி ரசிகர்களை மகிழ்விப்பவர் மொகமட் வஃபா தினக்குரலின் சகோரவெளியிடான உதயசூரியனுக்கு அளித்த போட்டியின் கடந்த வாரத் தொடர்ச்சி....

நேர்காணல்:
எஸ்.ரோஷன்

(கடந்த வாரத் தொடர்ச்சி)
தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் கொடுக்கப்படும் என்பார்கள். ஆனால் எந்தத் திறமைசாலிக்கும் தட்டியவுனே வாய்ப்புக் கதவுகள் திறந்து விடுவதில்லை. முட்டி மோதிப் போராடி திறக்க வேண்டும். அப்படி போராடியவர்கள்தான் ஜெயித்திருக்கிறார்கள்.
நான் சாதாரணமானவன். திறமைகளை வளர்த்துக் கொள்ளத் துடிப்பவன் எனக்கு மட்டும் வாய்ப்புகள் இலகுவாகக் கிடைத்துவிடுமா என்ன?
புகழைப் போன்ற போதையை வேறு எதுவும் தந்துவிட முடியாது. முதல் மேடையில் கிடைத்த கைத்தட்டல் எனக்கும் பாடும் ஆர்வத்தை தூண்டியது. விளைவு பாடசாலை கல்வியை முடித்து விட்டு புசல்லாவைக்கு வந்து சிறு இசைக் குழுக்களில் பாட வாய்ப்பு தேடினேன்.
பிறகுதான் தெரிந்தது ஒருவன் தன்னை நிரூபிப்பது அத்தனை சுலபமானதல்ல!
என்னுடைய தந்தை ரூபவாஹினியில் இஸ்லாமிய கீதங்கள் பாடுவார். அவரோடு இணைந்து நானும் பாடுவேன். மூன்று நான்கு இஸ்லாமிய கீதங்கள் பாடினேன். பல இடங்களில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. எங்கு சென்றாலும் எனது திறமைக்கு ஏதாவது தடைகள் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தது.
சில நாட்களுக்கு பின்னர் சூரியன் எப்.எம் இன் நகருக்குள் நகரும் இசை வாகன நிகழ்ச்சியில் ((Gibbons) இசைக் குழுவில் பாடகனாக பாட வாய்ப்புக் கிடைத்தது. அத்தருணத்தில்தான் தனியார் தொலைக் காட்சியில் Super star நிகழ்ச்சி பற்றி அறிந்து அங்கு சென்றேன். அதன் மூலமாக வஃபா இலங்கை முழுவதும் அறிந்த பாடகனாக அறிமுகப்படுத்தப்பட்டான்.
அந்த நிகழ்ச்சி எனக்கு ஒரு திருப்பு முனை என்றும் கூறலாம். ஆடலுடன் பாடி அசத்தினேன். பலர் பாராட்டினார்கள். ஆனால் சிலர் பல தப்பான விமர்சனங்களை சொன்னார்கள். நான் பாடுவதில்லை. ஆடுகிறேன் என்றார்கள். அந்த நிகழ்ச்சியில் தெரிவு செய்யப்பட்ட 12 பேரில் முதலாவதாக வெளியேறியது நான் தான். மிகவும் மனம் நொந்தேன்.
ஆனாலும் இறுதி நிகழ்ச்சியில் பங்குகொள்ள அழைப்புக் கிடைத்தது. அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு என்னை நிரூபிக்க வேண்டும் என நினைத்தேன். எனது முயற்சி பலன் தந்தது. அதில் நாள் ஒரு star ஆக தெரிவு செய்யப்பட்டேன்.
இறுதிப் போட்டியின் பின்னர் என்னை புகழாத யாரும் இல்லை. தொடர்ந்தும் இசைத்துறையை கைவிடாது கற்றுக்கொண்டும் பாடிக்கொண்டும் இருக்கிறேன்.
முகவரி இசைக் கோவை, சக்தி சுப்பர் ஸ்டார் அல்பம் என தொடர்ந்தும் பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் என்று பாடிக் கொண்டிருக்கிறதுங்க.
நான் அதில் கற்றது கொஞ்சம் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. எனது அடுத்தக்கட்ட முயற்சியாக லெஜன்ஸ் என்ற பெயரில் இசைக் குழுவை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறேன். ஆர்வமுள்ள திறமையான இளைஞர்களுக்கு இதில் வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளேன்.
கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த இசைத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்கள் எனது தொலைபேசி இலக்கத்துடன் (0775442451) தொடர்பு கொள்ள முடியும்.
என்னைப் போன்ற இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்பதுதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக