Recent Posts


வரும் சனிக்கிழமை சூரியன் அறிவிப்பாளர் வேணியின் நேர்காணலை எதிர்பாருங்கள்..

திங்கள், 16 ஏப்ரல், 2012

"மச்சி' எங்களோட அடுத்த ஸ்டெப்!

தினக்குரலின் சகோதர வெளியீடான வியாழன் தோறும் வெளிவரும் உதயசூரியனின் FACE BOOK பகுதியில்
கடந்த வார தொடர்ச்சி...
இந்திய பின்னணிப்பாடகர் சாருலதா மணியுடன் நேர்காணல்......

நேர்காணல்: ரோஷன்

எனது தங்கை ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துல அழகே.. அழகே..என்ற பாடலையும் பாடியிருக்காங்க. அடுத்து நாங்க இருவரும்சேர்ந்து ஐ.க.ஃ. 2020க்காக இருவரும் “மச்சி பாடலை எழுதி இசையமைத்துப் பாடியிருக்கிறோம். இது எங்களுக்கு அடுத்த ஸ்டேப்னு நினைக்கிறேன்.
இசைத்தொகுப்புகளை வெளியீட்டிருகிறீர்களா?
ஆமா நிறைய சீடிக்களை வெளியிட்டு இருக்கின்றேன். இசைப்பயணம் டீவிடிக்கள், எனது கர்நாடக சங்கீதப்பாடல்கள், தமிழ்பாடல்கள் , அண்மையில நானும் எனது தங்கையும் ““மச்சி என பல சீடீக்களை வெளியிட்டிருக்கி÷õறம்.
இதுவரையில் சினிமா பாடல்கள் எத்தனை பாடியிருக்கிறீர்கள்
200300 பாடல்கள் ,தமிழ்,கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் பாடியிருக்கிறேன்.
பாடகியான நீங்கள் யுத்தம் செய் படத்தில் நடிச்சிருக்கீங்க அந்த அனுபவம் பற்றி?
அது வந்து ரொம்ப சுவாரஷ்யமான விஷயம் நான் ஒரு பாட்டு ரெக்கோர் அங்க இயக்குநர் மிஷ்கின் வேரொரு பாட்டு ரெக்கோர் பண்ணுரதற்காக வந்திருந்தாரு அப்பொழுதான் இருவருக்கும் சந்திப்பு ஏற்பட்டது அதுக்கப்புரமா இயக்குநர் () இருந்து எனக்கு கோள் வந்துச்சு அப்ப நான் நினைச்சன் பாடதான் கூப்பிடுறாங்க என்று நினைத்தேன் அப்ப சொன்னாங்க நீங்க தான் ஒரு ரோல் பண்ணனும் என்றாங்க இயக்குநர் சொல்லியிருக்கள் நீங்க தான் அந்த ரோல் பண்ணனும் என்று சொன்னாங்க.
சோ நான் பண்ணுன ரோல் தான் டான்ஸ் டீச்சர் ரோல் பாரம்பரியமான டான்ஸ் டீச்சர் ரோல் பண்ணினேன் ஆனா எனக்கு வந்து டான்ஸ்ல ஈடுபாடலே இல்லைங்க
இது வரை எத்தனை விருதுக்கள் பெற்றிருக்கீங்க
* 2004 இல் ““யுவகலா பாரதி என்ற விருதை பாரத் கலாச்சாரம் கொடுத்தது வைரமுத்து கலந்து கொண்டு என்னை வாழ்த்தியது.
* சில்லாக்ஸ் பாட்டுக்காக ஜெயா டீவியில் இருந்து கிடைத்தது. * 2002 ஆம் ஆண்டு எம்.எஸ்.சுப்புலஷ்மி விருது கிடைத்தது. * இளம் இசைக்கலைஞர் விருது கிடைத்தது
*சிறந்த பாடகி விருது கிடைத்தது.

நீங்க சாதிக்க நினைப்பது

சாதிக்க நினைக்கிறது அப்படின்னு பாத்திங்களா நிறைய பாடனும் ,நிறை ரெக்கோர்டீங்ஸ் பண்ணனும் கர்நாடக இசை உலகத்திலும் சரி,திரை உலகத்திலும் சரி பாடி சாதிக்க வேண்டும். அப்புரம் உலக அளவுல இருக்குர பல கலைஞர்களோட பாடி உலக அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுகின்றேன்.

இலங்கை 2,3 தரம் வந்து போய் இருக்கீங்க இலங்கை அனுபவம் பற்றி சொல்ல முடியுமா?

இலங்கை மக்கள் வந்து இசையை ரசிக்கக் கூடிய மக்கள் ஞானம் மிக்கவர்கள் () கலைஞர்களை எப்படி உற்சாகப்படுத்தி ஊக்கு விக்கிறது என்ற இலங்கை மக்கள் தான் அதனால இலங்கையில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்றது எனக்கு பிடிக்கும் நல்லவொரு கரகோசத்தையும் ஆரவாரத்தையும் கொடுத்து நம்மள மேடைக்கு வரவேற்பாங்க இது எல்லாம் எனக்கு ரொம்பபிடிக்கும்.

இலங்கை மக்களுக்கு சொல்ல விரும்புவது?

கண்டிப்பாக உங்களை எல்லாம் சந்திக்கனும் என்றதுதான் எனது ஆசை இந்த காலத்துல பாத்தீங்களா இணையத்தளம் மூலமாக என்னுடைய இசையையும் ,பாடல்களையும் பார்த்து கேட்டு ஆதரவு எனக்கு தந்து கொண்டிருந்தீர்கள்னா நல்லாருக்கும்.

இனிவரும் காலங்களில் ஏதாவது திரைப்படத்தில் நடிக்க ஆசை இருக்கின்றதா?

ஆசைங்கிறது இருக்கு ஆனா நேரம் தான் இருக்கனும் அதன் உண்டாக கரேக்டான கேரெக்டர்ஸ் இருந்த கண்டிப்பாக பண்ணலாம்.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

சில்லக் புகழ் சாருலதா மணி...

தினக்குரலின் சகோதர வெளியீடான வியாழன் தோறும் வெளிவரும் உதயசூரியனின் FACE BOOK பகுதியில் இந்திய பின்னணிப்பாடகர் சாருலதா மணியுடன் நேர்காணல்......

நேர்காணல்: ரோஷன்

சினிமா மற்றும் கர்நாடக இசை இரண்டிலும் பயணம் செய்யும் பாடகிகளில் இன்று அதிகம் கலக்கிக் கொண்டிருப்பவர்
சாருலதாமணி.
வேட்டைக்காரன், வேலாயுதம், நான் அவன் இல்லை, வெளுத்துக்கட்டு ஆகிய படங்களில் சாரு பாடிய பல பாடல்கள் ரசிகர்களுக்கு பெருவிருந்து படைத்தது.
சாருலதாவுக்கு ஒரு ஹாய் சொல்லி உதயசூரியனின் பேஸ்புக் பகுதியில் இணைத்தோம்.
ஹாய்... நான் பாடகி சாருலதாமணி. எனது சொந்த ஊர் சென்னை. அண்ணா பல்கலைக்கழகத்துல மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்தேன் அதுக்கப்புறம் படிப்பிலையும் இசையிலேயும் ரிசேர்ச் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
இசைத்துறை பிரவேசம்
நான் அடிப்படையிலேயே ஒரு கர்நாடக இசைப்பாடகி. நான் வளர்ந்ததே ஒரு இசைச் சூழலில்தான். தாயார் ஹேமலதா வீணை இசைக் கலைஞர். சோ இசை ஆர்வமும் அறிமுகமும் அம்மா மூலம் கிடைச்சிடுச்சி. அப்பா கப்பல்ல இஞ்சினியர். அவர் மூலம் உலகம் முழுவதும் பயணம் செய்து எல்லா இசையையும் கேட்க வாய்ப்பு கிடைச்சது. என்னுடைய 11 ஆவது வயதுல என்னுடைய முதல் மேடை இசைக்கச்சேரியை நடத்தினேன். அதைத் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள். வெளிநாடுகளுக்கும் போய் பாடியிருக்கின்றேன்.
ஜெயா டிவியில இசைப் பயணம்னு ஒரு நிகழ்ச்சி செய்தேன். ஒரு வாரத்திற்கு ஒரு கர்நாடக இசை ராகத்தை எடுத்துக் கொண்டு அது தமிழ்த் திரைப்படப் பாடல்களில் எப்படி பயன்படுத்தப்பட்டிருக்குன்னு விளக்குறதுதான் இந்த இசைப்பயணம் நிகழ்ச்சி.
இசைப்பயணம் நிகழ்ச்சியை வெளிநாடுகளில் இருப்பவர்கள், இசைத்துறையில் இருப்பவர்கள், ரசிகர்கள் எல்லோருமே தொலைக்காட்சி மற்றும் இணையத்தளம் மூலமாக பார்த்தார்கள். இதனால கொஞ்ச நாள்லயே நான் பிரபலமாகிட்டேன். ஜெயா டி.வி.க்கு தான் நான் நன்றி சொல்லணும்.
நான் நல்ல பிரபலமாகிட்டதால பின்னணிப் பாடகியாக வாய்ப்பு ஈஸியா கிடைச்சது. இசையமைப்பாளர் விஜய் அன்டனி தான் எனக்கு முதல் வாய்ப்பு கொடுத்தார். முதல் படம் நான் அவன் இல்லை. காக்க காக்க கன்னம் காக்க என்ற பாடலை பாடினேன். முதல் பாடலே பெரிய ஹிட். அதைத் தொடர்ந்து இளைய தளபதி நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்திற்கு பாடிய என் உச்சி மண்டையில சுர்ருங்குது பாடல் மிகப்பெரிய ஹிட். அந்தப்பாடல் பற்றி நான் உங்களுக்கு சொல்லவே தேவையில்லை.
அதுக்கப்புறமா விஜய்யோட வேலாயுதம் படத்தில நான் பாடின சில்லாக்ஸ் அதைவிட பெரிய ஹிட். எனது பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகுறது இறைவன் அருள் என்று தான் நினைக்கிறேன். எத்தனையோ பாடகர், பாடகிகள் இருந்தாலும் நான் பாடுற பாடல்கள் அத்தனையும் வெற்றியடையுது. விஜய் அன்டனி என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து ஹிட் ஆகக் கூடிய பாடல்களைத் தந்தார்.
இப்ப நிறைய பாடல்கள் பாடிக் கொண்டிருக்கிறேன். அதில் ஒன்று ஹரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மாற்றான் திரைப்படத்தில் பாடியிருக்கிறேன். விரைவில் அந்தப் பாடல் வெளிவர இருக்கிறது.
வேலாயுதம் சில்லாக்ஸ் பாட்டைப்பற்றி ?
பட்டையைக் கிளப்புற மாதிரி ஒரு பாட்டு பாடனும்ங்கிறது எனது நெடு நாள் கனவு. தொடர்ந்து விஜய் படங்கள் மூலம் அந்தக் கனவு நிறைவேறினதுல ரொம்ப சந்தோஷம். விஜய் அன்டனி சில்லாக்ஸ் பாட்டை பாட கூப்பிட்டப்போ அது விஜய் படத்திற்கு தான் என்று எனக்குத் தெரியாது. ரெக்கோர்டிங் முடிஞ்சு சில வாரங்களுக்குப் பிறகு தான் எனக்கு விஷயம் தெரியும். இன்னொரு ஸ்பெஷாலிட்டி இந்தப் பாட்டு நீளமான ஆலாபனையில் ஆரம்பிக்கும். ஆங்காங்கே அராபிக் பீட் போடனும். கர்நாடக இசையில் நல்ல பயிற்சி இருக்குறவங்களால தான் இதைப் பாட முடியும்.
என்னுடைய சகோதரி ஸ்ரீமதுமிதாவும் ஒரு பாடகிதான். நாங்க 2 பேரும் இசையமைத்து எழுதிய பாடல் தான் வைதிஸ் கொலை வெறி ஏஞ்சல். இந்தப் பாட்டை youtube ல 2 இலட்சம் பேர் பார்த்திருக்காங்க.

தொடரும்....! மிகுதி நேர்காணல் எதிர்வரும் 15 ஆம் திகதி எதிர்பாருங்கள்....

வியாழன், 5 ஏப்ரல், 2012

விபத்திலிருந்து தன்னை தானே காப்பாற்றி கொள்ளும் மோட்டார் சைக்கிள்

இலகுவான பிரயாணங்களுக்கு பயன்படுத்தப்படும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு சக்கரங்களை கொண்டிருப்பதனால் அதனை செலுத்துபவர் சமநிலையை பேண வேண்டும்.அவ்வாறில்லாத சந்தர்ப்பங்களில் சரியான முறையில் அவற்றை செலுத்த முடியாது. இதனால் பலர் மோட்டார் சைக்கிள்களை நினைத்தே பார்ப்பதில்லை.

இதை உணர்ந்து கொண்ட சன் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள Lit Motors நிறுவனமானது இருசக்கரங்களை கொண்டதும் சுயமாகவே சமநிலையைப் பேணக்கூடியதுமான மோட்டார் சைக்கிள்களை உற்பத்தி செய்துள்ளது.இவை சாதாரண மோட்டார் சைக்கிள்களை போல் அல்லாது மூடிய தோற்றத்தில் அமைக்கப்பட்டுள்ளன.