Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

வியாழன், 19 ஜூலை, 2012

என்னை வளர்த்து விட்ட ஊடகங்கள்...

பாடகியாக அறிமுகமாகி அறிவிப்பாளராக பின்னணி குரல் கொடுப்பவராக இலங்கையின் ஒரு நட்சத்திரமாக பிரகாசித்துக் கொண்டிருப்பவர் பிரஷாந்தினி மயில்வாகனம்.

அண்மையில் மலேசியத்திரைப்படம் ஒன்றிற்காகவும் பாடல் பாடியிருக்கும் பிரசாந்தினி இந்தவாரம் பேஸ்புக் பகுதியில்....

நேர்காணல்: எஸ்.ரோஷன்

பிறந்தது வளர்ந்தது எல்லாம் கொழும்பில்தான். அப்பா, அம்மா, அண்ணா, நான் மற்றும் இரண்டு சகோதரிகள் என அன்பான குடும்பம். அம்மா நீங்கள் யாவரும் அறிந்த பாடகி லில்லி மயில்வாகனம். என் தாயார் இசைத்துறையில் ஈடுபட்டிருந்ததன் காரணமாக எனக்கும் சிறுவயது முதல் அம்மா போல ஒரு பாடகியாக வரவேண்டும் என ஆசை. கூடவே ஆசிரியராக வரவேண்டும் என்று ஒரு எண்ணமும் இருந்தது.
பாடசாலை காலத்தில் சகல இசை நிகழ்ச்சிகள், போட்டிகளையும் விட்டு வைக்காமல் பங்கு பற்றினேன். கூடவே விளையாட்டுத் துறையிலும் எனக்கு ஈடுபாடு அதிகம்.
எனது இசைப் பயணத்தின் ஆரம்பமாக நான் தரம் 11 படிக்கும் போது சக்தியின் இளையகானம் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றும் வாப்பு கிடைத்தது. அதில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டேன்.
சிறு வயதிலிருந்து கர்நாடக இசையை முறைப்படி பயின்று வந்ததால் என் இசைப்பயணத்திற்கு அது சிறந்த சக்தியை வழங்கியது.
அடுத்த கட்டமாக சக்தி சுப்பர்ஸ்டார் சீசன்02 இல் பங்கேற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதிலும், இறுதிச் சுற்றில் 3 ஆம் இடத்தை பெற்றேன். அன்று முதல் இலங்கை மக்களுக்கு அறிமுகமான பாடகி என்ற அந்தஸ்தை பெற்றுக்கொண்டேன்.
இப்போட்டி நிகழ்ச்சிக்கு பின்னர் என் இசைப் பயணம் சிறப்பாக அமைய பலர் எனக்கு வாப்புகள் வழங்கினார்கள். குறிப்பாக கொழும்பின் பல முன்னணி இசைக் குழுக்களில் பாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத்தோடு, குடச்டுtடடி கூங யில் Shakthi TV °À SMS Galata எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாப்பும் கிடைத்தது.
சாம்பசிவ மணிக்குருக்கள் ஐயா என் பாடும் திறமையை பாராட்டி எனக்கு சின்னக்குயில் எனும் பட்டத்தையும் வழங்கி கௌரவித்தமை என்னால் மறக்க முடியாத நிகழ்வாகும்.
தொடர்ந்து, இலங்கையின் இசைத்துறையில் மிளிர்ந்து வரும் பல முன்னணி இசையமைப்பாளர்களான செந்தூரன், ஷமீல்,
ஸ்ரீ விஜ, தினேஷ் கனகரட்ணம், கிருஷான் மஹோவின் வெஸ்லி லக்ஷ்மன் சுதர்சன்,
ஸ்ரீ பிருந்தன், சவாஹிர் மாஸ்டர் இன்னும் பல இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்கள் பாடும் வாப்பு கிடைத்தது. பாடியும் வருகிறேன்.
என் இசைப்பயணத்தில் இன்னும் மறக்க முடியாத விடயங்களாக, தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர்களோடு இணைந்து பாடும் வாப்பு கிடைத்தது.
தமிழ் இமையமைப்பாளர்கள் மட்டுமன்றி பல சிங்கள இசையமைப்பாளர்களுடன் பணியாற்றும் வாப்பும் கிடைத்தது. விஷேடமாக, பாத்திய சந்துஷ் இசையமைப்பில் வெளியான சிங்கள வெற்றித் திரைப்படமான Dancing Stars திரைப்படத்தில் பல பாடல்கள் பாட சந்தர்ப்பம் கிட்டியது.
மற்றும் இலங்கையின் முன்னணி இசையமைப்பாளரான ரோஹண வீரசிங்கவின் இசையமைப்பில் வெளிவந்த சிங்கள வரலாற்று திரைப்படமன""குச பபா'' திரைப்படத்தில் பின்னணி குரல் கொடுக்கும் வாப்பும் கிடைத்தது.
பொதுவாக, இலங்கை இசைக்கலைஞர்களின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது எனும் ஒரு கருத்து இருந்து வருகிறது.
அந்நிலைமை சற்று மாறி, அவர்களும் நம்மவர்களின் சிறந்த படைப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் என் இசைப்பயணத்தின் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்களிப்பு கணிசமான அளவு உண்டு என்பதை இச்சந்தர்ப்பத்தில் மகிழ்வுடன் தெரிவிக்கலாம்
பாடல்கள் மட்டும் தான் பாட முடியும் என்று எண்ணியிருந்த எனக்குள் அறிவிப்புத்திறமையும் இருக்கிறது. என்பதை உலகறியச் செத பெருமையும் Shakthi TV யையே சாரும்.
அந்த வகையில், அண்மையில் மக்கள் மனம் வென்ற Shakthi Super Star- Season- 04 பிரம்மாண்ட போட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழகும் வாப்பை சக்தி நிறுவனம் எனக்கு வழங்கியது.
தற்போது சிறந்த பாடகி மற்றும் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளி என்ற அந்தஸ்தையும் மக்கள் எனக்கு பெற்று தந்திருக்கிறார்கள்.
குறிப்பிட்ட சில வருடங்களுக்குள் என் இசைப் பயணத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள் பல. என்னுடைய வளர்ச்சியின் ஆரம்பம் முதல் இன்று வரை எவ்வித குறையும், தடைகளுமின்றி என்னை வழிநடத்துபவர்கள் என் குடும்பத்தார். அவர்களை எனக்கு கொடுத்ததற்காக இறைவனுக்கு என் நன்றிகள்,
இத்தோடு நின்றுவிடாது, என் இசைப்பயணத்தில் இன்னும் என் முயற்சிகள்
தொடரும்........

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக